
சினிமா வெறும் பொழுதுபோக்கு அல்ல… சமூக மாற்றத்திற்கான கருவி! – ‘ஹரிணி சுப்பு சினி கிரியேஷன்ஸ்’ புதிய முயற்சி
ஆட்டிசம் பாதித்த குழந்தைகளின் எதிர்காலத்திற்காக 25 ஏக்கரில் வாழ்வாதார வளாகம் – ‘செய் செய்யாதே’ அக்டோபர் 30ல் திரைக்கு வருகிறது
சினிமா என்பது பொழுதுபோக்கைத் தாண்டி சமூகத்தில் நல்ல மாற்றங்களை உருவாக்கும் சக்தியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளது ‘ஹரிணி சுப்பு சினி கிரியேஷன்ஸ்’. புதிய கலைஞர்களுக்கு வாய்ப்பு வழங்குவதுடன், ஆட்டிசம் ஸ்பெக்ட்ரத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் எதிர்காலத்திற்கும் துணை நிற்கும் வகையில் இந்நிறுவனம் தனது செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.
இந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகியுள்ள ‘செய் செய்யாதே’ (Do’s and Don’ts) திரைப்படம் வரும் அக்டோபர் 30, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. மருத்துவரான டாக்டர் எஸ். ராஜா இப்படத்தை இயக்குவதுடன், கதாநாயகனாகவும் நடித்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இசையையும் அவரே கவனித்துள்ளார்.

ஒரு குடும்ப உரையாடலில் தொடங்கிய முயற்சி
மக்களிடம் நேர்மறையான சிந்தனைகளையும் பயனுள்ள கருத்துகளையும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணம், கடந்த 2023ஆம் ஆண்டு டாக்டர் எஸ். ராஜா மற்றும் அவரது மனைவி சுபலட்சுமி ஜெயராம் இடையே நடைபெற்ற உரையாடலின் மூலம் ஒரு திரைப்பட முயற்சியாக உருவெடுத்தது.
மருத்துவத் துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றிய டாக்டர் ராஜா, தான் சந்தித்த மனிதர்களின் வாழ்க்கை, உணர்வுகள் மற்றும் சமூகச் சிக்கல்களை கலை வடிவில் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் திரைப்படத் துறையில் களம் இறங்கியுள்ளார்.
“மனிதநேயம் எங்கள் அடித்தளம்; திறமை வளர்ப்பு எங்கள் பொறுப்பு; தன்னிறைவு வாழ்க்கை எங்கள் இலக்கு” என்ற கொள்கையுடன் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
மருத்துவத்திலிருந்து திரைத்துறை வரை…
கிராமப்புறத்தில் பிறந்து வளர்ந்த டாக்டர் எஸ். ராஜா, தேவகோட்டையில் பள்ளிக் கல்வியையும் மதுரையில் மருத்துவக் கல்வியையும் முடித்தவர். மாணவர் பருவத்திலிருந்தே சேவை மனப்பான்மையுடன் செயல்பட்ட அவர், 18 கிராம மக்களின் நம்பிக்கைக்குரிய மருத்துவராகவும் பணியாற்றியுள்ளார்.
பின்னர் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, ட்ரினிடாட் அண்ட் டொபாகோ மற்றும் அமெரிக்கா என தனது மருத்துவப் பணியை விரிவுபடுத்தியுள்ளார். மருத்துவம் மற்றும் நிர்வாகத் துறைகளுடன் குழந்தை மருத்துவத்திலும் அனுபவம் பெற்றுள்ள இவர், திரைப்பட உருவாக்கத்திலும் ஆர்வம் கொண்டு பயிற்சி பெற்றுள்ளார்.
சுமார் 25 திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்த அனுபவமும், 2018ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் பெற்ற இயக்கப் பயிற்சியும் தற்போது ‘செய் செய்யாதே’ திரைப்படத்தை உருவாக்குவதற்கு அடித்தளமாக அமைந்துள்ளன.

புதுமுகங்களுக்கு கதவு திறக்கும் முதல் படம்
‘செய் செய்யாதே’ திரைப்படத்தின் மூலம் பல புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நடிகர்கள் மட்டுமின்றி பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இப்படத்தில் எச். ராஜா, குரு, தர்ஷினி ரெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பாடல் – ஹரிணி, படத்தொகுப்பு – ராஜா முகமது, ஒளிப்பதிவு – இராமநாத் வாசு, மக்கள் தொடர்பு – பா. சிவக்குமார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து மேலும் சுமார் 10 கதைகள் தயாராக இருப்பதாகவும், அவற்றின் மூலம் இன்னும் பல புதிய திறமையாளர்களை திரைத்துறைக்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
25 ஏக்கரில் ஆட்டிசம் பாதித்தவர்களுக்கான வாழ்வாதார வளாகம்
இந்நிறுவனத்தின் திரைப்பட முயற்சிக்கு பின்னால் இருக்கும் முக்கியமான சமூக நோக்கம், ஆட்டிசம் ஸ்பெக்ட்ரத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு நீண்டகால ஆதரவை உருவாக்குவதாகும்.
திரைப்படங்கள் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் சிறப்பு வாழ்வாதார வளாகம் ஒன்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வளாகத்தில்,
- கல்வி மற்றும் சிறப்பு பயிற்சி
- மருத்துவ மற்றும் சிகிச்சை வசதிகள்
- உணர்வுசார் ஆதரவு
- தொழிற்பயிற்சி
- உற்பத்தி அலகுகள்
- பாதுகாப்பான தங்குமிட வசதிகள்
ஆகியவற்றை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
திரைப்பட வருவாயை தனிப்பட்ட பயன்பாட்டிற்காக எடுத்துக்கொள்ளாமல், சமூக மேம்பாடு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த திட்டங்களுக்கு பயன்படுத்துவதே நிறுவனத்தின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘செய் செய்யாதே’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், ஒரு புதிய திரைப்பட நிறுவனத்தின் அறிமுகம் மட்டுமின்றி, சினிமாவை சமூகப் பொறுப்புடன் இணைக்கும் புதிய முயற்சியாகவும் இப்படம் கவனம் பெற்றுள்ளது.
திரைப்பட ரசிகர்களின் ஆதரவு, புதுமுகக் கலைஞர்களின் கனவுகளுக்கும், சிறப்புப் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளின் எதிர்காலத்திற்கும் வலுசேர்க்கும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Cinema with a Purpose: Harini Subbu Cine Creations Steps In with a Mission for Social Change
Dr. S. Raja’s ‘Do’s and Don’ts’ to hit theatres on October 30, 2026
Chennai: Moving beyond the conventional idea of cinema as mere entertainment, Harini Subbu Cine Creations has embarked on a unique journey that aims to combine filmmaking with social awareness, opportunities for emerging talents and livelihood support for children on the autism spectrum.
The production house is making its debut with the Tamil film ‘Do’s and Don’ts’, which has completed the censor formalities and is gearing up for a theatrical release on October 30, 2026.
The film is directed by Dr. S. Raja, who also plays the lead role. He has additionally handled the story, screenplay, dialogues and music for the film.

A Social Vision Born from a Family Conversation
The idea behind Harini Subbu Cine Creations took shape in 2023 following a conversation between Dr. S. Raja and his wife, Subbalakshmi Jayaram. Their shared desire was to use cinema as a medium to communicate positive thoughts and meaningful social messages to audiences.
Drawing from his extensive experience as a doctor and his interactions with people from different walks of life, Dr. Raja decided to bring real-life emotions and social issues to the screen through cinema.
The production house follows a simple philosophy:
“Humanity is our foundation, nurturing talent is our responsibility, and self-reliant living is our goal.”

From Medicine to Filmmaking
Dr. S. Raja, who comes from a rural background, completed his schooling in Devakottai and pursued his medical education in Madurai. From his student days, he has been actively involved in service-oriented initiatives and went on to become a trusted doctor for people across 18 villages.
His professional journey later took him to Stanley Medical College in Chennai, Trinidad and Tobago and the United States. Along with his experience in medicine, administration and paediatrics, he also developed a passion for filmmaking.
Having appeared in supporting roles in around 25 films, Dr. Raja underwent filmmaking training in Hollywood in 2018. These experiences have contributed to his journey as a filmmaker.
He has also provided free medical services to underprivileged people and extended assistance to several families without seeking publicity.
A Platform for New Talent
One of the key objectives of Harini Subbu Cine Creations is to provide opportunities to newcomers.
The production house has introduced several fresh talents through its debut film, including actors, lyricists, musicians and technicians. The team has also revealed that around 10 more stories are currently in development, opening the possibility of creating further opportunities for aspiring talents.

A 25-Acre Vision for Autism Support
One of the most significant social initiatives planned by the production house is the establishment of a dedicated 25-acre livelihood campus for children on the autism spectrum and their families.
The proposed campus is envisioned to include facilities for:
- Education and specialised learning
- Medical and therapeutic support
- Sensory and emotional care
- Vocational training
- Production and livelihood units
- Safe accommodation facilities
The objective is to create an environment where individuals on the autism spectrum can develop skills, access support and move towards greater independence.

Cinema Revenue to Support Social Development
The production house has stated that the revenue generated through its films is intended to be channelled towards its social initiatives rather than being used solely for the personal benefit of its founders.
The focus will be on supporting education, employment opportunities, livelihood development and long-term welfare initiatives.
‘Do’s and Don’ts’ – The Team
The film features H. Raja, Guru and Darshini Reddy in key roles.
Song: Harini
Editor: Raja Mohamed
Cinematography: Ramanath Vasu
Public Relations: P. Sivakumar
With ‘Do’s and Don’ts’ set to release on October 30, 2026, Harini Subbu Cine Creations is looking to establish itself as a production house where entertainment, emerging talent and social responsibility come together.
The team believes that audience support for the film can contribute not only to the growth of new artists but also towards creating a brighter and more self-reliant future for children and families requiring specialised care.
