Wednesday, October 27
Shadow

சூ மந்திரகாளி திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5/5)

இயக்குனர் ஈஸ்வர் கொற்றவை இயக்கதில், நடிகர்கள் கார்த்திகேயன் வேலு, சஞ்சனா புர்ளி நடிப்பில் வெளியாகியுள்ள சூ மந்திரகாளி படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம்.

அடுததவன் நன்றாக இருந்தால் பொறாமையில் எதையும் செய்யும் தன்னுடைய ஊரைத் திருத்த, மந்திரவாதிப்பெண்னை கூட்டி வர முடிவு செய்யும் ஹீரோ, மந்திர தந்திரம் நிறைந்த யாரும் நுழையாத ஒரு மலை கிராமத்திற்குள், காதலி வேஷமிட்ட தன் நண்பனுடன் நுழைகிறான். மந்திர மாயாஜாலங்கள் நிறைந்த அந்த ஊருக்குள் இருக்கும் ஒரு பெண்ணை காதலித்து எப்படி தன் ஊருக்கு அழைத்து வருகிறான் என்பதே கதை.

முழுக்க முழுக்க புதுமுகங்களின் நடிப்பில், வெளிவந்துள்ள படம் தன சூ மந்திரகாளி. படத்தின் ஆரம்பத்திலேயே லாஜிக் எல்லாம் எதுவும் இல்லை சிரிக்க சிரிக்க மேஜிக் மட்டுமே என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லி விடுகிறார்கள் அதே வகையில் படம் முழுக்கவே சிரிக்கவும் வைத்திருக்கிறார்கள்.

ஆரம்பத்த்ல் காட்டப்படும் பொறாமை நிறைந்த அந்த கிராமமே படம் எப்படியானது என்பதை நமக்கு தெளிவாக சொல்லி விடுகிறது. அடுத்ததாக காட்டப்படும் அந்த மந்திர தந்திர கிராமம் உண்மையிலேயே நம்மையும் ஆச்சர்யப்பட வைக்கிறது.

மந்திர கிராமத்தில் ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்கும் தனி தனி லாஜிக் சொல்லி அதை இறுதி வரையிலும் கொண்டு வந்தது சிறப்பு. படத்தில் சீரியஸ் கதை எதுவும் எல்லாமே காமெடி என்பதை முன்பே முடிவு செய்து களமிறங்கியுள்ளார்கள். அனத் மந்திர கிராமம் அதில் இருக்கும் சக்திகள், அந்த கிராமத்தில் திருடவந்து மாட்டிக்கொண்டு அங்கேயே சுற்றும் திருடன் என சிறு சிறு விசயங்களும் ஈர்க்கிறது.

ஒவ்வொரு பத்து நிமிடத்துக்கும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடி வருவது படத்தின் வெற்றியை உறுதி செய்கிறது. படம் முழுக்க கையில் கத்தி வைத்து தூக்கி கொண்டே திரியும் கிராமத்து ஆள், முழுக்க முழுக்க பெண் வேசத்தில் படம் முழுக்க வரும் வரும நண்பன், ஊரின் தோற்றம்.

போகிற போக்கில் கடவுள் முருகன் முதற்கொண்டு காமெடியாக்கிவிட்டார்கள். ஒளிப்பதிவு குறைந்த பட்ஜெட் என்பதை மறைத்து ஒரு பிரமாண்ட படத்தை பார்க்கும் தோற்றத்தை தந்துள்ளது. இசை படத்தின் மர்மத்திற்க்கு பலம் கூட்டியிருக்கிறது. மாய மந்திர காட்சிகளில் சிஜி தமிழுக்கு புதுசு. ஒரு சின்ன பட்ஜெட் படமென்ற தோற்றத்தை மொத்தமாக மறைத்த வகையில் தொழில்நுட்ப குழு அபாரமாக உழைத்திருக்கிறது. இயக்குநர் ஈஸ்வர் தமிழில் வரும் படங்களில் இருந்து புதிதாக சிந்தித்தற்கே பாராட்டலாம்.

படத்தின் பிளஸ்

வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடி, இசை

படத்தின் மைன்ஸ்

பரபரவென செல்லும் காட்சியில் இடைவேளைக்கு பிறகு பல இடங்களில் தொய்வு ஏற்பட்டது.

மொத்தத்தில் ஒரு சிறந்த ஃபேண்டஸி முயற்சியாக காமெடி கலக்கலில் கவர்கிறது இந்த சூ மந்திரகாளி.

CLOSE
CLOSE