‘குற்றம் கடிதல்’ புகழ் பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா நடித்துவரும் படம் ‘மகளிர் மட்டும்’. இந்த படத்தில் ஜோதிகாவுடன் ஊர்வசி, பானுப்ரியா, சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் முக்கிய கதாபத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியானது. “பெண்கள் லட்சக்கணக்கில் தோசை சுட்டுக் கொடுக்கிறார்கள். ஆண்கள் என்றாவது பெண்களுக்கு தோசை சுட்டதுண்டா” என்கிற கான்சப்ட்டில் வெளியான இந்த டீசர் நல்ல ஹிட்.
மேலும் படக்குழு ப்ரொமோஷனுக்காக ஆண்கள் பெண்களுக்கு தோசை சுட்டு, அதை டிவிட்டரில் வெளியிட கேட்டுக்கொண்டது. முதலாவதாக சூர்யா, ஜோவுக்கு தோசை சுட்டு கொடுத்தார். அதைதொடர்ந்து சில கோலிவுட் பிரபலங்களும் இதை செய்தார்கள்.
நடிகர் ஜெய்யும் அஞ்சலிக்கு தோசை சுட்டுக் கொடுத்துள்ளார். இதை பார்த்த பலரும் இவர்கள் லிவிங் டுகெதர் முறைப்படி வாழ்ந்து வருவதாக கூறிவருகிறார்கள்.