

கொரானா என்னும் கொடிய நோய் கடந்த இரண்டு வருடங்களாக உலகை மிகவும் மோசமான சூழ்நிலைக்கு கொண்டுள்ளது. அதிலும் இந்த இரண்டாவது அலை இந்தியாவை மிக மோசமாக தாக்கி உயிர் இழப்பு மிக அதிக அளவில் உண்டு பண்ணியுள்ளது. இந்த கொரானா கோரதாண்டவம் தமிழ்நாட்டையும் விட்டுவைக்கவில்லை மிகவும் மோசமாக தாக்கி நூற்றுக்கணக்கான உயிர்பலி கொண்டுள்ளது.
இந்த நோய் தாக்குதலில் இருந்து மீட்க சமீபத்தில் முதலமைச்சராக பதவியேற்று கொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் நிதி பற்றாகுறையாக பொதுமக்களிடம் உதவி கோரினார் இதற்க்கு பலர முன்வந்து உதவி வருகிறார்கள்.குறிப்பாக சிநிமாதுரையினரும் உதவி வருகிறார்கள், அந்தவகையில் நகைசுவை நடிகர் சூரி தன் பங்குக்கு தன் மகன் மகளுடன் இணைந்து உதவியுள்ளார்
கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் திரு.சூரி அவர்கள் ரூ.10 லட்சத்துக்கான காசோலையையும், அவரது மகள் வெண்ணிலா – மகன் சர்வான் சார்பில் ரூ.25 ஆயிரம் ரொக்கத்தையும் சட்டமன்ற உறுப்பினர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம் வழங்கினார்.
