Wednesday, November 18
Shadow

தமிழ் சினிமாவில் தடம் பதிக்கும் கல்ட் டிஜிட்டல்! ஒரே நாளில் இரண்டு அறிவிப்புகள்… அடுத்த இலக்கு 8 திரைப்படங்கள்!

தமிழ் சினிமாவில் தடம் பதிக்கும் கல்ட் டிஜிட்டல்! ஒரே நாளில் இரண்டு அறிவிப்புகள்… அடுத்த இலக்கு 8 திரைப்படங்கள்!

இந்தியத் திரைப்படத் தயாரிப்புத் துறையில் பிராந்திய மொழிப் படைப்புகளுக்கு முக்கியத்துவம் அதிகரித்து வரும் நிலையில், பன்மொழித் தயாரிப்பு நிறுவனமான கல்ட் டிஜிட்டல் தனது அடுத்தகட்டப் பயணத்தைத் தமிழில் தீவிரப்படுத்தியுள்ளது. ஒரே நாளில் இரண்டு புதிய தமிழ் படைப்புகளை அறிவித்துள்ள இந்நிறுவனம், திரைப்படங்கள் மட்டுமின்றி வெப் சீரிஸ் தயாரிப்பிலும் தனது கவனத்தை விரிவுபடுத்தி வருகிறது.

சுனில் ஜெயின் மற்றும் ஆதித்யா ஜோஷி இணைந்து நடத்தி வரும் கல்ட் டிஜிட்டல் நிறுவனம், இதுவரை இந்தி, மராத்தி, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு கதைக்களங்களைக் கொண்ட படைப்புகளை உருவாக்கியுள்ளது. அந்த வரிசையில் தற்போது ‘கூடு’ திரைப்படமும், ‘ஆக்டோபஸ்’ வெப் சீரிஸும் நிறுவனத்தின் அடுத்தடுத்த தமிழ் வெளியீடுகளாக அமையவுள்ளன.

கடந்த நவம்பர் 13ஆம் தேதி வெளியான இந்த இரண்டு அறிவிப்புகளும் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. ஜோயல் விஜய் இயக்கத்தில் உருவாகும் ‘கூடு’ திரைப்படத்தை பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் ஸ்கைமூன் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்களுடன் இணைந்து கல்ட் டிஜிட்டல் தயாரிக்கிறது. இப்படம் 2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திரைக்கு வரத் திட்டமிடப்பட்டுள்ளது.

மற்றொரு பக்கம், தமிழ் ஒரிஜினல் வெப் சீரிஸான ‘ஆக்டோபஸ்’ நவம்பர் 27ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதன் மூலம் திரையரங்க வெளியீடுகளுடன் டிஜிட்டல் தளங்களிலும் வலுவான இடத்தைப் பிடிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஒரு மொழியில் மட்டும் சுருங்காத தயாரிப்புப் பயணம்!

கல்ட் டிஜிட்டலின் வளர்ச்சியைப் பொறுத்தவரை, அதன் தயாரிப்புப் பட்டியல் கவனிக்கத்தக்கதாக உள்ளது. ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கிய ‘தகடக் 2’, ‘தோண்டி சாம்ப்யா ஏக் பிரேம் கதா’, தமிழ் வரலாற்றுப் பின்னணியில் உருவான ‘ஆகஸ்ட் 16, 1947’, உன்னி முகுந்தன் நடித்த மலையாளப் படமான ‘கெட்-செட் பேபி’, ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் இயக்குநர் அனந்த் மகாதேவனுடன் இணைந்து உருவாக்கிய ‘புலே’, ‘தேத் பீகா சமீன்’, மராத்தித் திரைப்படமான ‘துஜ்யா அய்லா’ உள்ளிட்ட படைப்புகள் இந்நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகியுள்ளன.

தற்போது இரண்டு முறை தேசிய விருது பெற்ற இயக்குநர் சுஜய் தஹாகே இயக்கத்தில் ‘ரக்தஃபல்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இதனுடன் ‘கூடு’, ‘ஆக்டோபஸ்’ ஆகிய படைப்புகளும் அடுத்தகட்ட வெளியீடுகளுக்குத் தயாராகி வருகின்றன.

மேலும், ‘Save The God’ என்ற குறும்படம் இந்த ஆண்டு கோவாவில் நடைபெறவுள்ள இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வு செய்யப்பட்டிருப்பதும் நிறுவனத்துக்குக் கூடுதல் கவனத்தைப் பெற்றுத் தந்துள்ளது.

இந்தி சினிமாவிலும் புதிய கூட்டணி!

தமிழ் மற்றும் மராத்தி மொழிகளைத் தாண்டி இந்தித் திரைப்படத் தயாரிப்பிலும் கல்ட் டிஜிட்டல் தனது பணிகளை விரிவுபடுத்தியுள்ளது. இயக்குநர் ரவி சங்கர் கௌஷிக் இயக்கத்தில், சுபர்ன் வர்மாவுடன் இணைந்து ‘Aanch’ என்ற இந்தித் திரைப்படத்தைத் தயாரித்து வருகிறது. பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. 2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இப்படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

அடுத்த இலக்கு 6 முதல் 8 திரைப்படங்கள்!

கல்ட் டிஜிட்டலின் எதிர்காலத் திட்டங்கள்தான் தற்போது திரைத்துறையின் கவனத்தை ஈர்க்கின்றன. ஏற்கெனவே செயல்பட்டு வரும் மொழிச் சந்தைகளுடன் குஜராத்தி திரைப்படத் துறையிலும் கால்பதிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக குஜராத்தைச் சேர்ந்த முன்னணி இயக்குநர்களுடன் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன.

மராத்தி, இந்தி, குஜராத்தி, தமிழ், மலையாளம் என ஐந்து மொழிகளில் அடுத்தகட்டமாக ஆறு முதல் எட்டு திரைப்படங்களை உருவாக்குவதற்கான திட்டங்களையும் நிறுவனம் முன்னெடுத்து வருகிறது. ஒவ்வொரு மொழியின் ரசிகர்களுக்கும் ஏற்ற கதைகளைத் தேர்வு செய்து, அந்தந்த மொழிகளைச் சேர்ந்த படைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றுவதே நிறுவனத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது.

இதுகுறித்து தயாரிப்பாளர் ஆதித்யா ஜோஷி கூறுகையில், “அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியத் திரைப்படத் துறையின் வளர்ச்சியைத் தீர்மானிப்பதில் தயாரிப்பாளர்களின் தொழில்முனைவு முக்கியப் பங்கு வகிக்கும். கதை சொல்லும் திறமை மட்டுமின்றி, வணிக ரீதியான புரிதல், பார்வையாளர்களின் ரசனை மற்றும் சரியான கதைகளைத் தேர்ந்தெடுக்கும் திறன் ஆகியவையும் அவசியம்.

கல்ட் டிஜிட்டலில் ஒவ்வொரு படைப்புக்கும் பொருத்தமான கதை, திறமையான படைப்பாளர், சரியான கூட்டாளி என அனைத்தையும் கவனத்தில் கொண்டே திட்டங்களை உருவாக்குகிறோம். பல்வேறு மொழிகளையும், பிராந்தியங்களையும் கடந்து அதிகமான ரசிகர்களைச் சென்றடையக்கூடிய படைப்புகளை உருவாக்குவதே எங்களது இலக்கு” என்றார்.

தற்போது ஐந்து திரைப்படங்கள் மற்றும் ஒரு பிரம்மாண்டமான வெப் சீரிஸ் எனப் பல்வேறு படைப்புகளை முன்னெடுத்து வரும் கல்ட் டிஜிட்டல், அடுத்த சில ஆண்டுகளில் தனது தயாரிப்பு வட்டத்தை மேலும் விரிவுபடுத்தத் தயாராகி வருகிறது.

ஒரே நாளில் வெளியான ‘கூடு’, ‘ஆக்டோபஸ்’ அறிவிப்புகள் வெறும் இரண்டு புதிய படைப்புகளின் அறிமுகமாக மட்டும் பார்க்கப்படவில்லை. தமிழ் சினிமாவில் தொடர்ந்து பயணிக்கவும், தென்னிந்திய மொழிப் படைப்புகளில் தனது பங்களிப்பை அதிகரிக்கவும் கல்ட் டிஜிட்டல் எடுத்துள்ள முக்கியமான நகர்வாகவே பார்க்கப்படுகிறது.

 

Cult Digital Expands Its Tamil Footprint with Two New Projects; Eyes 6–8 Films Across Five Languages!

From feature films to OTT originals, the production house is strengthening its presence in the Indian entertainment industry with an ambitious multilingual content strategy.

Cult Digital, the independent production company steadily expanding its footprint across the Indian entertainment industry, is making significant moves in Tamil cinema. In a major development, the production house announced two Tamil projects on the same day, signalling its growing interest in regional storytelling and its ambitions for the years ahead.

Founded by Sunil Jain and Aditya Joshi, Cult Digital has been building a diverse content portfolio across Hindi, Marathi, Tamil and Malayalam. The company’s latest announcements include Koodu, a Tamil feature film, and Octopus, an original Tamil web series, marking another important step in its expansion.

Announced on November 13, the two projects represent the company’s growing commitment to Tamil content. Koodu, directed by Joel Vijay, is being produced in association with Panorama Studios and Skymoon Entertainment. The film is scheduled for release in early 2027.

Meanwhile, the Tamil original web series Octopus is set to premiere on ZEE5 on November 27. With this project, Cult Digital is also strengthening its presence in the OTT space, expanding beyond theatrical productions.

A Multilingual Vision Backed by Diverse Storytelling

Cult Digital’s journey so far reflects its commitment to exploring stories across different languages and cinematic industries.

Its production credits include Thadak 2, Dhondi Champya – Ek Prem Katha, the Tamil historical drama August 16, 1947, the Malayalam film Get-Set Baby starring Unni Mukundan, Phule, produced in association with Zee Studios and director Ananth Mahadevan, Deth Biga Zameen, and the recently released Marathi film Tujhya Aaila.

The company is also gearing up for several upcoming projects. These include Rakhtaphal, directed by two-time National Award-winning filmmaker Sujay Dahake, along with the Tamil film Koodu and the web series Octopus.

Adding to its growing list of achievements, Cult Digital’s short film Save The God has been selected for screening at this year’s International Film Festival of India (IFFI), scheduled to take place in Goa.

Expanding Beyond Regional Cinema

Cult Digital is also strengthening its presence in Hindi cinema. The company is producing Aanch, directed by Ravi Shankar Kaushik, in association with Subarn Verma. Featuring a multi-actor ensemble cast, the film has completed shooting and is scheduled for release in early 2027.

Six to Eight New Films in the Pipeline

One of the company’s most ambitious plans is its proposed expansion into the Gujarati film industry. Having already established a presence in Hindi, Marathi, Tamil and Malayalam cinema, Cult Digital is now in discussions with leading Gujarati filmmakers to explore new opportunities in the market.

The company is also developing plans to produce six to eight films across Marathi, Hindi, Gujarati, Tamil and Malayalam in its next phase of growth.

Speaking about the company’s vision, filmmaker-entrepreneur and producer Aditya Joshi said, “We believe that over the next five years, producer-entrepreneurs will play a defining role in shaping the future of the Indian film industry. The ability to combine strong storytelling with business acumen, an understanding of audiences and the ability to identify compelling narratives will be crucial.

“At Cult Digital, we are building a new-generation multilingual content company by identifying the right story, the right creative talent and the right partners for every project. Our approach is rooted in collaboration and market-oriented planning. We aim to bring compelling stories and production partners together to create content that can travel across languages, regions and audiences.”

With five films and a major web series currently in various stages of development and production, Cult Digital is positioning itself as an emerging player in India’s multilingual entertainment landscape.

The November 13 announcements of Koodu and Octopus therefore represent more than just two new projects. They signal the company’s growing ambitions in Tamil cinema and its larger vision of building a strong, diverse content production network across India.