
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவான ‘அமரன்’, IFFI 2025 இந்தியன் பனோரமா பிரிவின் தொடக்க திரைப்படமாக தேர்வு
சென்னை, நவம்பர் 21, 2025:
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பாராட்டுபெற்ற ‘அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI 2025) இந்தியன் பனோரமா பிரிவின் தொடக்க திரைப்படமாக தேர்வாகியுள்ளது.
இந்த முக்கியமான அங்கீகாரம், இந்திய சினிமாவின் சிறந்த படைப்புகளை கொண்டாடும் இந்தியன் பனோரமா பிரிவில் ‘அமரன்’ காட்சியைத் தொடங்கவுள்ளதை உறுதி செய்கிறது.
மேலும், ‘அமரன்’ திரைப்படம் சர்வதேச போட்டிப் பிரிவில் இடம்பெறும் கோல்டன் பீகாக் விருதுக்கான பரிந்துரையையும் பெற்றுள்ளது. உலகளாவிய தரத்தில் மதிப்பிடப்படும் இந்தப் பிரிவில் சேர்க்கப்பட்ட சில இந்திய படங்களில் ஒன்றாக ‘அமரன்’ இருப்பது, அதன் கலைத் திறன் மற்றும் சர்வதேச வரவேற்பை பிரதிபலிக்கிறது.
திரைப்படத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், தயாரிப்பாளர்கள் கமல் ஹாசன், ஆர். மகேந்திரன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, நடிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் விழாவில் கலந்து கொள்ளவுள்ளனர்.
படக்குழுவினர் இன்று (நவம்பர் 21, 2025) நடைபெறும் திரையிடல் நிகழ்வில் பங்கேற்க கோவாவுக்கு பயணமாகியுள்ளனர்.
மேஜர் முகுந்த் வரதராஜன் (அசோக சக்ரா) அவர்களின் உண்மைக் கதையை ஆதாரமாகக் கொண்டு உருவான ‘அமரன்’, தேசபக்தி, தியாகம் மற்றும் வீரத்தை உருக்கமாகக் காட்சிப்படுத்தி பார்வையாளர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேஜரின் அபாரமான சேவையைப் போற்றும் வகையில், அவரது வாழ்வின் முக்கிய தருணங்களை ஆழமான சினிமா மொழியில் படம்பிடித்திருப்பது இந்த திரைப்படத்தின் சிறப்பாகும்.
IFFI 2025–இன் தொடக்க திரைப்படமாக ‘அமரன்’ தேர்வு செய்யப்பட்டிருப்பது, அதன் படைப்புத் திறன், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் உணர்ச்சி பரவசத்தை வெளிப்படுத்தும் குறிப்பிடத்தக்க அங்கீகாரமாகும். இது திரைப்படத்தின் வெற்றியை மட்டுமல்ல, இந்திய ஆயுதப்படைகளின் வீரத்தையும், இந்திய கதை சொல்லலின் வலிமையையும் கொண்டாடும் நிகழ்வாகவும் திகழ்கிறது.
இந்திய சினிமாவின் முக்கிய மேடையில் கிடைத்த இந்த பெருமையுடன், ‘அமரன்’ தேசிய வீரருக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறப்பான சினிமா படைப்பாக தனது பயணத்தைத் தொடர்கிறது.

AMARAN, PRODUCED BY RAAJKAMAL FILMS INTERNATIONAL & TURMERIC MEDIA, SELECTED AS OPENING FILM OF THE INDIAN PANORAMA AT IFFI 2025
Chennai, November 21, 2025
Amaran, the widely acclaimed film produced by RaajKamal Films International and Turmeric Media, has been officially selected as the Opening Feature Film in the Indian Panorama section at the 56th International Film Festival of India (IFFI) in Goa.
This prestigious selection marks a proud milestone for the entire Amaran team, as the film inaugurates the Indian Panorama showcase – one of the most celebrated platforms for India’s finest cinematic achievements.
Adding to this distinction, Amaran has also been nominated for the Golden Peacock Award under the International Competition category. It is one of the few Indian films to earn a place in this globally recognised segment, underscoring its artistic excellence and international appeal.
Representing the film at IFFI 2025 will be Producers Kamal Haasan and R. Mahendran, Director Rajkumar Periasamy, and lead actors Sivakarthikeyan and Sai Pallavi. The team will travel to Goa to participate in the festival’s screening ceremony on 21st November 2025.
Inspired by the extraordinary real-life story of Major Mukund Varadarajan, Ashoka Chakra, Amaran has moved audiences across the country with its powerful portrayal of courage, sacrifice, and unwavering patriotism. The film honours Major Varadarajan’s supreme service to the nation and brings his legacy to the forefront through a deeply human and cinematic narrative.
The selection of Amaran as the Opening Film at IFFI 2025 stands as a testament to its creative vision, technical brilliance, and emotional resonance. It is a celebration not only of the film’s craft but also of the valour of the Indian Armed Forces and the enduring spirit of Indian storytelling.
With this recognition at one of India’s grandest cinematic stages, Amaran continues its inspiring journey, both as a work of cinema and as a tribute to a national hero.
