Saturday, October 10
Shadow

பிரம்மாண்ட ஐ.டி. நிறுவனங்கள், மால்களில் படமாக்கப்பட்ட ஆக்ஷன் க்ரைம் திரில்லர் ‘ஆகன்யா’ – திரையரங்க வருகைக்கு தயாராகும் புதிய முயற்சி!

பிரம்மாண்ட ஐ.டி. நிறுவனங்கள், மால்களில் படமாக்கப்பட்ட ஆக்ஷன் க்ரைம் திரில்லர் ‘ஆகன்யா’ – திரையரங்க வருகைக்கு தயாராகும் புதிய முயற்சி!

தமிழ் திரையுலகில் க்ரைம், ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் அம்சங்களை விறுவிறுப்பாக இணைக்கும் புதிய திரைப்படமாக ‘ஆகன்யா’ உருவாகியுள்ளது. தயாரிப்பாளர் திருமலை சிவம் தயாரித்துள்ள இந்தப் படத்தை இயக்குநர் ஜவஹர் பரமசிவம் இயக்கியுள்ளார்.

பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் முக்கிய அம்சமாக, பிரபல ஐ.டி. நிறுவனங்கள் மற்றும் நவீன மால்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. கதையின் தன்மைக்கு ஏற்ற வகையில் தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த இடங்கள், படத்திற்கு புதிய காட்சியமைப்பையும், சர்வதேசத் தரத்திலான தோற்றத்தையும் வழங்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்தப் படத்தில் கதாநாயகிகளாக சுப்ரா அய்யப்பா மற்றும் ஸ்ருஷ்டி டாங்கே நடித்துள்ளனர். வழக்கமான கதாநாயகி தோற்றத்தைத் தாண்டி, அதிரடியான சண்டைக் காட்சிகளில் சுப்ரா அய்யப்பா தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். மறுபுறம், கதையின் திருப்பங்களுக்கு வலுசேர்க்கும் புத்திசாலித்தனமான கதாபாத்திரத்தில் ஸ்ருஷ்டி டாங்கே தனது நடிப்பால் கவனம் ஈர்க்கவுள்ளார்.

க்ரைம் த்ரில்லர் கதைக்களத்துடன், ரசிகர்களை கவரும் வகையில் இரண்டு குத்துப்பாடல்களும் படத்தில் இடம்பெற்றுள்ளன. அவற்றில் ஒரு பாடலில் ஸ்ருஷ்டி டாங்கே தனது உற்சாகமான நடனத்தால் ரசிகர்களை கவரவுள்ளார். மேலும், படத்தில் இடம்பெறும் மென்மையான காதல் பாடலுக்கு கவிஞர் பா. விஜய் வரிகள் எழுதியிருப்பது கூடுதல் சிறப்பாகும்.

தொழில்நுட்ப ரீதியாகவும் சிறப்பாக உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு கதிரவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த சுபாஷ் சந்திரன் இசையமைத்துள்ள நிலையில், விக்னேஷ் குமார் P.G. படத்தொகுப்பை கவனித்துள்ளார்.

ஆக்ஷன், சஸ்பென்ஸ், உணர்வுபூர்வமான தருணங்கள் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதையுடன் உருவாகியுள்ள ‘ஆகன்யா’, விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. வித்தியாசமான கதை சொல்லும் பாணியுடனும், பிரம்மாண்டமான காட்சியமைப்புடனும் ரசிகர்களை கவரும் படைப்பாக இப்படம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு திரையுலகில் உருவாகியுள்ளது.

தொழில்நுட்பக் குழு:

  • தயாரிப்பு: திருமலை சிவம்
  • இயக்கம்: ஜவஹர் பரமசிவம்
  • ஒளிப்பதிவு: கதிரவன்
  • இசை: சுபாஷ் சந்திரன் (USA)
  • படத்தொகுப்பு: விக்னேஷ் குமார் P.G.

Big-Budget Crime Action Thriller ‘Aaganya’ Set for Release; Shot Across Premium IT Campuses and Shopping Malls

A new addition to Tamil cinema’s crime thriller genre, Aaganya is gearing up for its theatrical release. Produced by Thirumalai Sivam and directed by Jawahar Parasivam, the film promises a gripping blend of crime, action, and suspense.

Mounted on a lavish scale, Aaganya has been extensively shot in prominent IT company campuses and premium shopping malls, giving the film a contemporary visual appeal and an impressive production value. The makers believe these unique locations will add authenticity and a fresh cinematic experience to the narrative.

The film stars Subra Aiyappa and Srushti Dange in the lead roles. Subra Aiyappa steps into a powerful action-oriented character, performing high-octane stunt sequences, while Srushti Dange plays an intelligent and impactful role that is expected to be one of the film’s highlights.

Adding to its commercial appeal, Aaganya features two energetic dance numbers, with Srushti Dange delivering a vibrant performance in one of them. The film also includes a soulful romantic track penned by acclaimed lyricist Pa. Vijay.

The technical team includes cinematographer Kathiravan, while the music has been composed by Subash Chandran (USA). Editing is handled by Vignesh Kumar P.G.

With its intriguing storyline, stylish action, suspense-filled screenplay, and strong performances, Aaganya is expected to offer an engaging theatrical experience. The film is slated to hit theatres soon.

Technical Crew:

  • Producer: Thirumalai Sivam
  • Director: Jawahar Parasivam
  • Cinematography: Kathiravan
  • Music: Subash Chandran (USA)
  • Editor: Vignesh Kumar P.G.