Wednesday, February 21
Shadow

கூலி தொழிலாளர்களின் வாழ்கையை மிக யதார்த்தமாக சொல்லும் “அஞ்சுக்கு ஒண்ணு|”

பேரண்ட்ஸ் பிக்சர்ஸ் சார்பில் s.சண்முகம் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அஞ்சுக்கு ஒண்ணு.இத்திரைபடத்தை ஆர்வியார் இயக்கியுள்ளார். கட்டிட வேலை செய்யும் கூலி தொழிலாளர்களின் வாழ்கையை மிக யதார்த்தமாக கூறியுள்ள படம். மேலும் கட்டிட வேலை செய்யும் கூலி தொழிலாளர்கள் எப்படியெல்லாம் வாழலாம், எப்படியெல்லாம் வாழக்கூடாது என்பதை இத்திரைப்படத்தில் மிகவும் எதார்த்தமாக இயக்குநர் ஆர்வியார் கூறியுள்ளார். கட்டிட வேலை செய்யும் ஐந்து இளைஞர்களின் வாழ்கையில் ஒரு பெண் வருகிறாள். அதன் பின் அவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதுதான் கதை.இத்திரைப்படம் இம்மாதம் திரைக்கு வரவிருக்கிறது…

Leave a Reply