
தக் லைஃப் – திரைவிமர்சனம். Rank 3.5/5
தக் லைஃப் - திரைவிமர்சனம்
– மெகா மாஸ் ஆக்ஷன் படமாக வெளியீடு!
இயக்கம்: மணிரத்தினம்
நடிப்பு: கமல்ஹாசன், எஸ்.டி.ஆர், திரிஷா மற்றும் நட்சத்திரப் பட்டாளம்
இசை: ஏ.ஆர். ரகுமான்
தயாரிப்பு: ராஜ்கமல் இன்டர்நேஷனல் & மெட்ராஸ் டாக்கீஸ்
மாபெரும் வெற்றிப் பெற்ற ‘நாயகன்’ படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்துள்ள உலகநாயகன் கமல்ஹாசனும், இயக்குனர் மணிரத்தினமும் “தக் லைஃப்” திரைப்படத்தில் சரித்திரமான கூட்டணியை துவக்கியுள்ளனர். அவர்களுடன் இளம் ஹீரோ எஸ்.டி.ஆர் இணைந்து நடித்துள்ளார்.
தக் லைஃப் என்பது ஒரு கேங்ஸ்டர் கதையம்சத்துடன் கூடிய குடும்பத்தோடு பிணைந்த உணர்வுப்பூர்வமான படமாகும். கமல்ஹாசன் சக்திவேல் எனும் தாதா வேடத்தில் அசத்துகிறார். அவரால் வளர்க்கப்படும் சிறுவன் அமரன் (எஸ்.டி.ஆர்) ஒரு கட்டத்தில் அவரது எதிரியாக மாறுகிறார். இருவருக்கும் இடையே நடைபெறும் மோதல் பரபர...