
உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் திரைப்படம் அமெரிக்காவில் முதல் மூன்று நாட்களில் 250 மில்லியன் யுஎஸ் டாலர்கள் வசூலித்துள்ளது.
4474 தியேட்டர்களில் வெளியான இந்தப் படத்தின் வசூல் ஸ்டார் வார்ஸ் – தி போர்ஸ் அவேகன்ஸ் படத்தின் வசூலான 248 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலை மிஞ்சி விட்டதாகச் சொல்கிறார்கள்.
சுமார் 300 மில்லியன் யுஎஸ் டாலர்கள் செலவில் உருவான இந்தப் படம் முதல் மூன்று நாட்களில் மட்டும் சுமார் 630 மில்லியன் யுஎஸ் டாலர்களை வசூலித்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் மட்டும் இந்தப் படம் மூன்று நாட்களில் 100 கோடி ரூபாயை வசூலித்துள்ளது என்றும் சொல்கிறார்கள்.
அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் உலக அளவில் வசூலில் மேலும் பல சாதனைகளைப் படைக்கும் என்கிறார்கள்.
