Tuesday, April 21
Shadow

செக்கசிவந்த வானம் முதல் பார்வை வரதனாக அரவிந்த் சாமி

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘செக்கச்சிவந்த வானம்’. மல்ட்டி ஸ்டாரர் படமான இதில் அரவிந்த் சாமி, சிம்பு, ஜோதிகா, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து இப்படத்தைத் தயாரித்து வருகின்றன. படத்தின் ஷூட்டிங் முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. செப்டம்பர் 28-ம் தேதி படம் ரிலீஸாக இருக்கிறது. தெலுங்கில் இந்தப் படம் ‘நவாப்’ என்ற பெயரில் ரிலீஸாக இருக்கிறது.

இந்நிலையில், இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய் என நான்கு பேரின் லுக்கும் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அரவிந்த் சாமியின் லுக் முதன்முதலாக வெளியாகியுள்ளது. அதில், அவருடைய பெயர் ‘வரதன்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.