 
            ஆர்யன் – திரைவிமர்சனம். (Rank 4/5)
            ஆர்யன் – சமூகச் செய்தியுடன் மிளிரும் சிறந்த குற்றத் திரில்லர்!
பிரவீன் கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் நாயகனாக நடித்துள்ள ‘ஆர்யன்’ திரைப்படம், சுவாரஸ்யமும் சிந்திக்க வைக்கும் கதையுமாக திரையுலகில் பேசப்படும் படைப்பாக உருவாகியுள்ளது.
திரைப்படம் தொடங்கும் தருணமே பரபரப்பை கிளப்புகிறது — ஒரு டிவி சேனலின் நேரடி ஒளிபரப்பின்போது செல்வராகவன் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொள்வது போல ஆச்சரியமான காட்சி. அதற்குப் பிறகு வெளியாகும் அவரது வீடியோவில், அடுத்ததாக யாரை “சொல்லப்போகிறேன்” என்று கூறும் செல்வராகவனின் உரை, கதையை இன்னும் தீவிரப்படுத்துகிறது. அதன்படி தொடர்ச்சியாக நிகழும் கொலைகள், அதை ஊடகங்கள் வழியாக அறிவிக்கும் வில்லனின் உளவியல் பின்புலம் — இவை அனைத்தையும் ஆராய்வது தான் கதையின் மையம்.
இந்த தொடர் கொலைகளின் புதிரைத் தீர்க்கும் அதிகாரியாக விஷ்ணு விஷால் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்...        
        
    
 
                            



