தமிழ் சினிமாவில் தடம் பதிக்கும் கல்ட் டிஜிட்டல்! ஒரே நாளில் இரண்டு அறிவிப்புகள்… அடுத்த இலக்கு 8 திரைப்படங்கள்!
தமிழ் சினிமாவில் தடம் பதிக்கும் கல்ட் டிஜிட்டல்! ஒரே நாளில் இரண்டு அறிவிப்புகள்… அடுத்த இலக்கு 8 திரைப்படங்கள்!
இந்தியத் திரைப்படத் தயாரிப்புத் துறையில் பிராந்திய மொழிப் படைப்புகளுக்கு முக்கியத்துவம் அதிகரித்து வரும் நிலையில், பன்மொழித் தயாரிப்பு நிறுவனமான கல்ட் டிஜிட்டல் தனது அடுத்தகட்டப் பயணத்தைத் தமிழில் தீவிரப்படுத்தியுள்ளது. ஒரே நாளில் இரண்டு புதிய தமிழ் படைப்புகளை அறிவித்துள்ள இந்நிறுவனம், திரைப்படங்கள் மட்டுமின்றி வெப் சீரிஸ் தயாரிப்பிலும் தனது கவனத்தை விரிவுபடுத்தி வருகிறது.
சுனில் ஜெயின் மற்றும் ஆதித்யா ஜோஷி இணைந்து நடத்தி வரும் கல்ட் டிஜிட்டல் நிறுவனம், இதுவரை இந்தி, மராத்தி, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு கதைக்களங்களைக் கொண்ட படைப்புகளை உருவாக்கியுள்ளது. அந்த வரிசையில் தற்போது 'கூடு' திரைப்படமும், 'ஆக்டோபஸ்' வெப் சீரிஸும் நிறுவனத்தின் அடுத்தடுத்த தமிழ் வெளியீடுகள...
