Tuesday, September 10
Shadow

பாபா பிளாக் ஷீப்’ + திரைவிமர்சனம். Rank 2.5/5

 

பாபா பிளாக் ஷீப்’ திரைவிமர்சனம்

அனைவரும் பள்ளி வாழ்க்கையை கடந்து வந்திருப்பது மட்டும் இன்றி, பள்ளி வாழ்க்கையை மையப்படுத்திய பல திரைப்படங்களையும் கடந்து வந்திருக்கிறோம். அவற்றில் சில படங்கள் மட்டுமே மாணவர்கள் மனதிலும், மக்கள் மனதிலும் இடம் பிடிக்கும். அப்படி ஒரு படமாக இந்த படம் இருக்கிறதா? என்று பார்ப்போம்.

இந்த படத்தில் சுரேஷ் சக்கரவர்த்தி, அம்மு அபிராமி, வினோதினி வைத்தியநாதன், ஆர். ஜே.விக்னேஷ் காந்த், போஸ் வெங்கட், சுப்பு பஞ்சு, மதுரை முத்து இவர்களுடன் பிளாக் ஷீப் பட்டாளம் பள்ளி மாணவர்களாக நடித்துள்ளனர். படத்திற்கு இசை சந்தோஷ் தயாநிதி, ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில்,ராஜ்மோகன் ஆறுமுகம் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் பாபா பிளாக் ஷீப்

2k கிட்ஸ் என்று சொல்லப்படும் 2000-ம் ஆண்டு காலகட்ட பள்ளி மாணவர்களின்  வாழ்க்கையை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ள கதை, வழக்கமான மாணவர்களின் சேட்டை, மோதல், காதல் என்று பயணிக்கிறது. இதற்கிடையே, மாணவர்கள் கையில் ஒரு கடிதம் கிடைக்கிறது. அந்த கடிதத்தில், மாணவர் ஒருவர் தான் தற்கொலை செய்துக்கொள்ள இருப்பதாக எழுதியிருக்கிறார். பெயர் உள்ளிட்ட விவரம் எதுவும் இல்லாத அந்த கடிதம் எழுதிய மாணவரை கண்டுபிடித்து, அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபடும் சக மாணவர்கள் அதை எப்படி செய்தார்கள், அவர் எதற்காக தற்கொலை முடிவு எடுத்தார், என்பதை அழுத்தமான அட்வைஸோடு, அதிகமான கலகலப்போடும் சொல்ல முயற்சித்திருப்பது தான் ‘பாபா பிளாக் ஷீப்’. ஆனால் அது மிக மொக்கையாக அமைந்துள்ளது.

இந்த படத்தில் நடித்த அனைவருமே பிளாக் ஷீப் சேனலில் வரும் நபர்கள் அம்மு அபிராமியை தவிர இதில் மேலும் ஒரு வேதனை பிளாக் ஷீப் சேனலில் நடிக்கும் பெண்கள் என்ன பாவம் செய்தார்கள் என்று தெரியவில்லை அவர்களுக்கு இந்த படத்தில் இடம் இல்லை. அதோடு இதில் நடித்த அனைவரும் பள்ளி மாணவர்களாக நடித்து இருக்கிறார்கள் .இவர்களை பார்த்தால் பள்ளி மாணவர்கள் என்று எந்த விதத்திலும் சொல்ல முடியவில்லை இவர்களை பார்க்கும் போது கல்லூரி முடித்து அலுவலகம் போகும் இளைஞர்களை போல உள்ளனர்..

இயக்குனர் ராஜ் மோகன் இவருக்கு இது முதல் படம் இதுவரை யாரிடமும் உதவி இயக்குநர் என்ற அனுபவம் இல்லாமல் இந்த படத்தை இயக்கியுள்ளார். நல்ல தமிழ் அறிஞர் ராஜ் மோகன் ஆனால் அந்த விஷயங்களை கொஞ்சம் கூட தொடாமல் இயக்கியுள்ளார். இவர் நினைத்த கதை களத்தை சொல்ல முடியவில்லை காரணம் நடிகர்கள் தான் இருந்து கிளைமாக்ஸ் காட்சியில் இவர் சொல்லும் கருத்து பெற்றோர்களையும் சிந்திக்க வைக்கும் மாணவர்களையும் சிந்திக்க வைக்கும் இதற்கு இவரை பாராட்ட வேண்டும்.

முதல் பாதி முழுவதும் பழைய பாணியில் பயணித்தாலும், திடீரென்று பறந்து வரும் அந்த தற்கொலை கடிதம் நம் கவனத்தை சட்டென்று ஈர்ப்பதோடு, அதை தொடர்ந்து வரும் நடிகை அபிராமியின் கதாபாத்திரம் மற்றும் பள்ளி மாணவியான அவரது மகளின் மரணம் ஆகியவை, இயக்குநர் ராஜ்மோகன் ஆறுமுகம் ஏதோ பெரிய விஷயத்தை பற்றி பேசப்போகிறார், என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. ஆனால், எதிர்பார்த்த சில நிமிடங்களிலேயே இயக்குநர் நமக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில், அந்த பகுதியை பலம் இல்லாமல் சொல்லி முடித்துவிடுகிறார். விஜய் டிவியின் கானா காணும் காலங்கள் போல உள்ளது.