Saturday, March 25
Shadow

Gallery

படத்தயாரிப்பாளராக ஏ ஆர் ரஹ்மானை ஊக்குவித்த மணி ரத்னம்*

படத்தயாரிப்பாளராக ஏ ஆர் ரஹ்மானை ஊக்குவித்த மணி ரத்னம்*

Gallery, Latest News, Top Highlights
இரு முறை ஆஸ்கர் விருதுகளை வென்ற இசையமைப்பாளரான ஏ ஆர் ரஹ்மான், 99 சாங்ஸ் திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார். இதற்கு அவருக்கு ஊக்கமளித்தது பிரபல இயக்குநர் மணி ரத்னம் என்பது பல பேருக்கு தெரியாத விஷயம். நீண்ட காலமாக இருவரும் இணைந்து பணியாற்றி வரும் நிலையில், படமெடுப்பதும் இசையமைப்பது போன்றது தான் என மணி ரத்னம் கற்றுத் தந்த பாடமே 99 சாங்ஸ் படத்தை எழுதவும், தயாரிக்கவும் ரஹ்மானுக்கு உந்துசக்தியாக அமைந்தது. “திரைப்படம் எடுப்பது பாடலை உருவாக்குவது போன்றது தான் என்று மணி சார் ஒரு முறை என்னிடம் கூறினார். உதாரணமாக, பாடலை பற்றிய அறிமுகம், மையக்கரு, மெட்டு உங்களிடம் உள்ளது. பின்னர் நீங்கள் பின்னணி இசைக்கோர்ப்பையும் இதர பணிகளையும் செய்கிறீர்கள். இவ்வாறாக அழகான முறையில் பாடலுக்கான பயணம் நிறைவுறுகிறது. இதை அவர் என்னிடம் கூறிய போது தான், நமது சொந்த மொழியில் இன்னுமொரு கலை...