Sunday, December 8
Shadow

சத்ரு – திரைவிமர்சனம் (வீரம்) Rank 3.5/5

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் கதிர் இவரின் படங்கள் எப்போதும் ஒரு தனி ராகம் அதோடு சிறந்த படங்களாகவும் அமையும் இவரின் குறுகிய கால வளர்ச்சி தமிழ் சினிமாவில் மிகவும் பிரமிக்கவைக்கும் அந்த அளவுக்கு கதை தேர்வு என்று தான் சொல்லணும் இவரின் பரிஎரும் பெருமாள் அடுத்து விக்ரம் வேதா போன்ற படங்கள் எடுத்துகாட்டு என்று கூட சொல்லலாம் அதை விட இவர் நடிப்பு மேல் உள்ள நம்பிக்கை தான் இன்று இவர் தளபதி 63 விஜய் படத்தில் நடிக்கிறார் என்று சொல்லலாம் இப்படி பட்ட ஒரு திறமையான நடிகர்ணடிப்பில் வெளிவந்துள்ள படம் தான் சத்ரு

அறிமுக இயக்குனர் நவீன் நஞ்சுண்டன் இயக்கத்தில் இந்த படம் வந்துள்ளது இது ஒரு போலீஸ் கிரைம் திரில்லர் கதை படத்தை அறிமுக இயக்குனர் நவீன் காட்சிக்கு காட்சி மிகவும் விறுவிறுப்பாக கொடுத்துள்ளார். என்று தான் சொல்லணும் முதல் படம் போல இல்லாமல் மிகவும் அற்புதமான திரைகதை மூலம் படத்தை மிகவும் சிறப்பாக கொடுத்துள்ளார்.

படத்தின் மிக பெரிய பலம் என்று சொன்னால் படத்தின் வில்லன் லகுபரன் என்று தான் சொல்லணும் அவரின் கதாபாத்திரம் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது படத்தை கதிர் எவ்வளவு தாங்கி உள்ளாரோ அந்த அளவுக்கு சமமாக தாங்கி உள்ளார்

படத்தில் கதிர்,சிருஷ்டி டாங்கே,லகுபரன்,பொன்வண்ணன், நீலிமா, மாரிமுத்து, ரிஷி, சுஜா வாருணி, பவன், அர்ஜுன் ராம், ரகுநாத், கியான், சத்து, குருமூர்த்தி, பாலா ஆகியோர் நடித்துள்ளனர்.

லகுபரன் தனது நண்பர்களுடன் சேர்ந்து பணக்கார வீட்டு குழந்தைகளாக தேர்ந்தெடுத்து கடத்தி, அவர்களிடம் இருந்து பணம் பறிக்கிறார். அந்த வகையில் ஒருவரின் குழந்தை கடத்தப்பட, தனது குழந்தையை மீட்க போலீசின் உதவியை நாடுகிறார்.

மாரிமுத்து தலைமையிலான காவல் நிலையத்தில் எஸ்.ஐ.யாக இருக்கும் கதிர் இந்த வழக்கை விசாரிக்கிறார். குழந்தையின் தந்தையிடம் பணத்தை வாங்கிச் செல்லும் லகுபரனின் நண்பனை டிராக்கர் மூலமாக கண்டுபிடித்து சுட்டுக் கொன்றுவிட்டு குழந்தையை மீட்டுச் செல்கிறார். இதையடுத்து நண்பனை கொன்ற கதிரை, தனது நண்பர்களுடன் சேர்ந்து பழிவாங்க திட்டமிடுகிறார் லுகுபரன்.

இதற்கிடையே கதிர் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். கதிரின் மொத்த குடும்பத்தையே அழிக்க நினைக்கும் லகுபரன், அவரது அண்ணன் குழந்தையை காரை ஏற்றி கொல்ல முயற்சிக்கிறார். குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொல்லப்போவதாக கதிரை மிரட்டுகிறார்.

இறுதியில், தனது வேலையை இழந்த கதிர், லகுபரன் மற்றும் அவரது கூட்டாளிகளை எப்படி சமாளிக்கிறார்? தனது குடும்பத்தை எப்படி காப்பாற்றுகிறார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

கதிர் படம் முழுக்க ஒரு மிடுக்கான போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். தனது பணியை நேர்மையுடன் செய்யும் போலீஸ் கதாபாத்திரத்தில் மிளிர்கிறார். சிருஷ்டி டாங்கே கொடுத்த கதாபாத்திரத்துக்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைக்கிறார்.

ஹீரோவாக நடித்து வந்த லகுபரன், இந்த படத்தில் வில்லனாக மிரட்டிச் சென்றிருக்கிறார். அவருக்கு இது பெயர் சொல்லும் படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. லகுபரனின் நண்பர்களாக வரும் அனைவருமே சிறப்பாக நடித்துள்ளார்கள். பொன்வண்ணன், மாரிமுத்து அனுபவ நடிப்பையும், சுஜா வருணி சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார்கள்

போலீஸ், திருடன் கதையை ரசிகர்களுக்கு ஏற்றவாறு திரில்லர் பாணியில் இயக்கியிருக்கிறார் நவீன் நஞ்சுண்டான். அனைத்து கதாபாத்திரங்களையும் சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார். திரைக்கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். முதல் பாதி விறுவிறுப்பாகவும், பிற்பாதி வேகம் குறைவாகவும் திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார்.

அம்ரிஷின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

மொத்தத்தில் ‘சத்ரு’ புத்திசாலி Rank 3.5/5