Tuesday, October 6
Shadow

அம்ரிதா ஐயர் அறிமுகப்படுத்திய ‘சோழா கிங்ஸ் தமிழ்நாடு’ ஜெர்சி!

அம்ரிதா ஐயர் அறிமுகப்படுத்திய ‘சோழா கிங்ஸ் தமிழ்நாடு’ ஜெர்சி!

தேசிய களத்தில் தமிழ்நாட்டின் கிரிக்கெட் திறமைக்கு புதிய மேடை

சென்னை, செப்டம்பர் 26, 2026:

தமிழ்நாட்டின் கிரிக்கெட் ஆர்வத்துக்கு தேசிய அளவில் புதிய அடையாளம் கொடுக்கும் முயற்சியாக, இந்தியன் சாப்ட்பால் கிரிக்கெட் லீக் (ISCL) தொடரில் களமிறங்கும் ‘சோழா கிங்ஸ் தமிழ்நாடு’ அணியின் அதிகாரப்பூர்வ ஜெர்சி சென்னையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது.

சென்னை எழும்பூரில் உள்ள ராடிசன் ப்ளூ ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நடிகையும் அணியின் பிராண்ட் தூதருமான அம்ரிதா ஐயர், சோழா கிங்ஸ் தமிழ்நாடு அணியின் அதிகாரப்பூர்வ ஜெர்சியை அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் ISCL சீசன் 2 போட்டியில் தமிழ்நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் அணியின் தேசியப் பயணம் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.

“தமிழ்நாட்டின் கிரிக்கெட் ஆர்வத்தை தேசிய அளவில் கொண்டு செல்வதில் பெருமை” – அம்ரிதா ஐயர்

ஜெர்சி அறிமுக நிகழ்ச்சியில் பேசிய அம்ரிதா ஐயர், தமிழ்நாட்டில் கிரிக்கெட்டுக்கு இருக்கும் வரவேற்பை குறிப்பிட்டு, சோழா கிங்ஸ் தமிழ்நாடு அணியுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.

“தமிழ்நாட்டில் கிரிக்கெட்டுக்கு எப்போதுமே மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. அந்த ஆர்வத்தையும், திறமையையும் தேசிய அளவில் பிரதிநிதித்துவப்படுத்தும் அணியின் பயணத்தில் தொடக்கத்திலிருந்தே ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. சோழா கிங்ஸ் தமிழ்நாடு அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்,” என்றார் அம்ரிதா ஐயர்.

32 மாநில அணிகளுடன் தேசிய போட்டி

ISCL சீசன் 2 – 2026 தொடரில் பங்கேற்கும் 32 மாநில அணிகளில் ஒன்றாக சோழா கிங்ஸ் தமிழ்நாடு களமிறங்குகிறது.

தமிழ்நாட்டில் உள்ள திறமையான கிரிக்கெட் வீரர்களுக்கு தேசிய அளவில் தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பதே அணியின் முக்கிய நோக்கமாகும். நகரங்களை மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து உருவாகும் வீரர்களுக்கும் இந்தப் போட்டி ஒரு புதிய மேடையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடித்தட்டு வீரர்களை தேசிய தளத்துக்கு கொண்டு வரும் ISCL

இந்தியன் சாப்ட்பால் கிரிக்கெட் லீக், இந்தியா முழுவதும் உள்ள வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு போட்டி அனுபவத்தையும் தேசிய அளவிலான வாய்ப்புகளையும் வழங்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது.

2024ஆம் ஆண்டு கர்நாடகா சாப்ட்பால் பிரீமியர் லீக் (KSPL) ஆக தொடங்கிய இந்த முயற்சி, 2025ஆம் ஆண்டு மாநில அணிகள் பங்கேற்கும் தேசிய அளவிலான தொடராக விரிவடைந்தது. தற்போது நடைபெறும் இரண்டாவது சீசனில் 32 மாநில அணிகள் பங்கேற்கின்றன.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களான சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் ISCL-ன் பிராண்ட் தூதர்களாக இணைந்துள்ளனர்.

ISCL நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் கங்காதர் ராஜு கூறுகையில், “திறமை என்பது ஒருவர் வசிக்கும் இடத்தாலோ, அவருக்கு கிடைக்கும் வாய்ப்புகளாலோ கட்டுப்படுத்தப்படக் கூடாது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் வீரர்களுக்கு தேசிய அளவில் தங்களது திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பை உருவாக்குவதே ISCL-ன் நோக்கம். தமிழ்நாட்டின் கிரிக்கெட் ஆர்வத்தையும் திறமையையும் கருத்தில் கொண்டு சோழா கிங்ஸ் தமிழ்நாடு அணியின் பங்கேற்பு எங்களுக்கு முக்கியமானது,” என்றார்.

“தமிழக வீரர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குவோம்” – கிரிஷ் கவுடா

சோழா கிங்ஸ் தமிழ்நாடு அணியின் உரிமையாளர் கிரிஷ் கவுடா பேசுகையில், “தமிழ்நாடு கிரிக்கெட் மீது எப்போதுமே தனிப்பட்ட ஆர்வம் கொண்ட மாநிலமாக இருந்து வருகிறது. அந்த ஆர்வத்தை தேசிய அளவிலான ஒரு விளையாட்டு தளத்துடன் இணைக்கும் முயற்சிதான் சோழா கிங்ஸ் தமிழ்நாடு. தமிழக வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என்றார்.

கர்நாடக அரசின் முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர் பி. ஹெச். அனில் குமார் IAS (ஓய்வு), தமிழ்நாடு போன்ற வலுவான விளையாட்டு கலாச்சாரம் கொண்ட மாநிலங்களின் அணிகள் பங்கேற்பது ISCL தொடருக்கும், அந்தந்த மாநிலங்களுக்கும் இடையே நல்ல தொடர்பை உருவாக்கும் என தெரிவித்தார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் ராமசாமி வெங்கட்ராமனின் பேரன் ஸ்ரீதர் ராமசாமியும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தமிழ்நாட்டு மக்களின் கிரிக்கெட் ஆர்வத்தை தேசிய விளையாட்டு தளத்துடன் இணைக்கும் முயற்சியாக சோழா கிங்ஸ் தமிழ்நாட்டின் பயணம் அமையும் என தெரிவித்தார்.

தமிழகத்தின் அடையாளத்தை பிரதிபலிக்கும் ஜெர்சி

சோழா கிங்ஸ் தமிழ்நாடு அணிக்காக வடிவமைக்கப்பட்டுள்ள புதிய ஜெர்சி, தமிழகத்தின் அடையாளத்தையும், அணியின் வீரர்களின் உற்சாகத்தையும், ரசிகர்களின் ஆதரவையும் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஜெர்சி அறிமுகத்துடன் தொடங்கியுள்ள சோழா கிங்ஸ் தமிழ்நாட்டின் பயணம், ISCL சீசன் 2 போட்டியில் தமிழகத்தை தேசிய அளவில் பிரதிநிதித்துவப்படுத்துவதுடன், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கிரிக்கெட் திறமைகளுக்கு புதிய வாய்ப்புகளையும் உருவாக்கும் முயற்சியாக அமைந்துள்ளது.

சோழா கிங்ஸ் தமிழ்நாடு – முக்கிய தகவல்கள்

  • அணி: சோழா கிங்ஸ் தமிழ்நாடு
  • லீக்: இந்தியன் சாப்ட்பால் கிரிக்கெட் லீக் (ISCL)
  • சீசன்: ISCL சீசன் 2 – 2026
  • பிரதிநிதித்துவம்: தமிழ்நாடு
  • உரிமையாளர்: கிரிஷ் கவுடா
  • பிராண்ட் தூதர்: அம்ரிதா ஐயர்
  • ஜெர்சி அறிமுகம்: 26 செப்டம்பர் 2026
  • நிகழ்வு நடைபெற்ற இடம்: ராடிசன் ப்ளூ, எழும்பூர், சென்னை

Amritha Aiyer Unveils Official Jersey of Chola Kings Tamil Nadu

Tamil Nadu Team Set to Represent the State on the National Stage of ISCL

Chennai, September 26, 2026:

Taking Tamil Nadu’s passion for cricket to a national sporting platform, Chola Kings Tamil Nadu, the team representing the state in the Indian Softball Cricket League (ISCL), unveiled its official jersey at a special event held in Chennai.

Actress Amritha Aiyer, who serves as the brand ambassador of Chola Kings Tamil Nadu, was the chief guest at the event and officially unveiled the team’s jersey, marking the beginning of its journey on the national stage.

“Proud to be part of a team representing Tamil Nadu’s cricket passion nationally” – Amritha Aiyer

Speaking at the jersey launch, Amritha Aiyer expressed her happiness at being associated with the team from the beginning of its new journey.

“It’s wonderful to be part of Chola Kings Tamil Nadu right from the beginning of this new journey. Cricket has always enjoyed tremendous love and enthusiasm in Tamil Nadu. I am proud and happy to be associated with a team that represents this passion at the national level. I wish Chola Kings Tamil Nadu all the very best,” she said.

Chola Kings Tamil Nadu to Compete on the National Stage

Chola Kings Tamil Nadu is one of the 32 state teams participating in the Indian Softball Cricket League.

Representing Tamil Nadu in ISCL Season 2 – 2026, the team will compete against teams from different states across the country.

The team has been formed with the objective of showcasing Tamil Nadu’s deep-rooted passion for cricket and providing talented players from the state with an opportunity to display their skills on a national platform.

ISCL: A National Platform for Grassroots Talent

The Indian Softball Cricket League (ISCL) is a state-based national softball cricket league aimed at creating opportunities for grassroots and emerging cricket players across India.

With 32 state teams participating, the league seeks to create a structured competitive platform for talented players not only from urban centres but also from rural and remote parts of the country.

The initiative began in 2024 as the Karnataka Softball Premier League (KSPL) and expanded in 2025 into a national-level competition featuring state teams.

The second season of ISCL is focused on further expanding the league’s teams, player opportunities and sporting ecosystem.

Former Indian cricketers Suresh Raina and Harbhajan Singh have joined ISCL as its brand ambassadors.

ISCL Founder and Chairman Dr. Gangadhar Raju said:

“ISCL was created with the belief that talent should not be limited by geography or access to opportunities. Through 32 teams, we are building a national sporting platform for grassroots talent. Considering Tamil Nadu’s tremendous passion for cricket, the addition of Chola Kings Tamil Nadu is particularly significant for us.”

“We Want to Create New Opportunities for Tamil Nadu Players” – Girish Gowda

Chola Kings Tamil Nadu owner Girish Gowda said:

“Tamil Nadu has always been a state with immense passion for cricket. Chola Kings Tamil Nadu is our effort to take that passion to a national sporting platform. We are delighted to represent Tamil Nadu and create opportunities for players from the state to showcase their talent.”

P. H. Anil Kumar IAS (Retd.), former Additional Chief Secretary of the Government of Karnataka, said the participation of regional teams such as Chola Kings Tamil Nadu would play an important role in strengthening the connection between the league and communities across India.

He added that Tamil Nadu has a strong sporting culture and that it was encouraging to see the state’s passion become part of ISCL’s national platform.

Sridhar Ramasamy, grandson of former President of India R. Venkataraman, also attended the event. He noted that cricket has always held a special place in the hearts of people in Tamil Nadu and described the Chola Kings’ journey as an opportunity to connect that passion with a national sporting platform.

Jersey Reflects the Identity of Tamil Nadu

The official Chola Kings Tamil Nadu jersey has been designed to reflect the identity of Tamil Nadu, the spirit of the team’s players and the enthusiasm of its supporters.

With the jersey launch, Chola Kings Tamil Nadu has officially embarked on its journey in ISCL Season 2, aiming to represent Tamil Nadu on the national stage while creating new opportunities for talented players from across the state.

Chola Kings Tamil Nadu – Key Details

  • Team: Chola Kings Tamil Nadu
  • League: Indian Softball Cricket League (ISCL)
  • Season: ISCL Season 2 – 2026
  • Representing: Tamil Nadu
  • Owner: Girish Gowda
  • Brand Ambassador: Amritha Aiyer
  • Jersey Launch: September 26, 2026
  • Venue: Radisson Blu, Egmore, Chennai