
தெலுங்கு மற்றும் தமிழில் திரை உலகில் அதிக சம்பளம் பெறும் முன்னணி நடிகையான அனுஷ்கா பிரபல தெலுங்கு தயாரிப்பாளரை காதலிப்பதாகவும், விரைவில் இவர்களது திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் டோலிவுட் வட்டாரத்தில் புகைய துவங்கியுள்ளது.
பாகுபலி-2, பஹ்மதி என பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வரும் அனுஷ்கா இப்படங்களை முடித்த பின்னர் திருமணம் செய்து கொள்ள தயாராகிவருகின்றார்.
பல தெலுங்கு முன்னணி நடிகர்களுடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய அனுஷ்கா தற்போது மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் குடும்பத்தைச் சேர்ந்த இளம் தயாரிப்பாளர் ஒருவருடன் காதலில் விழுந்துள்ளதாக கூறப்படுகின்றது.
அதிலும் அத்தயாரிப்பாளர் ஏற்கனவே திருமணமானவர் என்பது மேலும் புகைச்சலை கிளப்பியுள்ளது.
சமூக வலைதளங்களில் தற்போது ஹாட் டாப்பிக்காக மாறிவிட்ட அனுஷ்காவின் காதல் விவகாரத்திற்கு அவரது தரப்பிலிருந்து இதுவரை மறுப்பேதும் வரவில்லை.