Sunday, March 16
Shadow

பெண்களுக்கு பாதுகாப்பில்லை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் பரணி

இன்று எத்தனயோ பிரச்சனைகள் நடுவே மிக பெரிய பிரச்சனை எதுவென்றால் அது விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி என்று தான் சொல்லணும் எல்லோருக்கும் இரவு ஆனால் சோறு இருக்கோ இல்லையோ மழை இருக்கோ இல்லையோ ஆனால் பிக் பாஸ் பாக்கணும் என்ற கட்டாயத்துக்கு வந்து விட்டார்கள் அந்த அளவுக்கு அந்த நிகழ்ச்சி மக்களை கவர்ந்திவிட்டது என்று தான் சொல்லணும் .

கடந்த வாரம் எல்லோரும் பரணி தான் வெளியேறுவார் என்று ஆவலோடு பார்த்து இருந்த அனைவருக்கும் ஏமாற்றம் காரணம் கஞ்சா கருப்பு வெளியேறினார். இதனால் பெரும் திருப்பம் ஏற்படும் என்ற விஜய் டிவிக்கு ஏமாற்றம் பரணியின் சைகோ வேலைகள் அதிகமானதால் அவரை வெளியேற்றும் நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து நேற்று கஞ்சா கருப்பு வெளியேற்றப்பட்ட பிறகு, நடிகர் பரணி மிகுந்த சோகமாக காணப்பட்டார்.

பரணி வீட்டில் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என காயத்ரி ரகுராம் ஒரு புதிய புகார் தெரிவித்தார். அவரின் மனநிலை சரியில்லை, யாரும் அவனிடம் பேசவேண்டாம், அவர் இருந்தால் நாங்கள் வீட்டில் இருக்க மாட்டோம் என சினேகன் கூறியது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

பிறகு பரணி வேலியை தாண்டி வீட்டில் இருந்து வெளியேற முயற்சித்தார், இருப்பினும் பிக் பாஸ் அவரை அழைத்து பேசி பின்னர் விதியை மீறியதற்காக அவரை வீட்டில் இருந்து வெளியேற்றுவதாக அறிவித்தார்.

Leave a Reply