Author: admin
”ஜோக்கர்”- திரை விமர்சனம் (தமிழ் மக்களுக்கு இவன் ஜோக்கர் இல்லை புத்திசாலி 5/4
எதிர்வரும் ஆகஸ்ட் 15-ம் தேதியன்று 66-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடவுள்ளது இந்தியா. உலகத்தின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக வெளியில் சொல்லிக் கொள்ளும் இந்த நாடு இத்தனையாண்டு கால சுதந்திர காலத்தில் வல்லரசு நாடாக உருமாறியிருப்பதாக ஆள்பவர்கள் பெருமையாக பீத்திக் கொண்டாலும், இன்னமும் முக்கால்வாசி கிராமப்புற வீடுகளில் கழிவறை வசதிகூட இல்லை என்பதை யாரிடம் போய் சொல்வது..?
“செவ்வாய்க்கே ராக்கெட்விடப் போகிறோம்.. அந்த அளவுக்கு தொழில் நுட்பத்தில் வல்லரசு நாடுகளுக்கு சவால்விடும் வகையில் வளர்ந்திருக்கிறோம்..” என்று முட்டாள் அரசுகளும், மந்திரிகளும், முதலமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.க்களும் கத்திக் கொண்டிருக்கும் அதே நேரத்தில்தான் இன்னமும் கிராமங்களில் வசிக்கும் இந்தியர்கள் கழிப்பறைக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
மக்கள் தொகைப் பெருக்கத்தை கட்டுப்படுத்த பத்து அம்சத் திட்டத்தை 50 ஆண்டுகளாக அமல...
கபாலி ஸ்டைலில் கலக்க வருகிறான் இருமுகன்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படத்தின் சென்னை வசூல் குறித்து நாம் அறிந்ததே. வெளியான மூன்றே வாரத்தில் இந்த படம் சென்னையில் மட்டும் ரூ.11 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை புரிந்தது. இந்த படத்தை சென்னையில் ஜாஸ் சினிமாஸ்’ நிறுவனம் வெளியிட்டு நல்ல லாபத்தை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ‘கபாலி’யை அடுத்து சீயான் விக்ரம் நடித்த ‘இருமுகன்’ படத்தை சென்னையில் வெளியிட முடிவு செய்த ஜாஸ் சினிமாஸ்’ தற்போது சென்னை ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ‘கபாலி’யை அடுத்து ‘இருமுகனும்’ சென்னையில் வசூலில் சாதனை படைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனந்த்சங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யாமேனன் நடித்துள்ள இந்த படம் செப்டம்பர் இறுதியில் வெளியா...
குழந்தைகளின் கல்விக்காக உதவி கரம் நீட்டும் நடிகர் விஷால் !!
சில மாதங்களுக்கு முன்பு மத்திய கைலாஷ் அருகே அதிகாலையில் குடித்துவிட்டு போதையில் விலை உயர்ந்த ஆடி காரை ஒட்டி வந்த ஒரு பெண்ணின் கார் மோதி உயிர் இழந்தார் தரமணியை சேர்ந்த கார்பென்டர் முனுசாமி ( 53). அவருடைய மனைவி கோவிந்தம்மாள் , மகன் ஆனந்த் 11 ஆம் வகுப்பு , மகள் திவ்யா 7ஆம் வகுப்பு இவர்கள் இருவரும் திருவான்மியூரில் உள்ள கார்ப்ரேஷன் பள்ளியில் படித்து வருகின்றனர். துன்பத்தில் வாடி வந்த இக்குடும்பத்தின் நிலை அறிந்த விஷால் அன்னாரின் குழந்தைகளான ஆனந்த் மற்றும் திவ்யா ஆகியோரின் கல்விக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பள்ளி முதல் முதல் கல்லூரி வரை அவர்கள் விரும்பி படிக்க ஆசைப்படும் படிப்புக்கான செலவை விஷால் தேவி அறக்கட்டளையின் மூலம் செய்யவிருக்கிறார். விஷால் நடிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் “ கத்தி சண்டை “. இப்படத்தின் படபிடிப்பில் போட்டோ பிளேட் செல்வம் என்பவர் மாரடைப்பால் உயிரிழந்தா...
சிங்கம்-3 வியாபாரம் இல்லையாமே தயாரிப்பாளர் தவிப்பு
சிங்கம்-3 வியாபாரம் உலகம் முழுவதும் ரூ 100 கோடிக்கு நடந்துள்ளதாக கூறினார்கள். அது எப்படியோ, கேரளாவில் ரூ 5.30 கோடி வரை இப்படத்தின் வியாபாரம் நடந்ததாக கூறியுள்ளனர்.
ஆனால், ஒரு மலையாள முன்னணி தளத்தில் ரூ 3.7 கோடிக்கு தான் வியாபாரம் பேசப்பட்டு வருகின்றது, யார் இப்படியெல்லாம் வதந்திகளை பரப்புவது என கூறியுள்ளனர்.
மேலும், சூர்யாவின் 24 கேரளாவில் செம்ம ஹிட் அடித்ததால் சிங்கம்-3 நல்ல வியாபாரம் நடக்கும் என படக்குழு எதிர்ப்பார்த்தது....
திருநாள்- திரை விமர்சனம்
தஞ்சாவூர், கும்பகோணத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரவுடி சரத் லோகித்சவாவிடம் அடியாளாக வேலை பார்த்து வருகிறார் ஜீவா. சரத் லோகித்சவாவும், நயன்தாராவின் அப்பா ஜோ மல்லூரியும் சேர்ந்து சாக்கு விற்பனை செய்யும் தொழில் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நயன்தாராவின் கனவில் ஜீவா வந்து தாலி கட்டுவது போன்று அடிக்கடி கனவு வருகிறது. அதனால், ஜீவா பார்த்தாலே கொஞ்சம் பயத்துடனே இருக்கிறார் நயன்தாரா.
இந்நிலையில், நயன்தாராவின் பக்கத்து வீட்டில் வசிக்கும் யோகி தேவராஜ் வாங்கிய கடனை திருப்பி கொடுக்காததால் அந்த வீட்டுக்கு செல்லும் நயன்தாராவை ரவுடி கும்பல் ஒன்று கடத்தி சென்றுவிடுகிறது. அப்போது, ஜீவா தனியொரு ஆளாக சென்று அந்த ரவுடி கும்பலை அடித்து துவம்சம் செய்துவிட்டு நயன்தாரா காப்பாற்றுகிறார்.
அப்போது, நயன்தாராவிடம் தான் அவளை நீண்ட நாட்களாக காதலிப்பதாக கூறுகிறார். நயன்தாராவும் ஜீவா மீதுள்ள பயத்தை ந...
எனது அடுத்த டார்கெட் அஜித் விஜய் தான் பிரபல இயக்குனர்
அஜித், சூர்யா, கார்த்தி உள்பட முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கிய வெங்கட்பிரபு தற்போது ‘சென்னை 600028’ படத்தின் 2ஆம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில் தனது அடுத்த படத்தில் அஜித் அல்லது விஜய் நடிக்க வாய்ப்புள்ளதாக அவர் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் அஜித் நடித்த சூப்பர் ஹிட் படமான ‘மங்காத்தா’ படத்தின் 2ஆம் பாகத்தை விரைவில் இயக்கவுள்ளதாகவும், அந்த படம் முதல் பாகத்தின் தொடர்ச்சியா? அல்லது புதிய கதையா? என்பதை அஜித் முடிவு செய்வார் என்றும் வெங்கட்பிரபு தனது பேட்டியில் கூறியுள்ளார்.
அதேபோல் இளையதளபதி விஜய்யை வைத்து ஒரு கேஷுவலான, ஜாலியான படம் எடுக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் ஆசை என்றும் மேற்கண்ட இரண்டு ஆசையும் விரைவில் நிறைவேறும் என்றும் அவர் தனது பேட்டியில் நம்பிக்கையுடன் தெரி...
சென்னையில் உலக தரத்தில் அரிய வகை கேமராக்களின் நிரந்தர அருங்காட்சியகம்
சென்னையில் முதல் முறையாக உலக தரத்தில் மிக அரிய வகை கேமராக்களின் நிரந்தர அருங்காட்சியகம் திறக்கப்படுகிறது. உலகின் பல இடங்களில் 64க்கும் அதிகமான ஓவிய கண்காட்சியை நடத்தியவர் பிரபல ஓவியரான ஏ.பி.ஸ்ரீதர். தத்ரூப ஓவியங்கள், 3டி ஓவியங்கள் இவரது கண்காட்சியை அலங்கரிக்கும் ஓவியங்களில் மிக முக்கியமானது.
ஓவியராக இருந்தாலும் நவீன கேமராக்கள் தொடங்கி அரியவகை கேமராக்களை சேகரிப்பது இவரது வழக்கம் இப்படி இவரிடம் உள்ள கேமராக்களின் எண்ணிக்கை மட்டும் 4000 ஆயிரத்தை தாண்டும்.
தனது கலை பொக்கிஷமான அரியவகை கேமராக்களை பொதுமக்களும், கேமரா ஆர்வலர்களும் கண்டு ரசிப்பதற்காகவும், கேமரா வரலாறுகளை தெரிந்து கொள்வதற்காகவும் சென்னையில் ஒரு நிரந்தர அருங்காட்சியகம் அமைக்கும் பணியை செய்து வருகிறார்.
சென்னையில் மிக பிரபலமான விஜிபி ஸ்னோ கிங்டம் அமைய உள்ள இந்த அருங்காட்சியகத்தில் உலகின் அதி நீளமான மம்மோத் கேமரா முதல் 11 கிராம...
ரஜினிகாந்த் வரலாற்று கதையில் ஹீரோவாக நடிக்க போவது யார் தெரியிமா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று புகழின் உச்சியில் இருக்கிறார். ஆனாலும் ஆரம்பக்காலத்தில் ஒரு கண்டக்ட்டராக தான், தன் வாழ்க்கையை இவர் தொடர்ங்கினார்.
இந்நிலையில் இவரின் வாழ்க்கையை படமாக எடுக்க இவருடைய மகள்கள் முடிவு செய்துள்ளனர், ஐஸ்வர்யா தனுஷ் கதை எழுதிக்கொண்டு இருக்கிறார்.
இதில் ஹீரோவாக நடிக்க தனுஷிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம்,பொறுத்திருந்து பார்ப்போம் அதிகாராப்பூர்வ தகவல்...
விஷால் திருமணத்துக்கு நாள் குறிக்கும் கார்த்தி
லோக்கல் டிவி சேனல், திருட்டு விசிடி கடைகள் என வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் துரத்தும் விஷாலை துரத்தும் ஒரே விஷயம் என்னவென்றால் அவரின் ‘கல்யாண பேச்சுதான்’.
ஊடகங்கள், சகா நடிகர்கள் கலந்துக்கொள்ளும் விழா மேடைகள், என எதுவும் விஷால் – வரலட்சுமியை விட்டுவைக்கவில்லை. ஒருக்கட்டத்தில் “நடிகர்கள் சங்க கட்டட வேலை முடிஞ்சோன அங்கே ஒரு லக்ஷ்மிகரமான பொண்ணோட, முதல் கல்யாணம் என்னோடதுதான்” என்று விஷால் கிண்டலாக பேச, அது இன்னும் காட்டு தீ போல பரவியது.
இந்நிலையில் இப்போது ஒரு திடுக்கிடும் செய்தி இணையதளங்களில் பரவிவருகிறது.
அதாவது, விஷால் ஒரு தனியார் நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் நேரடியாகவே வரலட்சுமியுடனான காதலை ஒப்புக்கொண்டு, எங்கள் இருவருக்கும் நடிகர் சங்கத்தில் தான் திருமணம் நடைப்பெறும் என்று பேசியுள்ளாராம்.
அதே போல, நடிகர் சங்கத்தில் மற்றொரு முக்கிய பொறுப்பாளரான கார்த்தியுடன் தன் திருமணத்திற்காக...

