Monday, October 3
Shadow

படங்களில் வரும் விலங்குகள் உண்மையா இல்லை கிராபிக்ஸ் என்று பார்ப்பது தான் சௌந்தர்யா வேலை

சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்கள் அனிமேஷன் மற்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் ஆகியவற்றில் மிக பெரிய அளவில் நிபுணத்துவம் பெற்றவர் என்பது நாம் அறிந்த ஒன்றே. இவரை தற்போது Animal Welfare Board எனும் அமைப்பு தங்களது தூதுவராக நியமித்துள்ளது. இதை பற்றிய தகவல் வெளிவந்தது முதல் அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்களின் வேலை என்னவென்றால் திரைப்படங்களில் மிருகங்களை வைத்து காட்சிகளை படமாக்கியுள்ளார்களா அல்லது அது கிராபிக்ஸ் தானா என்பதை உறுதி செய்து ஒப்புதல் வழங்குவது தான்.

சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்களுக்கு அனிமேஷன் மற்றும் கிராபிக்ஸ் துறையில் நல்ல நிபுணத்துவம் , கோச்சடையான் என்னும் அனிமேஷன் படத்தை இயக்கிய அனுபவம் உள்ளதால் அவரை Animal welfare Board இப்பணியில் அமர்த்தியுள்ளது.

Leave a Reply