Wednesday, April 29
Shadow

பாண்ட் சீரியஸ் நோ டைம் டு டை – ஏப்ரல் 3ல் ரிலீஸ்!

பாண்ட் பட வரிசைகளில் அடுத்ததாக வர இருப்பது, நோ டைம் டு டை. டேனியல் கிரேக், ரால்ஃப் பியன்னஸ், நவோமி ஹாரிஸ், ராமி மலேக் உட்பட பலர் நடிக்கின்றனர்.

தொடர்ந்து நான்கு பாண்ட் படங்களில் நடித்த டேனியல் கிரேக், இந்தப் படத்தில் நடிக்க மாட்டேன்-ன்னு முதலில் சொல்லிப்புட்டார்.

இதனால், இட்ரிஸ் எல்பா என்ற நடிகர், பாண்ட் கேரக்டரில் நடிப்பதாகக் கூறப்பட்டது. பாண்ட் கேரக்டரில் நடிக்கும் முதல் கறுப்பின ஹீரோ அவர்தான் என்றும் கூறப்பட்டுச்சு.

ஆனா, ஓகே ஆனா இதுதான் என் கடைசி பாண்ட் படம் என நடிக்கச் சம்மதிச்சா கிரேக்.

படத்தை ஸ்லம்டாக் மில்லினர் இயக்குனர் டோனி பாய்ல் (danny boyle) இயக்குவதாக இருந்தது. இதில் பாண்ட் கேரக்டர் இறப்பது போன்ற கிளைமாக்ஸை மாற்றச் சொன்னார் பாய்ல். காரணமாக, உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை கொண்ட ஹீரோவை அப்படி சாகடிக்கக் கூடாது என்றார் ஒரு ரசிகனாக. மறுத்தார் திரைக்கதை ஆசிரியர்.

அப்புறமென்ன படத்தில் இருந்து வெளியேறிவிட்டார், ரோசக்கார பாய்ல்.

பின்னர் கேரி ஜோஜி புகுனகாவை இயக்குனராக்கியது தயாரிப்பு. இவர், சின் நோம்ப்ரே, ஜேன் ஐரே, பீட்ஸ் ஆப் நோ நேஷன் ஆகிய படங்களை இயக்கியவர்.

டைரக்டர் பஞ்சாயத்து, கிரேக் மறுப்பு, ஷூட்டிங்கில் விபத்து என இந்தப் படத்துக்கு ஏகப்பட்ட தடங்கல்கள். இது அத்தனையையும் மீறி, குறித்த நேரத்தில் இல்லாமல் கொஞ்சம் தள்ளியே ரிலீஸ் ஆகிறது, இந்த பாண்ட் படம்.

அதாவது வரும் ஏப்ரல் 3-ல் ரிலீஸ் ஆகிறது -ன்னு தகவல் வந்திருக்குது