Tuesday, December 7
Shadow

Review

டாக்டர் – திரை விமர்சனம் (ஆரோக்கியமானவர். ) Rank 4.5/5

Latest News, Review
- நெல்சன் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்,  நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம்.  ராணுவத்தில் மருத்துவராக பணியாற்றுபவர் வருண் (சிவகார்த்திகேயன்). அவர் தனது காதலி பத்மினியுடன் (பிரியங்கா அருள் மோகன்) இணைந்து குடும்ப வாழ்க்கையில் இணைய முடிவு செய்கிறார்.   துரதிருஷ்டவசமாக, அவரது வாவில் விஷயங்கள் திட்டமிட்டபடி நடக்கவில்லை, அவர்கள் பிரிந்து செல்ல முடிவு செய்தனர். பத்மினியின் தங்கை கடத்தப்பட்டதை அறிந்த வருண், டாக்டரின் கதை பிரிந்த தருணத்திலிருந்து தொடங்குகிறது. கடத்தல்காரனை டாக்டர் வருண் எப்படிக் கண்டுபிடித்து  ஒரு பெரிய கடத்தல் மோசடியைக் கண்டுபிடித்தார்? என்பதே படத்தின் மீதி கதை. சிவகார்த்திகேயன் தனது வழக்கமான கலகலப்பான நடிப்பைத் தவிர்த்து விட்டார். அவர் தனது பழக்கவழக்கங்களைத் தவிர்ப்பதற்காக, மிகவும் அமைதியான, அணுகுமுறையைப...

லிப்ட் திரை விமர்சனம் (ரேட்டிங் 4.5/5)

Latest News, Review
இயக்குநர் வினித் வரப்பிரசாத் இயக்கத்தில் கவின், அம்ரிதா ஐயர், காயத்ரி ரெட்டி நடிப்பில் வெளியாகியுள்ள லிப்ட் திரைப்படத்தின் திரைவிமர்சனத்தை இங்கே காணலாம். ஐடி கம்பெனியில் வேலைபார்க்கும் குரு (கவின்) மற்றும் அதே நிறுவனத்தில் எச் ஆர்ஆக இருக்கும் ஹரிணி (அம்ரிதா) இருவருக்கும் ஆரம்பத்தில் மோதல் இருந்ததை அவர்களின் பிளாஷ்பேக் மீட்டிங்காக காட்டுகின்றனர். கவின் ஒரு பிராஜெக்டிற்காக பெங்களூரிலிருந்து டிரான்ஸ்ஃபர் ஆகி சென்னை நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். அப்போது இரவு நேரத்தில் ஓவர் டைம் டியூட்டி பார்த்துவிட்டு வீடு திரும்ப லிப்ட் ஏறியதும் அங்கு பல அமானுஷயங்கள் நடக்கிறது. இதற்கிடையே கதாநாயகியும் லிப்டில் வரக் கவின் தான் லிஃப்டை பூட்டி அவரை பயமுறுத்துவதாக ஹரிணி நினைத்துச் சண்டையிடுகிறார். ஆனால், குரு நான் பூட்டவில்லை இங்குப் பல அமானுஷ்யங்கள் நடக்கிறது எனக் கூறியும் அதை ஹரிணி நம்பவில்லை. உடனே லிப்ட...
பேய் மாமா திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

பேய் மாமா திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

Latest News, Review
இயக்குநர் ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் யோகி பாபு, எம்எஸ் பாஸ்கர், துரை, கோவை சரளா, மாளவிகா மேனன், துரை, மொட்டை ராஜேந்திரன் உட்படப் பல நடிகர்கள் நடிப்பில் வெளி வந்துள்ள பேய் மாமா திரைப்படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். பங்களாவில் பேய்கள் இருப்பதால் அந்த பங்களாவை யாரும் வாங்க முன் வர மாட்டார்கள். பின் அந்த பங்களாவில் இருக்கும் பேய்களை விரட்ட முயலும் வில்லன் குழுவிற்கும் பேய்களை பாபு குழுவுக்கும் இடையே நடக்கும் நகைச்சுவை கலந்த திகில் கதை தான் பேய் மாமா. இந்த படத்தில் பல நகைச்சுவை நடிகர்கள் நடித்திருந்தாலும், நகைச்சுவை என்ற பெயரில் ஸ்பூஃப் ஃபார்முலாவை நகைச்சுவை சக்தி சிதம்பரம் இந்த படத்தில் கையாண்டிருக்கிறார். நித்தியானந்தாவை இமிடேட் செய்வது, யூடியூப் சேனலை கலாய்ப்பது என வழக்கமான படமாகவே இருக்கிறது. யோகி பாபு தன்னுடைய வழக்கமான நடிப்பையே இந்த படத்தில் காண்பித்து உள்ளார். மேலும...
சின்னஞ்சிறு கிளியே’ – திரைவிமர்சனம் Rank 3.5/5

சின்னஞ்சிறு கிளியே’ – திரைவிமர்சனம் Rank 3.5/5

Latest News, Review
மருத்துவத்துறை மற்றும் அதைச்சார்ந்த தொழில்த்துறையில் இருப்பவர்கள், நோயாளிகளை குணப்படுத்த மருந்து தயாரிப்பதை விட, புதிய நோய்களை உருவாக்குவதற்கான கிருமிகளை பரப்பிவிட்டு, பிறகு அதற்கான மருந்துகளை வியாபாரம் செய்கிறார்கள், என்ற அதிர்ச்சியான உண்மையை அழுத்தமாக பதிவு செய்திருப்பதோடு, இயற்கை மருத்துவத்தின் அவசியத்தையும் பேசியிருக்கிறது ‘சின்னஞ்சிறு கிளியே’ படம். நாயகனாக நடித்திருக்கும் செந்தில்நாதன், படம் முழுவதும் வேட்டியுடன் கம்பீரமாக நடித்திருப்பவர், காதல் காட்சிகளில் இறகு போல பறக்கிறார். நாயகி சாண்ட்ரா நாயர், நாயகனின் தாத்தாவாக நடித்திருக்கும் கவிஞர் விக்ரமாதித்யன், குள்ளப்பள்ளி லீலா, செல்லத்துரை ஆகியோர் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற தேர்வு. பாண்டியன் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் அழகாக இருக்கிறது. காதல் காட்சிகளில் கையாண்டிருக்கும் கோணங்கள் ரசிக்க வைக்கிறது. மஸ்தான் காதரின...
வீராபுரம்’ – திரைவிமர்சனம்  Rank 3/5

வீராபுரம்’ – திரைவிமர்சனம் Rank 3/5

Latest News, Review
கிராமத்தில் ஓட்டல் நடத்தி வரும் நாயகன் மகேஷின், தந்தை உள்ளிட்ட மூன்று பேர் மணல் திருடும் லாரி மோதி இறந்துவிடுகிறார்கள். இதனால், மணல் திருட்டை நிறுத்தும் நடவடிக்கையில் நாயகன் ஈடுபட, அதனால் ஏற்படும் பிரச்சனைகளும், அவற்றை நாயகன் எப்படி சமாளித்து சாதிக்கிறார் என்பதையும் சொல்வது தான் ‘வீராபுரம்’. ‘அங்காடித்தெரு’ படத்திற்கு பிறகு நடிகர் மகேஷ் ஒரு நல்ல படத்தில் நடித்திருக்கிறார். வேகமும், வீரமும் நிறைந்த கிராமத்து இளைஞராக வலம் வரும் மகேஷுன் நடிப்பு கதாப்பாத்திரத்திற்கு பலம் சேர்த்துள்ளது. நாயகியாக நடித்திருக்கும் மேக்னா, கொடுத்த வேலையை குறை வைக்காமல் செய்திருப்பதோடு, கூடுதல் அழகோடும் இருக்கிறார். படத்தில் நடித்த மற்ற நடிகர், நடிகைகளும் தங்களது வேலையை குறை வைக்காமல் செய்திருக்கிறார்கள். ரித்தேஷ் மற்றும் ஸ்ரீதர் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்துள்ளது. பி.எஸ்....

ஆறாம் நிலம் – திரைவிமர்சனம்

Latest News, Review
ஈழத்தில் இன்றுவரை நிகழும் மனிதாபிமான மீறலை கண்முன் காட்டும் ஆறாம் நிலம். ஐபிசி தமிழ் நடத்திய குறுந்திரை போட்டியில் வெற்றிபெற்ற இயக்குனர் ஆனந்த ரமணன் இயக்கியுள்ள படம் ஆறாம் நிலம். 2009ம் ஆண்டு சிங்கள ராணுவத்திற்கும் விடுதலை புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிப் போரின் போது ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இரண்டு தரப்பினருக்கும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது. உயிர்பிழைத்தோர் ஏராளமானோர் அந்நாட்டு அரசிடம் சரணடைந்தனர். ஆனால் சரணடைந்தவர்கள் பல பேர் இன்றுவரை என்ன ஆனார்கள் என்றும் எப்படி இருக்கிறார்கள் என்றும் யாருக்குமே தெரியாத மர்மமாக உள்ளது. இவர்கள் எல்லாம் காணாமல் போனவர்கள் அல்ல அரசால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள். அவர்களது குடும்பத்திற்குமே இதுகுறித்து தெரியாது. இதனை மையப்படுத்தி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அங்கிருக்கும் ஏராளமான வீடுகளில் குடும்பத்தலைவன் இல்லை. இன்னும் சிலரோ தனது கை கால்களை இழந்த...
ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் – திரைவிமர்சனம் ( கிராமத்து கவிதை) Rank 4.5/5

ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் – திரைவிமர்சனம் ( கிராமத்து கவிதை) Rank 4.5/5

Latest News, Review
சினிமாவில் சம்பாதித்து அதை மீண்டும் சினிமாவுக்கு கொடுப்பது என்ற பட்டியலில் ஒரு சிலர் தான் பிடிப்பார்கள் அந்த வகையில் கணவனும் மனைவியுமாக சேர்ந்து இதை செய்கிறார்கள். ஆம் சூர்யா மற்றும் ஜோதிகா இந்த தம்பதிகள் வாழ்க்கையில் எந்த அளவுக்கு வெற்றிகரமாக உள்ளார்களே அதே போல தான் சினிமாவிலும் இவர்கள் வாழ்க்கை பலருக்கு உதாரணமாக உள்ளது. அது போல இவர்கள் தயாரிக்கும் படமும் தரமான படங்கள் தான் சமீபத்தில் இவர்களின் படைப்பான சூரரை போற்று உலக அளவில் பேசபட்ட ஒரு படமாக அமைந்தது. அந்த வகையில் இவர்களின் அடுத்த படைப்பான ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படமும் கிராமத்து கவிதை என்று தான் சொல்லணும். மிக சிறந்த வாழ்வியல் யதார்த்தை சொல்லி இருக்கும் படம் தமிழ் சினிமா இருக்கும் வரை கிராமத்து மண் வாசனை மறையாது மறக்காது என்பதற்கு ஒரு உதாரணம் இந்த படம். இன்று அப்பாவி மக்களும் குறிப்பாக கிராமத்து மக்கள் அரசியல்வாதிகளின் ...

அனபெல் சேதுபதி திரை விமர்சனம் (ரேட்டிங் 4/5)

Latest News, Review
இயக்குனர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, டாப்சி பன்னு, ஜார்ஜ் மரியன், மதுமிதா, சுப்பு பஞ்சு அருணாசலம், யோகி பாபு, சேத்தன், ராதிகா, தேவதர்ஷினி, சுரேகா வாணி, ஜெகபதிபாபு ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள அனபெல் சேதுபதி படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்பாகக் கட்டப்பட்ட ஒரு பெரிய அரண்மனை. அந்த அரண்மனையில் ஏகப்பட்ட பேய்கள் வசிக்கின்றன. அங்கு பௌர்ணமி தினத்தன்று யார் தங்கினாலும் இறந்து, அவர்களும் ஆவியாகிவிடுவார்கள். அந்த அரண்மனையில் கதாநாயகியும் அவளது குடும்பமும் வந்து தங்குகிறார்கள். அங்கே வசிக்கும் பேய்கள் ஏன் வெளியேற முடியவில்லை, அந்த அரண்மனையின் பின்னால் உள்ள மர்மம் என்ன என்பதுதான் 'அனபெல் சேதுபதி' படத்தின் கதை. படம் சுவாரஸ்யமாகவே துவங்குகிறது. பேய்களும் அறிமுகமாகின்றன. பேயாக வருபவர்களில் பலர் நகைச்சுவை நட்சத்திரங்கள் என்பதால், ஒ...

பிரண்ட்ஷிப் திரை விமர்சனம் (ரேட்டிங் 3/5)

Latest News, Review
இயக்குனர் ஜே.பி.ஆர் & ஷாம் சூர்யா இயக்கத்தில், நடிகர் ஹர்பஜன் சிங், நடிகை லாஸ்லியா நடிப்பில் வெளியாகியுள்ள பிரண்ட்ஷிப் படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். ஹர்பஜன் சிங், சதீஷ் மற்றும் நண்பர்கள் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்து வருகிறார்கள். இதே கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்க ஒரே ஒரு பெண்ணாக இவர்கள் வகுப்பறையில் வந்து சேருகிறார் அனிதா (லாஸ்லியா). சில நாட்களில் ஹர்பஜன் சிங், சதீஷ் ஆகியோருடன் நெருங்கிய நண்பராக மாறுகிறார் லாஸ்லியா. திடீரென்று சில நாட்களில் அவர் இறந்து விடுவார் என்ற தகவல் நண்பர்களுக்கு கிடைக்கிறது. இதனால் வருத்தமடையும் நண்பர்கள், லாஸ்லியாவின் ஆசைகளை நிறைவேற்ற முயற்சி செய்கிறார்கள். இறுதியில் லாஸ்லியாவின் ஆசை என்ன? நண்பர்கள் நிறைவேற்றினார்களா? லாஸ்லியாவுக்கு என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை. நாயகனாக நடித்திருக்கும் ஹர்பஜன் சிங், படம...

கோடியில் ஒருவன் திரை விமர்சனம் (ரேட்டிங் 4.5/5)

Latest News, Review
இயக்குனர் ஆனந்தகிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி ஆத்மிகா நடிப்பில் நிவாஸ் கே பிரசன்னா மற்றும் அர்ஜுன் ஆகியோரை இசையில் உருவாகியுள்ள திரைப்படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம். கிராமத்தில் வசிபவர் விஜய ராகவன் (விஜய் ஆண்டனி). அவரது அம்மாவுக்கு கலெக்டர் அவரை ஆக்கி பார்க்க வேண்டும் என்பது ஆசை. தன்னுடைய அம்மாவின் ஆசையை நிறைவேற்றுவதற்காக சென்னை வந்து ஹவுஸிங் போர்ட் பகுதியில் குடியேறுகிறார். அந்த பகுதியின் தரத்தை உயர்த்தவும் மக்களின் நிலையை உயர்த்தவும் சில வேலைகளை செய்ய இவருக்கு வில்லன்களால் சிக்கல்கள் உருவாகின்றன. இவற்றிலிருந்து எப்படி மீண்டு வருகிறார் கலெக்டர் ஆனாரா இல்லையா என்பதுதான் இந்தப் படத்தின் கதைக்களம். விஜய் ஆண்டனி துடிப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளார். ஆக்சன், எமோஷன் என இரண்டு மணி ஸ்கோர் செய்யும் விஜய் ஆண்டனி ரொமான்ஸில் மட்டும் இன்னும் கொஞ்சம் கவனம்...
CLOSE
CLOSE