அட்லீ இயக்கத்தில் நடித்து வரும் பிகில் படத்தில் இரண்டு விதமான வேடங்களில் நடிக்கிறார் விஜய். கால்பந்தாட்ட வீரர் மற்றும் தாதா போன்ற இன்னொரு கேரக்டரிலும் அவர் நடிக்கிறார். இந்த படத்தின் மூன்று போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி விஜய் ரசிகர்களை மகிழச்சியில் ஆழ்த்தியது. இதன் மூலம் ரசிகர்கள் மிகவும் ஆவலோடு படத்தின் பாடல்களுக்கு காத்து இருக்கின்றனர். சிங்கள் டிராக் விரைவில் வெளியாக உள்ளது இதற்கிடையில் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் பார்க்கலாம் வாங்க .
இப்படத்தின் பெருவாரியான படப்பிடிப்புகள் சென்னை மற்றும் அதை சுற்றிய பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது பிகில் படக்குழு மும்பை செல்கிறது. அங்குள்ள ஒரு கால்பந்தாட்ட மைதானத்தில் பிகில் படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மற்றும் ஒரு அதிரடியான சண்டை காட்சியும் படமாக்கப்பட உள்ளதாம்.
மும்பையில் நடைபெறும் இந்த இறுதிக்கட்ட படப்பிடிப்போடு பிகில் படத்தின் அனைத்துக்கட்ட படப்பிடிப்புகளும் முடிக்கப்பட்டு இறுதிக்கட்ட பணிகள் மின்னல் வேகத்தில் தொடங்கப்பட உள்ளது.படம் எப்படியும் தீபாவளிக்கு வெளியாகவேண்டும் என்ற எண்ணத்தில் இயக்குனர் அட்லீ இயங்கிவருகிறார்.