Monday, July 7
Shadow

பூமராங் – திரைவிமர்சனம் (சமுக விழிப்புணர்வு ) Rank 3.5/5

ஆர். கண்ணன் இயக்கத்தில் அதர்வா, மேகா ஆகாஷ், ஆர். ஜே. பாலாஜி, சுஹாசினி மணிரத்னம்இந்துஜா ,உபேன் படேல் ஆகியோரது நடிப்பில் வெளியாகியுள்ள அரசியல் ஆக்‌ஷன் மசாலா படம் பூமராங்.

கதை
மென்பொருள் பொறியாளரான அதர்வா வேலையை ராஜினாமா செய்துவிட்டு சொந்த ஊருக்கு வருகிறார். அங்கு அரசியல்வாதிகள் செயல்படாமல் இருப்பதை தட்டிக் கேட்கிறார். தன் நண்பர்களுடனும் மக்களுடனும் சேர்ந்து போராட்டம் நடத்துகிறார். மேகா ஆகாஷை காதலிக்கிறார். வில்லனின் அடியாட்களிடம் இருந்து தப்பித்து அதர்வா தன் நோக்கத்தை நிறைவேற்றினாரா என்பது மீதிக் கதை.

கண்டேன் காதலை, ஜெயம் கொண்டான், சேட்டை, இவன் தந்திரன் உள்ளிட்ட வெரைடியான கதைகளம் கொண்ட படங்களை இயக்கி பல தரப்பட்ட ஆடியன்ஸை கவர்ந்த இயக்குநர் கண்ணன். தற்போது புமராங் மூலம் அரசியல் நெயாண்டி ஜானருக்கு வந்துள்ளார். இன்றைய டிரெண்டான மோடி அரசு திட்டங்கள் குறித்த கிண்டல் படத்தில் ஆங்காங்கே தூவப்பட்டுள்ளது.

சமகால மத்திய, மாநில அரசியலை விமர்சிக்கும் படங்கள் ஏகத்துக்கு வந்துவிட்டபோதிலும் அதே கதையை சுவாரஸ்யம் குறையாமல் இயக்கியுள்ள கண்ணனுக்கு பாராட்டுக்கள்.

படத்தின் கதையை பார்க்கலாம்

படம் ஆரம்பத்தில் தீயில் சிக்கி முகம் முழுவதும் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் ஒருவர் அனுமதிக்கப்படுகிறார். அவரது முகத்தையே கண்ணாடியில் பார்க்க முடியாமல் உடைந்து போகிறார். அந்தளவிற்கு அவரது முகம் சிதைந்து போகிறது. அதன்பின் முகம் மாற்று அறுவைசிகிச்சை செய்யலாம் என மருத்துவர் கூற, அதற்கு ஒப்புக்கொண்டு மூளை சாவடைந்த நிலையில் இருக்கும் அதர்வாவின் முகத்தை எடுத்து அவருக்கு வைக்கின்றனர்.

ஒரு குறும்படம் இயக்குவதன் மூலம் நாயகி மேகா ஆகாஷுக்கும் அதர்வாவிற்கும் பழக்கம் ஏற்படுகிறது. இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறுகிறது. இந்நிலையில், ஒரு நாள் அதர்வாவை கொலை செய்ய முயற்சிகள் நடைபெறுகிறது. தன்னுடைய புதிய முகம் தான் இந்த கொலை முயற்சிகளுக்கு காரணம் என அறிந்து, அந்த முகத்திற்கு சொந்தக்காரர் உண்மையில் யார் என அறிய தேடி செல்கிறார் அதர்வா.

இறுதியில் அந்த முகத்திற்கு சொந்தக்காரர் யார்? அவரை கொலை செய்ய முயற்சி செய்தது யார்? அதன் பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் அதர்வா, துறுதுறு இளைஞனாக நடித்திருக்கிறார். காதல், நடனம், ஆக்‌ஷன் காட்சிகளில் திறமையான உழைப்பை கொடுத்திருக்கிறார். கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார்.

முதல் நாயகியாக நடித்திருக்கும் மேகா ஆகாஷ் அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் இந்துஜா கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். முதற்பாதியில் சதீஷ் காமெடியும், பிற்பாதியில் ஆர்ஜே பாலாஜியின் காமெடியும் திரையின் ஓட்டத்திற்கு கைக்கொடுத்திருக்கிறது

விவசாயத்தை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஆர்.கண்ணன். நதிநீர் இணைத்தால் வறண்ட இடங்களையும் விவசாயம் செழிக்கும் என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறார். முதல்பாதி வேகமாகவும், பிற்பாதி மெதுவாகவும் திரைக்கதை நகர்த்திருக்கிறார். ஒரு சில இடங்களில் மற்ற படத்தின் ஞாபகம் வந்து செல்கிறது. நம் நாட்டில் நடந்த பல விஷயங்களை பற்றி ஆங்காங்கே வரும் காட்சிகள் மற்றும் வசனங்களுக்கு படத்திற்கு பிளஸாக அமைந்திருக்கிறது. கதாபாத்திரங்களிடையே நன்றாக வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர்.

ரதன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் சிறப்பாக கொடுத்திருக்கிறார். பிரசன்னா எஸ் சுகுமாரின் ஒளிப்பதிவு, முற்பகுதி நகரத்தையும், பிற்பகுதி கிராமத்தையும் அழகாக படம்பிடித்திருக்கிறது.

மொத்தத்தில் ‘பூமராங்’ சமூகத்துக்கு இன்று மிக முக்கியமான படம் விழிப்புணர்வு Rank 3.5/5