
கிடாரி திரை விமர்சனம் (கிடாரி – ரத்தகாட்டேரி ) (RANK 5/2.5)
படத்தின் டைட்டில் ஆரம்பத்தில் காமிக்கும் ரத்தம் கடைசி காட்சி வரை ரத்தம் சசி குமார் மற்றும் அவர் கூட்டணிக்கு ரத்தம் தான் பிடிக்குமா என்பது தெரியவில்லை. இல்லை குருநாதர் பாலா பாணியை அப்படியே பின்பற்றுகிறார என்றும் தெரியவில்லை தன் முதல் படத்தில் இருந்து ரத்தம் தான் பிடிக்கும் போல இருக்கு சுப்ரமணிய புறத்தில் ஆரம்பித்த அருவா வெட்டு கத்தி ரத்தம் இதை தவிர வேறு கோணத்தில் யோசிக்க மாட்டாரா
இது சசிக்குமார் கேரக்டருக்கு ஏத்த ரத்த கலர் போல… எப்பவும்இ போல மக்களை குடும்பம் பாசம் செண்டிமெண்ட் இருக்கிற மாதிரி ஒரு கதை எப்பவும் போல ஒரே மாதிரியான காதல் காட்சிகள் இது தான் இந்த கிடாரி.மற்றப்படி பெருசா எதுவும் இல்லை
தென் மாவட்டங்களில் துரோகத்துக்கு கிடைக்கிற பழிக்கு பழி தான் கதையின் சாராம்சம். எப்பவும் போல வெட்டு ககுத்து அருவா என்று என்ன எப்பவும் மதுரை என்று வருவார் இந்த வாட்டி மதுரை தப்பித்து சாத்தூர்.
...