Saturday, November 7
Shadow

மதுரையில் தொடங்கியது தனுஷின் ‘D56’ வேட்டை – தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் புதிய பயணம்!

மதுரையில் தொடங்கியது தனுஷின் ‘D56’ வேட்டை – தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் புதிய பயணம்!

தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படமான ‘D56’ படத்தின் படப்பிடிப்பு இன்று மதுரையில் பூஜையுடன் தொடங்கியது. ‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் கவனம் பெற்ற எழுத்தாளர்–இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இப்படத்தை இயக்குகிறார்.

“பாரி வேட்டைக்கு பந்தக்கால் நட்டாச்சு!” என்ற வித்தியாசமான அறிவிப்புடன் படக்குழு படப்பிடிப்பு தொடங்கியுள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் படத்தின் கதைக்களம் மற்றும் தனுஷின் கதாபாத்திரம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது.

‘D56’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் நடிக்கிறார். மேலும் வடிவேலு, எஸ்.ஜே. சூர்யா, விஜய் பி. குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முன்னணி நடிகர்களும் இளம் திறமைகளும் இணைந்துள்ள இந்தக் கூட்டணி படத்தின் மீதான கவனத்தை அதிகரித்துள்ளது.

மதுரையில் நடைபெற்ற பூஜையைத் தொடர்ந்து படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. மதுரையை மையமாகக் கொண்டு உருவாகும் காட்சிகள் படத்தின் உலகத்தையும் கதையின் பின்னணியையும் அறிமுகப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட உள்ளன.

படத்தின் இசையை இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் கவனிக்கிறார். தனுஷ் நடிக்கும் ‘ஓம்’ திரைப்படத்தைத் தொடர்ந்து, தனுஷ்–சாய் அபயங்கர் இணையும் இரண்டாவது படமாக ‘D56’ அமைந்துள்ளது. இதனால் படத்தின் இசைக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ், ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் மற்றும் ப்ரிமார்க் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன. நாக வம்சி, சாய் சௌஜன்யா மற்றும் எஸ். ஹரிதா லிங்கசாமி ஆகியோர் தயாரிப்பாளர்களாக உள்ளனர்.

தனுஷ் நடிப்பில் ‘வாத்தி’ படத்தைத் தமிழிலும், ‘சார்’ படத்தைத் தெலுங்கிலும் தயாரித்த சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ்–சாய் சௌஜன்யா கூட்டணி, தற்போது ‘D56’ மூலம் மீண்டும் தனுஷுடன் இணைந்துள்ளது.

சமீபத்தில் வெளியான ‘D56’ அறிவிப்பு போஸ்டரும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. ஏராளமான மணிகளால் அலங்கரிக்கப்பட்ட பிரம்மாண்டமான பாரம்பரியக் கதவு, அதன் முன்பாக இடம்பெற்றிருந்த தனுஷின் கதாபாத்திர தோற்றம் ஆகியவை படத்தின் பின்னணி குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பின. அதிலும் குறிப்பாக “பாரி வேட்டைக்கு பந்தக்கால் நட்டாச்சு” என்ற வாசகம் படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்தது.

தனுஷ், வடிவேலு, எஸ்.ஜே. சூர்யா என வலுவான நட்சத்திரப் பட்டாளம், தமிழரசன் பச்சமுத்துவின் இயக்கம் மற்றும் சாய் அபயங்கரின் இசை என பல எதிர்பார்ப்புகளுடன் ‘D56’ உருவாகி வருகிறது.

மதுரையில் முதல் கட்டப் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில், படத்தின் அடுத்தகட்ட பணிகள் தொடர்ந்து நடைபெற உள்ளன. மேலும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘D56’ திரைப்படம் 2027-ம் ஆண்டு கோடை காலத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

Dhanush’s ‘D56’ Begins Its Journey in Madurai – Filming Kicks Off with a Pooja!

National Award-winning actor Dhanush’s much-awaited upcoming Tamil film ‘D56’ has officially gone on floors today in Madurai with a traditional pooja ceremony. The film is directed by writer-director Tamilarasan Pachamuthu, who made a strong impression with his acclaimed film Lubber Pandhu.

The makers announced the commencement of the shoot with the intriguing tagline, “The foundation has been laid for the hunt for Pari!” The unique announcement has further heightened curiosity among fans and the film industry about the story and the world of ‘D56’.

Dhanush plays the lead in the film, with Preethi Mukundhan as the female lead. Veteran actors Vadivelu and S. J. Suryah play important roles, while Vijay P. Kumar and several other actors are also part of the cast. The combination of established performers and emerging talents has added to the anticipation surrounding the project.

The first schedule of the film began in Madurai following the pooja ceremony held today. With Madurai serving as the starting point, the team is set to capture the story and visual world envisioned by director Tamilarasan Pachamuthu.

Another major highlight of ‘D56’ is its music, which is composed by young music director Sai Abhyankkar. Following Om, the film marks the second collaboration between Dhanush and Sai Abhyankkar, raising expectations for the film’s musical album as well.

Sithara Entertainments, Srikara Studios and Primark Productions are jointly producing the film. Naga Vamsi, Sai Soujanya and S. Haritha Lingasamy are serving as producers.

Sithara Entertainments and Sai Soujanya have previously collaborated with Dhanush on Vaathi in Tamil and Sir in Telugu. The production house is now reuniting with the actor for ‘D56’.

The recently released announcement poster for ‘D56’ had already generated considerable buzz among fans. Featuring a grand traditional doorway decorated with numerous bells and Dhanush’s character standing in front of it, the poster sparked curiosity about the film’s storyline and setting. The intriguing line “The foundation has been laid for the hunt for Pari!” further added to the mystery surrounding the project.

With a powerful combination of Dhanush, Vadivelu and S. J. Suryah, along with Tamilarasan Pachamuthu’s direction and Sai Abhyankkar’s music, ‘D56’ has already created significant anticipation.

With the first schedule now underway in Madurai, the team is gearing up to take audiences into the distinctive world of ‘D56’. Further announcements regarding the remaining cast and technical crew are expected to be made soon.

‘D56’ is slated for a theatrical release in Summer 2027.