Wednesday, November 11
Shadow

ZEE தமிழின் வார இறுதியை இசையும் கலகலப்பும் ஆக்கிரமிக்கிறது! ‘சரிகமப’ புதிய சீசன் மற்றும் ‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’ – அசத்தல் என்டர்டெயின்மென்ட் காத்திருக்கு!

ZEE தமிழின் வார இறுதியை இசையும் கலகலப்பும் ஆக்கிரமிக்கிறது!

‘சரிகமப’ புதிய சீசன் மற்றும் ‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’ – அசத்தல் என்டர்டெயின்மென்ட் காத்திருக்கு!

வார இறுதி நாட்களை குடும்பத்துடன் ரசிக்கும் வகையில் விதவிதமான நிகழ்ச்சிகளை வழங்கி வரும் ZEE தமிழ், இந்த முறை இசை மற்றும் பொழுதுபோக்கை இணைத்து இரண்டு புதிய நிகழ்ச்சிகளுடன் களமிறங்கியுள்ளது.

இசை ரசிகர்களின் விருப்ப நிகழ்ச்சியாக மாறியிருக்கும் ‘சரிகமப’ புதிய சீசனுடன் மீண்டும் வர, அதற்கு நேர்மாறாக கலகலப்பும் போட்டியும் நிறைந்த ‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’ நிகழ்ச்சியும் ரசிகர்களை சந்திக்கிறது.

இவ்விரு நிகழ்ச்சிகளின் அறிமுகத்தை முன்னிட்டு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், ‘சரிகமப’ நடுவர்களான ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், ஸ்வேதா மோகன், தொகுப்பாளர் அர்ச்சனா, ‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’ நிகழ்ச்சியின் நடுவர்களான ஆர்யா, ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளின் சிறப்புகளைப் பகிர்ந்து கொண்டனர்.

10 சீசன்களை கடந்து தொடரும் ‘சரிகமப’ பயணம்

ஒரு பாடல் போட்டி நிகழ்ச்சி என்பதைக் கடந்து, ஏராளமான புதிய திறமையாளர்களை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய நிகழ்ச்சியாக ‘சரிகமப’ திகழ்ந்து வருகிறது. கிராமங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் பாடகர்களுக்கு தங்களது திறமையை வெளிப்படுத்துவதற்கான முக்கியமான மேடையாகவும் இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது.

500 எபிசோட்களை கடந்ததையும் சமீபத்தில் கோவையில் பிரம்மாண்டமாகக் கொண்டாடிய ‘சரிகமப’, தற்போது புதிய சீசனில் புதிய குரல்களுடன் ரசிகர்களை சந்திக்கிறது.

இந்த சீசனில் அனுபவம் வாய்ந்த பாடகர்களான ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ் மற்றும் ஸ்வேதா மோகன் நடுவர்களாக இணைந்துள்ளனர். நிகழ்ச்சியை அர்ச்சனா தொகுத்து வழங்குகிறார்.

புதிய போட்டியாளர்களின் குரல், அவர்களின் பின்னணி மற்றும் அவர்களது இசைப் பயணம் என பல்வேறு உணர்வுகளை ஒரே மேடையில் இணைக்கும் வகையில் இந்த சீசன் உருவாகியுள்ளது.

“சாமானியர்களை சாதனையாளர்களாக மாற்றும் மேடை!” – ஸ்ரீனிவாஸ்

‘சரிகமப’ நிகழ்ச்சியுடன் நீண்ட காலமாக பயணித்து வரும் ஸ்ரீனிவாஸ், இந்த நிகழ்ச்சி தனக்கு மிகவும் நெருக்கமானது என்று தெரிவித்தார்.

குறிப்பாக, கிராமப்புறங்களில் இருந்து வரும் போட்டியாளர்கள் தங்களது திறமையால் வெற்றி பெறுவதைப் பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுவதாகவும், பல நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்திருந்தாலும் ‘சரிகமப’ அளவுக்கு பிரம்மாண்டமான ஒரு நிகழ்ச்சியை பார்த்ததில்லை என்றும் அவர் கூறினார்.

“ஒரு காலத்தில் போட்டியாளர்; இன்று நடுவர்!” – விஜய் பிரகாஷ்

பல ஆண்டுகளுக்கு முன்பு இதே நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற விஜய் பிரகாஷ், தற்போது அதே நிகழ்ச்சியில் நடுவராக இருப்பது பெருமையாக இருப்பதாக தெரிவித்தார்.

‘சரிகமப’ பலருக்கு ஒரு போட்டி மேடையாக மட்டுமல்லாமல், வாழ்க்கையையும் தொழில் வாய்ப்பையும் உருவாக்கித் தந்துள்ளதாகவும், இந்த நிகழ்ச்சியில் இருந்து வந்த பலர் இன்று உலகின் பல்வேறு பகுதிகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இந்த சீசனின் மேடை அமைப்பு, காட்சியமைப்பு மற்றும் தயாரிப்பு அனைத்தும் மிகப்பெரிய அளவில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், நிகழ்ச்சியின் அடிப்படை உணர்வு மட்டும் மாறாமல் தொடர்வதே அதன் சிறப்பு என்றும் தெரிவித்தார்.

360 டிகிரி இசை அனுபவம் – ஸ்வேதா மோகன்

இந்த சீசனில் முதன்முறையாக 360 டிகிரி வடிவில் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான செட்டில் ‘சரிகமப’ நிகழ்ச்சி உருவாகியுள்ளதாக ஸ்வேதா மோகன் தெரிவித்தார்.

போட்டியாளர்களுக்கு நடுவர்களாக மட்டுமின்றி, அவர்களுக்கு வழிகாட்டியாகவும் நண்பர்களாகவும் இருப்பதாகக் கூறிய அவர், நிகழ்ச்சிக்கும் போட்டியாளர்களுக்கும் ரசிகர்கள் வழங்கும் அன்பே தங்களுக்கு மிகப்பெரிய பலம் என்றும் தெரிவித்தார்.

மாஸ் Vs கிளாஸ் – இனி போட்டி வேற லெவல்!

இசை நிறைந்த ‘சரிகமப’வுக்கு அடுத்ததாக, முழுக்க முழுக்க என்டர்டெயின்மென்ட் மற்றும் எனர்ஜி நிறைந்த நிகழ்ச்சியாக உருவாகியுள்ளது ‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’.

ஒரு அணியில் ‘மாஸ் பசங்க’, மற்றொரு அணியில் ‘கிளாஸ் பொண்ணுங்க’ என பிரிக்கப்பட்டு, பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் போட்டியாளர்களாக களமிறங்குகின்றனர்.

ஒவ்வொருவரின் தனித்துவமான ஸ்டைல், அணுகுமுறை, திறமை மற்றும் ஆளுமையை வெளிப்படுத்தும் வகையில் போட்டிகள் மற்றும் சவால்கள் இடம்பெற உள்ளன.

இந்த நிகழ்ச்சியை கிகி விஜய் மற்றும் அசார் இணைந்து தொகுத்து வழங்குகின்றனர்.

“100 சதவீதம் Fun & Entertainment!” – ஆர்யா

இந்த நிகழ்ச்சி குறித்து ஆர்யா பேசுகையில், இது முழுக்க முழுக்க வேடிக்கையும் பொழுதுபோக்கும் நிறைந்த நிகழ்ச்சியாக இருக்கும் என்று தெரிவித்தார்.

ஆண் மற்றும் பெண் பிரபலங்கள் இடம்பெறும் சுவாரஸ்யமான போட்டியாளர்கள் பட்டியல் நிகழ்ச்சிக்கு கூடுதல் பலம் சேர்ப்பதாகவும், போட்டிக்கு நடுவே நட்பு, கலகலப்பான தருணங்கள் மற்றும் எதிர்பாராத சம்பவங்கள் என பல விஷயங்கள் இடம்பெறும் என்றும் கூறினார்.

“இந்த டைட்டிலை ஆர்யாதான் வைக்கச் சொல்லியிருப்பாரோ?” – ரெஜினா கசாண்ட்ரா

நிகழ்ச்சியின் வித்தியாசமான தலைப்பு குறித்துப் பேசிய ரெஜினா கசாண்ட்ரா, ‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’ என்ற பெயர் ஆரம்பத்திலேயே தன்னிடம் ஆர்வத்தை ஏற்படுத்தியதாகக் கூறினார்.

அதே நேரத்தில், ‘கிளாஸ் பொண்ணுங்க Vs மாஸ் பசங்க’ என்று ஏன் வைக்கவில்லை என்ற கேள்வியும் தனக்கு எழுந்ததாக சிரித்தபடி குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சி ZEE தமிழில் ஒரு புதிய முயற்சியாக இருப்பதில் மகிழ்ச்சி என்றும், போட்டி எப்படி இருந்தாலும் பொழுதுபோக்குக்கு குறை இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

“இரண்டு நிகழ்ச்சிகளும் புதிய அனுபவத்தை தரும்!” – ZEE தமிழ்

ZEE தமிழ் Chief Channel Officer வி.எஸ். ராகவன் பேசுகையில், பார்வையாளர்களுக்கு தொடர்ந்து புதிய மற்றும் வித்தியாசமான நிகழ்ச்சிகளை வழங்குவதையே ZEE தமிழ் நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

‘சரிகமப’ ஒரு பாடல் நிகழ்ச்சி மட்டுமல்லாமல், பல திறமையாளர்களின் கனவுகளுக்கும் எதிர்காலத்திற்கும் வழிகாட்டும் முக்கியமான மேடையாக இருப்பதாகவும், புதிய சீசன் இசை, உணர்வு மற்றும் பொழுதுபோக்கு என அனைத்திலும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளதாகவும் கூறினார்.

அதேபோல், ‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’ ஆண், பெண் இருவரின் தனித்துவங்களை புரிந்துகொண்டு ஒருவரை ஒருவர் ரசிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட புதிய அனுபவமாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.

ZEE தமிழ் Programming Head கௌசிக் நரசிம்மன், இரண்டு நிகழ்ச்சிகளும் இதுவரை பார்த்திராத அளவிலான பிரம்மாண்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

‘சரிகமப’ தற்போது ZEE தமிழின் அடையாள நிகழ்ச்சிகளில் ஒன்றாக மாறியுள்ளதாகவும், புதிய சீசன் இன்னும் பெரிய அளவில் ரசிகர்களை சென்றடையும் என்றும் அவர் தெரிவித்தார். ‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’ முழுக்க முழுக்க Fun, Energy மற்றும் Entertainment நிறைந்த நிகழ்ச்சியாக இருக்கும் என்றும் கூறினார்.

ஒளிபரப்பு நேரம்

‘சரிகமப’
சனி & ஞாயிறு – இரவு 7.00 மணி
ZEE தமிழ்

‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் – இரவு 8.30 மணி
ZEE தமிழ்

இந்த வார இறுதியில் இசையை ரசிக்க விரும்புபவர்களுக்கு ‘சரிகமப’வும், சிரிப்பு, போட்டி மற்றும் கலகலப்பை விரும்புபவர்களுக்கு ‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’வும் என ZEE தமிழ் பார்வையாளர்களுக்காக இரட்டை விருந்தைத் தயாராக வைத்திருக்கிறது.

 

ZEE Tamil Turns Up the Weekend Entertainment with ‘Sa Re Ga Ma Pa’ and ‘Mass Pasanga Vs Class Ponnunga’

Two new shows promise a perfect mix of music, fun, competition and entertainment

ZEE Tamil, known for bringing fresh and diverse entertainment to television audiences, is all set to make weekends even more exciting with two new shows — the latest season of the popular singing reality show ‘Sa Re Ga Ma Pa’ and the fun-filled entertainment show ‘Mass Pasanga Vs Class Ponnunga’.

A press meet was held to mark the grand launch of both shows. The event was attended by Sa Re Ga Ma Pa judges Srinivas, Vijay Prakash and Shweta Mohan, host Archana, along with Arya and Regina Cassandra, who are associated with Mass Pasanga Vs Class Ponnunga. The team shared interesting insights into what viewers can expect from the upcoming seasons.

‘Sa Re Ga Ma Pa’ continues its musical journey

Having crossed 10 seasons and recently completing 500 episodes, Sa Re Ga Ma Pa has become much more than a singing reality show. Over the years, the platform has introduced several talented singers to audiences and played an important role in shaping their musical journeys.

The show has also provided aspiring singers from different backgrounds, including rural areas, with an opportunity to showcase their talent on a major platform.

The new season features acclaimed musicians Srinivas, Vijay Prakash and Shweta Mohan as judges, while Archana returns as the host.

With fresh voices, powerful performances and emotional stories, the new season promises to offer viewers another memorable musical experience.

“Sa Re Ga Ma Pa is a platform that turns ordinary people into achievers” – Srinivas

Speaking about his association with the show, Srinivas said that he has been part of Sa Re Ga Ma Pa for nearly a decade and that the journey continues to be extremely special for him.

He expressed his happiness at seeing contestants, especially those coming from rural backgrounds, achieve success through the platform.

Having served as a judge on several shows, Srinivas added that he had never witnessed a production of this scale, describing the new season of Sa Re Ga Ma Pa as exceptionally grand.

“I was once a contestant; today I am a judge” – Vijay Prakash

Vijay Prakash shared a special connection with the show, recalling that he had participated in Sa Re Ga Ma Pa as a contestant several years ago and is now part of the same show as a judge.

He said he feels proud to be part of this journey and highlighted how the programme has given many contestants not just a career, but also a new direction in life.

According to him, several artists who emerged from the show are now performing across the world, reflecting the reach and impact of Sa Re Ga Ma Pa.

He also revealed that the new season has been created on a much larger scale in terms of its stage, visuals and production, while the core soul of the show remains unchanged.

“The new season features a 360-degree set” – Shweta Mohan

Shweta Mohan revealed that the new season introduces a 360-degree set for the first time, creating an immersive environment where audiences can experience music from every angle.

Describing the Sa Re Ga Ma Pa team as a close-knit family, she said the judges are not merely mentors to the contestants but also act as friends and guides throughout their journey.

She added that the love and support received from audiences for the show and its contestants continue to be a major source of strength.

Mass meets Class in a brand-new entertainment show

Moving from music to high-energy entertainment, ZEE Tamil is also introducing ‘Mass Pasanga Vs Class Ponnunga’, a show that brings together two contrasting teams in a fun-filled competition.

With Mass Pasanga on one side and Class Ponnunga on the other, the show features celebrity contestants from different fields.

The participants will bring their individual styles, personalities, attitudes and talents to the competition, creating a combination of challenges, fun and unexpected moments.

The show will be hosted by Kiki Vijay and Azhar, whose energetic chemistry is expected to add to the entertainment quotient.

“It is a 100% out-and-out fun and entertainment show!” – Arya

Speaking about Mass Pasanga Vs Class Ponnunga, Arya described it as a complete package of fun and entertainment.

He said the show features an interesting line-up of male and female celebrity contestants, with participants getting an opportunity to express their individual styles, attitudes, emotions and talents.

He added that the show is not just about competition, but will also feature friendship, fun moments and plenty of unexpected situations.

“I have a doubt that Arya may have suggested this title!” – Regina Cassandra

Regina Cassandra said the title Mass Pasanga Vs Class Ponnunga itself sparked her curiosity.

With a smile, she questioned why the show was not titled Class Ponnunga Vs Mass Pasanga, joking that she even wondered whether Arya had something to do with the choice of title.

She added that she was happy to be part of such a fresh concept on ZEE Tamil and assured viewers that regardless of how intense the competition gets, entertainment will never be in short supply.

“Both shows will offer audiences a new experience” – ZEE Tamil

Speaking about the two new programmes, ZEE Tamil Chief Channel Officer V.S. Raghavan said the channel has consistently focused on bringing new and distinctive concepts to its viewers.

He described Sa Re Ga Ma Pa as more than just a singing reality show, calling it an important platform for talent and dreams. He added that the new season will be bigger and more spectacular, with music, emotion and entertainment at its core.

He also highlighted the contribution of judges Vijay Prakash, Srinivas and Shweta Mohan to the show’s journey.

Talking about Mass Pasanga Vs Class Ponnunga, he said the show is not merely about entertainment, but also offers a new experience by bringing together different perspectives and celebrating the individuality of both men and women.

He expressed his happiness at having Arya and Regina Cassandra associated with the show as mentors and role models.

“Both shows have been created on a massive scale” – Kaushik Narasimhan

ZEE Tamil Programming Head Kaushik Narasimhan said both shows have been produced on a scale unlike anything audiences have seen before.

He described Sa Re Ga Ma Pa as one of the key identities of ZEE Tamil and said the new season would deliver a bigger and more engaging experience for viewers.

He added that Mass Pasanga Vs Class Ponnunga would be packed with fun, energy and entertainment, offering audiences a completely new experience.

When and where to watch

Sa Re Ga Ma Pa
Every Saturday & Sunday at 7:00 PM on ZEE Tamil, with Srinivas, Vijay Prakash and Shweta Mohan as judges and Archana as the host.

Mass Pasanga Vs Class Ponnunga
Every Sunday at 8:30 PM on ZEE Tamil, hosted by Kiki Vijay and Azhar, with Arya and Regina Cassandra joining the show.

With music, emotion and inspiring journeys on one side, and fun, competition and high-energy entertainment on the other, ZEE Tamil is set to make its weekend programming even more exciting with these two new shows.