
பொம்மை திரைவிமர்சனம்

எஸ்.ஜே.சூர்யா. பிரியா பவானி ஷங்கர். சாந்தினி தமிழரசன் டவுட் செந்தில் அருள் டி ஷங்கர். மற்றும் பலர் நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவில் ராதா மோகன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம்
பொம்மை
எஸ் ஜே சூர்யா வின் கனவில் பொம்மைக்கும் பெண்மை உண்டு என்பது தான் கதையின் கரு
பள்ளி மாணவனாக இருக்கும்போது ஒரு விபத்தில் எஸ் ஜே சூர்யாவின் தாயார் இறந்து விடுகிறார் அதன் பின் அவருக்கு எதிலும் நாட்டம் இல்லாமல் பள்ளிக்கு செல்வது இல்லாமல் அவரின் சிறந்த ஓவியர் என்பது அதையும் ஒழுங்காக செய்யாமல் தன்னையே மறந்து ஒரு மனநோயாளியாக அலைகிறான் அந்த சமயத்தில் அந்த ஊருக்கு புதிதாக கூடியவரும் நந்தினி இந்த பெண் தான் எஸ் ஜே சூர்யா வின் வாழ்க்கை அவர் வாழ்க்கை முறை மாற்றுகிறார் அவருக்கு மீண்டும் ஒரு புத்துணர்வு கொடுக்கிறார் ஆனால் அந்தப் பெண்ணும் ஒரு ஒரு கோயில் திருவிழாவில் கடத்தப்பட்டு விடுகிறார் அதற்குப்பின் மீண்டும் மனநோயாளியாக இருக்கும் எஸ் ஜே சூர்யா பல வருடங்கள் கழித்து ஒரு பொம்மை வரையும் கலைஞனாக வேலை செய்கிறார் அப்போது வரையும் போது நந்தினி போலவே ஒரு பொம்மை வருகிறது அதாவது கன்னத்தில் ஒரு மச்சத்துடன் ஒரு பொம்மைய பெறுவது அந்த பொம்மையை நந்தினி வாழ்ந்து கொண்டிருக்கிறார். அந்த பொம்மையை யார் தொட்டாலும் வேறு எந்த ஆண்கள் தொட்டாலும் இவருக்கு கோபம் வரும் அவரின் தங்கை குழந்தையின் காதணி விழாவிற்காக ஊருக்கு செல்ல இருக்கு ம்போது இந்த பொம்மையை விற்று விடாதீர்கள் என்று சொல்லிவிட்டு போவார்கள். ஆனால் அந்த கம்பெனியின் சூப்பர்வைசர் அதை விற்று விடுகிறார் இதனால் கோபப்பட்டு அவரை கொலை செய்திருக்கிறார் எஸ் ஜே சூர்யா இந்த கொலையால் இவருக்கு ஏற்படும் பிரச்சனைகள் அதோடு நந்தினி உடன் அவர் வாழும் வாழ்க்கை இதைத்தான் திரைக்கதையாக இந்த படத்தில் சொல்லி இருக்கிறார்கள்.
இது ராதா மோகன் படமா என்ற ஒரு கேள்விக்குறி ரசிகர்களுக்கு கண்டிப்பாக வரும் அப்படி ஒரு கதை அமைப்பு திரைக்கதை அமைப்பு ஏற்கனவே ஆங்கிலத்தில் மேனி குயின் என்று வந்த ஆங்கில படத்தின் தகவல் தான் இந்த படம் என்று சொல்லப்படுகிறது ராதா மோகன் படங்கள் என்றாலே அழுத்தமான கதையும் உணர்ச்சிபூர்வமான கதைகளை கொண்ட படமா தான் நான் பார்த்திருக்கிறோம் ஆனால் இந்த படம் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு படமாக இருக்கிறது ராதா மோகன் இந்த கதை எஸ் ஜே சூர்யாவுக்காக எழுதினாரா என்று கேள்வியும் எழுதுகிறது. பொறுமையை சோதிக்கும் திரைக்கதை தேவையில்லாத கத்தல் நெல்லிய வைக்கும் காட்சிகள் படத்திற்கு மிகவும் பெரிய மைனஸ நடிகர் எஸ் ஜே சூர்யா தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை மீண்டும் இந்த படத்தில் நிரூபித்திருக்கிறார் ஒவ்வொரு காட்சியிலும் தன் நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார் குறிப்பாக நந்திணையாக வரும் பிரியா பவானி சங்கர் அவரும் பேசும் காட்சிகள் ஒவ்வொன்றும் நம்மளை உருகவும் வைத்திருக்கிறார் என்று சொல்லலாம் மொத்த படத்தையும் எஸ் ஜே சூர்யாவும் தாங்கி பிடித்து இருக்கிறார் என்று சொன்னால் மிகை ஆகாது.
நந்தினி ஆக வரும் பிரியா பவானி சங்கர் தனக்கு கொடுத்த பங்கை மிக அற்புதமாக கணக்கச்சிதமாக குறிப்பாக காதல் கடிதம் படிக்கும் காட்சியில் மிக அற்புதமாக உணர்வுபூர்வமாக நடித்திருக்கிறார் என்றே சொல்லலாம் பல இடங்களில் நம்மளை நெகிழ வைத்துள்ளார் நடிப்பில் ப்ரியா பவானி சங்கர் நடிப்புக்கு இந்த படம் மிகப்பெரிய ஒரு மைல்கல்லாக இருக்கும்
சாந்தினி தமிழரசன் ஒரு சில காட்சிகள் வந்தாலும் நிறைவாக நடித்திருக்கிறார் அதேபோல டவுட் டவுட்டு செந்தில் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் அருள் டி சங்கர் இவர்கள் நடிப்பு மிகவும் பாராட்டத்துக்குரியதாக இருக்கிறது தன் கதாபாத்திரத்தை உணர்ந்து மிகவும் அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.
படத்தின் மிகப்பெரிய பலம் யுவன் சங்கர் ராஜாவின் இசையும் ரிச்சர்ட் ஒளிப்பதிவு என்று சொல்லலாம்
பொம்மை போன்ற கதைகள் நாம் ஏற்கனவே நிறைய தமிழ் சினிமாவில் பார்த்திருக்கிறோம் குடைக்குள் மழை காதலில் விழுந்தேன் போன்ற படங்களின் தகவலாக தான் இந்த படம் இருக்கிறது கதையிலும் திரைக்கதையிலும் இயக்குனர் கவனம் செலுத்தி இருக்கலாம்
மொத்தத்தில் பொம்மை பொம்மைதான்
