Tuesday, December 7
Shadow

Tag: film

உடன்பிறப்பே திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Latest News, Review
2டி எண்டர்டெயின்மெண்ட் சூர்யா-ஜோதி்கா தயாரிப்பில் வெளியாகியிருக்கும் படம் உடன்பிறப்பே படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். அண்ணன்-தங்கை பாசத்தை மையமாகக் கொண்ட படம். உயிருக்கு உயிரான அண்ணன்-தங்கை. தங்கையின் கணவர் நேர்மையானவர். அடிதடிகளை விரும்பாதவர். தன் மனைவியின் அண்ணன் கொஞ்சம் அடாவடி பேர்வழி. அதுவே இரு குடும்பத்தின் பிரிவுக்குக் காரணமாகிறது. பத்து, பதினைந்து ஆண்டுகளாகப் பேசாமல் பாசப்போராட்டம் நடத்தும் இரு குடும்பமும் இணைவது தான் கதை. புதுக்கோட்டை மாவட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பதால், எங்குப் பார்த்தாலும் பசுமை. ஆனால் படத்தின் கதையில் பெரிய அளவில் வறட்சி. கதை என்பதை விடத் திரைக்கதையில் என்பது தான் பொருத்தமாக இருக்கும். அண்ணனாக சசிக்குமார், தங்கையாக ஜோதிகா, தங்கை கணவராக சமுத்திரக்கனி, வீட்டு வேலைக்காரர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜோதிகாவின் 50வது ...

மீனவர்களின் பிரச்சினைகளை யார்த்தமாக சொல்லும் படம் “கும்பாரி”

Latest News, Top Highlights
டூரிங் டாக்கீஸ் மற்றும் சாகசம் உள்ளிட்டப் படங்களில் நடித்த அபிசரவணன் நடிப்பில் மீனவர்களின் பிரச்சினைகளை யார்த்தமாக சொல்லும் படம் "கும்பாரி". இயக்குனர் கவின் இயக்கத்தில் குமாரதாஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ஜான்விஜய், மதுமிதா, சுகுமார், மதுமிதா பருத்திவீரன் புகழ் சரவணன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாக உள்ளத்து இந்த படம். இந்த படம் குறித்து பேசிய படத்தின் ஹீரோ அபி சரவணன். "கும்பாரி" மீனவர்களின் பிரச்சினைகளை யார்த்தமாக சொல்லும் படம். நான்கு நண்பர்களில் ஒருவருக்கு ஏற்படும் பிரச்சினையை மற்ற மூன்று நன்பர்கள் எப்படி காப்பாற்றுகின்றனர் என்பது படத்தின் கதை. கடலோர பகுதியிலும், கடலிலும் நடக்கும் கதை என்பதால், இந்த படத்திற்காக, கடலில் நீச்சல் அடிப்பதற்காக முறையாக பயிற்சி எடுத்து கொண்டேன். எனது கேரியரில் முக்கிய படமாக இந்த படம் இந்த் படம் அமையும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். இந்த படத்தை அடுத்...
இயக்குனர் கே. சுப்பிரமணியம் பிறந்த தின பதிவு

இயக்குனர் கே. சுப்பிரமணியம் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
கிருஷ்ணசுவாமி சுப்பிரமணியம் 1930களிலும், 40களிலும் புகழ்பெற்று விளங்கிய தமிழ்த் திரைப்பட இயக்குனர். பொதுவாக கே. சுப்பிரமணியம் என அழைக்கப்பட்டவர். கும்பகோணத்தைச் சேர்ந்த வழக்குரைஞரான இவர் 1936 இலிருந்து 1945 வரை பல தமிழ்த் திரைப்படங்களை இயக்கியவர். எம். கே. தியாகராஜ பாகவதர், எஸ். டி. சுப்புலட்சுமி, என். எஸ். கிருஷ்ணன் பி. யு. சின்னப்பா ஆகிய நடிகர்களைக் கொண்டு இந்திய சுதந்திர போராட்டத்திற்கு ஆதரவான பல படங்களை இயக்கியவர். "தமிழ்த் திரையுலகின் தந்தை’ என்று வழங்கப்படுகிறார். கே. சுப்பிரமணியம் தமிழ்நாடு தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில், பிரபல வழக்குரைஞராக இருந்த கிருஷ்ணசுவாமி ஐயருக்குப் பிறந்தார். தந்தையைப் போலவே சட்டம் படித்த இவர், கும்பகோணத்தில் வழக்குரைஞராகச் சிலகாலம் பணியாற்றினார். பின்னர், திரைப்படத் துறையின் மீதுள்ள ஈடுபாட்டால் சென்னைக்கு வந்தார். தமிழ்த் திரைப்பட முன்னோடிகளுள் ஒருவரும், ...
தமிழில் முதல் முறையாக நடிக்கும் இந்திய சினிமாவின் உயர்ந்த மனிதன்

தமிழில் முதல் முறையாக நடிக்கும் இந்திய சினிமாவின் உயர்ந்த மனிதன்

Latest News, Top Highlights
தமிழில் மற்றும் ஹிந்தி மொழியில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ள உயர்ந்த மனிதன் படம் சுமார் 8 மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டது. இந்த இந்திய சினிமாவின் உயர்ந்த மனிதனாக விளங்கி வரும் அமிதாப்பச்சன் நடிக்க உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் அமிதாப் அட்டகாசமான தோற்றத்தில் இருக்கும் அப்பட ஸ்டில்களை இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். தமிழில் அஜித், விக்ரம் இணைந்து நடித்து இரட்டையர்கள் ஜே.ட்.-ஜெர்ரி இயக்கிய ‘உல்லாசம்’ படத்தை தயாரித்தவர் அமிதாப் பச்சன். நடிகராக எந்த ஒரு நேரடி படத்திலும் அமிதாப் பச்சன் நடிக்கவில்லை. தமிழ் திரையுலகில் ரஜினி, கமல், பிரபு உள்ளிட்டோருடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தாலும் வந்த அத்தனை அழைப்புகளையும் தவிர்த்து நடிக்காமலே இருந்தார். அமிதாப்பை எப்படியாவது நடிக்கவைக்கவேண்டும் என்ற முயற்சியில் கடந்த ஆண்டு ஜுன் மாதம்...
ஜெயலலிதாவாக நடிக்கும் கங்கனா சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா?

ஜெயலலிதாவாக நடிக்கும் கங்கனா சம்பளம் எவ்வளவு என்று தெரியுமா?

Latest News, Top Highlights
தமிழ் சினிமா நடிகைகளில் அதிகபட்டமாக எந்திரன் படத்தில் நடித்தற்காக நடிகை எமி ஜாக்சன் 2 கோடி ரூபாய் சம்பளம் பெற்றார். இதுவே நடிகைகளில் அதிகபட்ச சம்பளமாக இருந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரது வாழ்க்கை வரலாற்று நடிக்க உள்ள கங்கனா ரனாவத், சம்பளத்தில் விஷயத்தில் எமி ஜாக்சனை முந்தியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரது வாழ்க்கை வரலாற்று படத்தை எடுப்பதற்கு போட்டி போட்டுக்கொண்டு தமிழ் சினிமா இயக்குநர்கள் தயாராகி வந்தனர் . பாரதிராஜா, லிங்குசாமி, பிரியதர்ஷினி, விஜய் ஆகியோர் இப்படத்தை எடுக்கத் திட்டமிட்டனர். ஆனால் கடைசியாக ஏ.எல் விஜய் இப்படத்தை இயக்க முடிவெடுத்து அறிவித்தார். இப்படத்தில் நடிகைகள் தேர்வு நெடுநாட்களாக பேசப்பட்டு வந்தநிலையில், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடிக்கவிருப்பதாக அவரது பிறந்தநாளன்று அறிவித்தனர். இப...

அரசியல் விமர்சன காமெடிகளுடன் வெளியானது தர்மபிரபு பட டீசர்

Latest News, Top Highlights
காமெடி நடிகர் யோகிபாபு நடித்துள்ள 'தர்மபிரபு' படத்தை முத்துக்குமரன் இயக்கியுள்ளார். ஶ்ரீவாரி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் தர்மபிரபு திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். முழுக்க முழுக்க காமெடியாக எடுக்கப்படும் இந்தத் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் யோகிபாபு. இவருடன் ரமேஷ் திலக், அழகம்பெருமாள், கருணாகரன், ராதாரவி போன்ற நடிகர்களும் நடிக்கிறார்கள். இந்நிலையில் யோகிபாபு எமதர்மனாக நடித்திருக்கும், இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.  https://www.youtube.com/watch?v=4A-_xRTHulc ...
ரஜினியின்  மற்றும் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் தேதி  வெளியானது

ரஜினியின் மற்றும் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் தேதி வெளியானது

Latest News, Top Highlights
பேட்ட படத்தை அடுத்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். இது ரஜினிகாந்தின் 166-வது படம். இந்தப் படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாகவும், சமூக ஆர்வலராகவும் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரத்தில் மட்டுமே ரஜினிகாந்த் நடிக்கிறார் என்று கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். பேட்ட படத்தை அடுத்து இந்தப் படத்துக்கும் அனிருத் இசையமைக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது. இந்தப் படத்துக்கு நாற்காலி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதற்கு படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மறுப்பு தெரிவித்திருந்தார். த...
CLOSE
CLOSE