Monday, June 22
Shadow

Tag: #100 #atharva #hansika #samanton

‘100’ படத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பால் திரையரங்குகள் மற்றும் காட்சிகள் அதிகரிப்பு

‘100’ படத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பால் திரையரங்குகள் மற்றும் காட்சிகள் அதிகரிப்பு

Latest News, Top Highlights
நல்ல கதையம்சம் கொண்ட படங்களுக்கு எப்போதுமே மிகப்பெரிய வெற்றியை பெறக்கூடிய சாத்தியங்கள் உண்டு. இது மாதிரியான நிகழ்வுகள் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் அதர்வா முரளி - ஹன்சிகா மோத்வானி நடித்த "100" பாக்ஸ் ஆபிஸில் நம்பமுடியாத ஒரு மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. விமர்சகர்கள் மற்றும் பொதுமக்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்துக்கு, தற்போது திரையரங்குகள் மற்றும் காட்சிகள் அதிகரித்துள்ளன. இந்த வெற்றியால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும் ஆரா சினிமாஸ் காவியா வேணுகோபால் கூறும்போது, "எங்களுக்கு ஒரு மிகப்பெரிய ஆச்சரியம்! எல்லா இடங்களிலும் இருந்து பார்வையாளர்களிடமிருந்து கிடைக்கும் அபரிமிதமான வரவேற்பை கண்டு நாங்கள் முழுமையாக பிரமித்து கொண்டிருக்கிறோம். விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் என இரு தரப்பிலும் இருந்து தொலைபேசியில் அழைத்து படத்துக்கு கிட...
இந்த வார ரேஸில் இருந்த விலகிய அதர்வாவின் 100 படம்  காரணம் என்ன

இந்த வார ரேஸில் இருந்த விலகிய அதர்வாவின் 100 படம் காரணம் என்ன

Latest News, Top Highlights
சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா, ஹன்சிகா மற்றும் பலர் நடித்துள்ள 100 படம் இன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் எழுந்த சிக்கலை அடுத்து படம் இன்று வெளியாகவில்லை. இப்படத்தைத் தயாரித்துள்ள ஆரா சினிமாஸ் நிறுவனம் மீது பலூன் படத்தைத் தயாரித்த நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. பின்னர் நீதிமன்றம் 100 படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்தது. இந்நிலையில் சிக்கல்கள் தீர்வு செய்யப்பட்டு படம் இன்று வெளியாகும் என்று விளம்பரப்படுத்தி வந்தார்கள். நேற்று கூட இப்படத்தின் பத்திரிகையாளர் காட்சியையும் நடத்தினார்கள். ஆனால், சிக்கல் தீராத நிலையில் படத்தை திட்டமிட்டபடி இன்று வெளியிட முடியவில்லை. அதுகுறித்து படத்தின் இயக்குனர் சாம் ஆண்டன் நேற்று இரவு கடுப்புடன் ஒரு டுவிட்டர் பதிவைப் போட்டுள்ளார். “100 படத்திற்காக அனைவரும் கொடுத்த அற்புதமான விமர்சனங்களுக்கு நன்றி. இந்தப் படத்திற்காக எங்களது குழுவினர்...
“100” படத்தில்  சாம் C.S யின் பின்னணி இசை ரசிகர்களை மிரட்டும்

“100” படத்தில் சாம் C.S யின் பின்னணி இசை ரசிகர்களை மிரட்டும்

Latest News, Top Highlights
தனது ஒவ்வொரு இசைத்தொகுப்பிலும் புதுமையான மற்றும் புதிய விஷயங்களை வைத்து நம்மை ஆச்சர்யப்படுத்தி, தனது திறமையை மற்றும் தனித்துவத்தை தொடர்ந்து நிரூபித்து வருகிறார் இசையமைப்பாளர் சாம் சிஎஸ். அவரது பாடல்கள் மற்றும் பின்னணி இசை என இரண்டுக்குமே ரசிகர்களிடம் இருந்து சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறார். குறிப்பாக, அதிரடியான பின்னணி இசையில் குறிப்பிடத்தகுந்த ஒரு இசையமைப்பாளராக மாறியுள்ளார். சமீபத்தில் அதர்வா முரளி, ஹன்சிகா மோத்வானி நடிப்பில் உருவாகியுள்ள "100" படத்தின் டிரைலரில் அவரின் இசைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.   இசையமைப்பாளர் சாம் சிஎஸ் கூறும்போது, "என் இசையை பற்றி பலர் சொல்லும் நல்ல கருத்துக்களை கேட்க எப்போதுமே நன்றாக இருக்கும், குறிப்பாக எனது பின்னணி இசையை பற்றி. ஆனால் உண்மையில், மிகச்சிறந்த இசையை வழங்கும் அளவுக்கு கதையில் முக்கியத்துவம் இருக்கும் படங்கள் எனக்கு அமைவது மகிழ்ச்சி அள...
அதர்வா மற்றும் ஹன்சிகா நடிக்கும் 100 படம் மே 9ம் தேதி ரிலீஸ்

அதர்வா மற்றும் ஹன்சிகா நடிக்கும் 100 படம் மே 9ம் தேதி ரிலீஸ்

Latest News, Top Highlights
ஆரா சினிமாஸ் சார்பில் காவியா வேணுகோபால் தயாரிக்க, அதர்வா, ஹன்சிகா மோத்வானி நடிப்பில், சாம் ஆண்டன் இயக்கியிருக்கும் படம் '100'. அதர்வா முதன்முறையாக காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார். மே 9ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் இந்த படத்தை குரு ஸ்ரீ மிஷ்ரி எண்டர்பிரைசஸ் சார்பில் தமிழகம் முழுக்க வெளியிடுகிறார் சிஎஸ் பதம்சந்த் ஜெயின். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. சாம் ஆண்டன் உடன் நான் இணையும் மூன்றாவது படம் 100. முந்தைய இரண்டு படங்களும் காமெடி படங்கள். இந்த படம் கதை எழுதப்படும் போதே மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது, சீட்டின் நுனிக்கு வரவைக்கும் ஒரு திரில்லர் படம். திரைக்கதை மிகச்சிறப்பாக இருக்கும் என்றார் ஒளிப்பதிவாளர் கிருஷ்ணன் வசந்த். விக்ரம் வேதா, அடங்க மறு, 100, அயோக்யா என அடுத்தடுத்து போலீஸ் படங்களாக நான் இசைய...
அதர்வாவுடன் ஜோடி சேரும் ஹன்சிகா படத்தின் தலைப்பு “100”

அதர்வாவுடன் ஜோடி சேரும் ஹன்சிகா படத்தின் தலைப்பு “100”

Latest News, Top Highlights
2015-ம் ஆண்டு ரிலீஸான ‘டார்லிங்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சாம் ஆண்டன். ஜீ.வி.பிரகாஷ், நிக்கி கல்ராணி, கருணாஸ், பால சரவணன், சிருஷ்டி டாங்கே, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்தனர். ஹாரர் காமெடிப் படமான இது, மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து மறுபடியும் ஜீ.வி.பிரகாஷை வைத்து ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ என்ற படத்தை இயக்கினார் சாம் ஆண்டன். ‘கயல்’ ஆனந்தி, சரவணன், கருணாஸ், விடிவி கணேஷ், சார்லி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், நிரோஷா உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்தனர். ஆனால், இது சரியாகப் போகவில்லை. இந்நிலையில், அதர்வாவை வைத்து தன்னுடைய மூன்றாவது படத்தை இயக்கி வருகிறார் சாம் ஆண்டன். இந்தப் படத்தில் அதர்வா ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். யோகிபாபு, ‘எரும சாணி’ ஹரிஜா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ஆரா சினிமாஸ் தயாரிக்கும் ...