பூமராங் – திரைவிமர்சனம் (சமுக விழிப்புணர்வு ) Rank 3.5/5
ஆர். கண்ணன் இயக்கத்தில் அதர்வா, மேகா ஆகாஷ், ஆர். ஜே. பாலாஜி, சுஹாசினி மணிரத்னம்இந்துஜா ,உபேன் படேல் ஆகியோரது நடிப்பில் வெளியாகியுள்ள அரசியல் ஆக்ஷன் மசாலா படம் பூமராங்.
கதை
மென்பொருள் பொறியாளரான அதர்வா வேலையை ராஜினாமா செய்துவிட்டு சொந்த ஊருக்கு வருகிறார். அங்கு அரசியல்வாதிகள் செயல்படாமல் இருப்பதை தட்டிக் கேட்கிறார். தன் நண்பர்களுடனும் மக்களுடனும் சேர்ந்து போராட்டம் நடத்துகிறார். மேகா ஆகாஷை காதலிக்கிறார். வில்லனின் அடியாட்களிடம் இருந்து தப்பித்து அதர்வா தன் நோக்கத்தை நிறைவேற்றினாரா என்பது மீதிக் கதை.
கண்டேன் காதலை, ஜெயம் கொண்டான், சேட்டை, இவன் தந்திரன் உள்ளிட்ட வெரைடியான கதைகளம் கொண்ட படங்களை இயக்கி பல தரப்பட்ட ஆடியன்ஸை கவர்ந்த இயக்குநர் கண்ணன். தற்போது புமராங் மூலம் அரசியல் நெயாண்டி ஜானருக்கு வந்துள்ளார். இன்றைய டிரெண்டான மோடி அரசு திட்டங்கள் குறித்த கிண்டல் படத்தில் ஆங்காங்கே தூவ...