Sunday, October 18
Shadow

இந்த வார ரேஸில் இருந்த விலகிய அதர்வாவின் 100 படம் காரணம் என்ன

சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா, ஹன்சிகா மற்றும் பலர் நடித்துள்ள 100 படம் இன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் எழுந்த சிக்கலை அடுத்து படம் இன்று வெளியாகவில்லை. இப்படத்தைத் தயாரித்துள்ள ஆரா சினிமாஸ் நிறுவனம் மீது பலூன் படத்தைத் தயாரித்த நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. பின்னர் நீதிமன்றம் 100 படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்தது.
இந்நிலையில் சிக்கல்கள் தீர்வு செய்யப்பட்டு படம் இன்று வெளியாகும் என்று விளம்பரப்படுத்தி வந்தார்கள். நேற்று கூட இப்படத்தின் பத்திரிகையாளர் காட்சியையும் நடத்தினார்கள். ஆனால், சிக்கல் தீராத நிலையில் படத்தை திட்டமிட்டபடி இன்று வெளியிட முடியவில்லை.
அதுகுறித்து படத்தின் இயக்குனர் சாம் ஆண்டன் நேற்று இரவு கடுப்புடன் ஒரு டுவிட்டர் பதிவைப் போட்டுள்ளார். “100 படத்திற்காக அனைவரும் கொடுத்த அற்புதமான விமர்சனங்களுக்கு நன்றி. இந்தப் படத்திற்காக எங்களது குழுவினர் இதயத்தையும், ஆன்மாவையும் கொடுத்து உழைத்தனர். ஆனால், எங்களது படத்தை சரியான நேரத்தில் வெளியிட எங்களால் முடியாததற்கு மன்னிக்கவும். நாளை 100 படம் வெளியாகாது. என் வேலை முடிந்தது, அடுத்து கூர்கா படத்திற்காகப் போகிறேன்,” எனக் கூறியுள்ளார்.
ஆரா சினிமாஸ் கடைசியாக வெளியிட்ட படங்களான சைத்தான், டோரா, பண்டிகை, பலூன் ஆகிய படங்கள் அவர்களது பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியதை அடுத்து அந்நிறுவனம் நிதிச் சுமையில் சிக்கித் தவிப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.