Wednesday, May 6
Shadow

சிவராத்திரி நன்னாளில் காமெடி – மேஜிக் கொண்டாட்டம்! ‘மரகத நாணயம் 2’ படப்பிடிப்பு உற்சாக பூஜையுடன் தொடக்கம்.

சிவராத்திரி நன்னாளில் காமெடி – மேஜிக் கொண்டாட்டம்!
‘மரகத நாணயம் 2’ படப்பிடிப்பு உற்சாக பூஜையுடன் தொடக்கம்.

2017ஆம் ஆண்டு வெளியான மரகத நாணயம் திரைப்படம் அதன் நகைச்சுவை, பேண்டஸி கலந்த திரைக்கதையால் ரசிகர்களை கவர்ந்து கலகலப்பான வெற்றியை பெற்றது. அந்த வெற்றிப் பயணத்தை தொடரும் வகையில் உருவாகும் அதன் இரண்டாம் பாகமான ‘மரகத நாணயம் 2’ தற்போது அதிகாரப்பூர்வமாக துவங்கியுள்ளது.
சிவராத்திரியை முன்னிட்டு (பிப்ரவரி 16, 2026) சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்ட பூஜை விழாவில், திரையுலகின் பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர். விழாவில் நடிகர் கார்த்தி கிளாப்போர்டை அடித்து துவக்கி வைத்தார். நடிகர் ஆர்யா கேமராவை இயக்க, இயக்குநர் வெங்கட் பிரபு “கேமரா ரோலிங்… ஆக்ஷன்!” என்று கூறி படப்பிடிப்பை ஆரம்பித்து வைத்தார்.


பேஷன் ஸ்டுடியோஸ், தங்கல் டிவி, ஆர்டிசி மீடியா, ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் குட் ஷோ ஆகிய நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பாக உருவாகும் இந்தப் படத்தை சுதன் சுந்தரம், மணீஷ் சிங்கால், துர்காராம் சௌத்ரி, தேவ் மற்றும் கேவி துரை தயாரிக்கின்றனர். முதல் பாகத்தை இயக்கிய ஏஆர்கே சரவன்வே இந்த தொடரையும் இயக்குகிறார் என்பது ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் பட்டியல்:
நாயகனாக ஆதி, நாயகியாக பிரியா பவானி சங்கர் இணைகின்றனர். இவர்களுடன் சத்யராஜ், நிக்கி கல்ராணி, முனீஷ்காந்த், ஆனந்தராஜ், டேனி, அருண்ராஜா காமராஜ், முருகானந்தம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தொழில்நுட்பக் குழு:
இசை – திபு நினன் தாமஸ்
ஒளிப்பதிவு – பி.வி. சங்கர்
கலை இயக்கம் – என்.கே. ராகுல்
படத்தொகுப்பு – திருமலை ராஜன் ஆர்
வசனம் – ராஜேஷ் கண்ணன்
சண்டைப் பயிற்சி – பி.சி. ஸ்டண்ட்ஸ்
ஒலி வடிவமைப்பு – சிங்க் சினிமா
விஎஃப்எக்ஸ் – ரெசோல் FX
மார்க்கெட்டிங் & புரமோஷன் – DEC
மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, அப்துல் A. நாசர் உள்ளிட்டோர்.
‘மரகத நாணயம் 2’ அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே சமூக வலைதளங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. முதல் பாகத்தை விட அதிக நகைச்சுவை, புதுமையான மேஜிக் அம்சங்கள் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதையுடன் இந்தப் படம் உருவாகும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறவுள்ளதாகவும், அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காமெடி – பேண்டஸி கலந்த மறுபடியும் ஒரு திரை அனுபவத்துக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்! 🎬✨

Comedy–Fantasy Celebration Begins on Maha Shivaratri! ‘Maragatha Naanayam 2’ Goes on Floors with a Grand Pooja Ceremony.

The 2017 blockbuster Maragatha Naanayam won audiences over with its unique blend of comedy and fantasy. Continuing that successful journey, the sequel, ‘Maragatha Naanayam 2’, has now officially gone on floors.
Marking the occasion of Maha Shivaratri (February 16, 2026), the film commenced with a grand pooja ceremony in Chennai. Several prominent personalities from the film industry attended the event and extended their wishes.

Actor Karthi gave the inaugural clap, while actor Arya switched on the camera. Director Venkat Prabhu formally initiated the shoot by calling out, “Camera rolling… Action!”

The film is jointly produced by Passion Studios, Thangam TV, RTC Media, Axess Film Factory, and Good Show. Producers Sudhan Sundaram, Manish Singhal, Durgaram Choudhary, Dev, and K.V. Durai are backing the project. The sequel is once again directed by A.R.K. Saravan, who helmed the first installment—adding to fans’ excitement.

Cast:
Aadhi plays the lead role, alongside Priya Bhavani Shankar as the female lead. The ensemble cast also includes Sathyaraj, Nikki Galrani, Munishkanth, Anand Raj, Danny, Arunraja Kamaraj, and Muruganandham in pivotal roles.

Technical Crew:
Music – Dhibu Ninan Thomas
Cinematography – P.V. Shankar
Art Direction – N.K. Rahul
Editing – Thirumalai Rajan R
Dialogues – Rajesh Kannan
Stunts – PC Stunts
Sound Design – Sync Cinema
VFX – Resol FX
Marketing & Promotions – DEC
Public Relations – Suresh Chandra, Abdul A. Nasser, among others.

Since its announcement, ‘Maragatha Naanayam 2’ has generated significant buzz among fans. The team promises a bigger dose of comedy, enhanced magical elements, and an even more engaging cinematic experience compared to the first part.

Shooting is progressing steadily, and further updates about the film are expected to be released soon.

Audiences are eagerly awaiting another magical comedy entertainer on the big screen! 🎬✨