ஆலியா பட்டின் புதிய அவதாரம்… ‘லவ் & வார்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்களை கவர்ந்தன!
ஆலியா பட்டின் புதிய அவதாரம்… ‘லவ் & வார்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்களை கவர்ந்தன!
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட், விக்கி கௌஷல் நடிப்பில் உருவாகி வரும் ‘லவ் & வார்’ திரைப்படம், அறிவிப்பு வெளியான நாள் முதலே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. 2027ஆம் ஆண்டின் மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றாக கருதப்படும் இப்படத்தின் ஒவ்வொரு புதிய அப்டேட்டும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வருகிறது.
படத்தின் முதல் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து, ரன்பீர் கபூரின் கதாபாத்திர தோற்றங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில், தற்போது ஆலியா பட்டின் இரண்டு புதிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.
இந்த போஸ்டர்களில் ஆலியா பட் இதுவரை ரசிகர்கள் பார்த்திராத வித்தியாசமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். குறிப்பாக, புதிய தலைமுறை கேபரே...
