ஓர் அழகான காதல்கதையில் கொஞ்சம் சிம்புவின் மாநாடு படம் போல் டைம்லூப் வகை திரைக்கதையையும் கலந்து வெளிவந்திருக்கும் படம் பனாரஸ்.
நாயகன் ஜையீத்கான், புதுநடிகர் போல் இல்லாமல் எல்லாக் காட்சிகளிலும் மிக இயல்பாக நடித்திருக்கிறார். நடனம் மற்றும் சண்டைக்காட்சிகளும் விதிவிலக்கல்ல. காலமாற்றம் காரணமாகக் குழம்பி நிற்கும் நேரங்களிலும் தேர்ச்சி பெறுகிறார்.
நாயகி சோனல் மாண்ட்ரியோ அழகும் இளமையும் துள்ளத் துள்ள இருக்கிறார். கங்கை நதியில் படகில் அவர் பாடிக்கொண்டே வரும் காட்சி நன்று.
டெத் போட்டோகிராபர், ஆட்டோ ஓட்டுநர், நாயகனின் நண்பர் எனப்பலமுகம் காட்டியிருக்கும் சுஜய்சாஸ்த்ரி கவனம் ஈர்க்கிறார். அவருக்குள் இருக்கும் சோகத்தை வெளிப்படுத்தும் காட்சியிலும் கவர்கிறார்.
படத்தின் பிளஸ்:
அச்யுத்குமார், சப்னாராஜ்,தேவராஜ் ஆகியோரின் நடிப்பு, அத்வைத குருமூர்த்தியின் ஒளிப்பதிவு, அஜனீஷ்லோக்நாத் இசை
படத்தின் மைன்ஸ்:
இயக்குநர் ஜெயதீர்த்தா டைம் டிராவல் டைம் லூப் போன்ற விசயங்களைக் கலந்து சொதப்பியிருக்கிறார்.
மொத்தத்தில் காசி நகரையும் கங்கை அழகையும் கண்டுகளிக்க வைக்கும் காட்சிகளுக்காகவே பார்க்கலாம்.