Sunday, February 25
Shadow

விஜய் படத்தில் நடிக்க கண்டிஷன் போடும் நயன்தாரா

இன்று கோடம்பாக்கமே மெல்லும் ஒரு செய்தி என்றால் அது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் காதலும் சிபாரிசும் தான் நயன்தாரா எங்கு சென்றாலும் விக்னேஷ் சிவனுக்கு சிபாரிசுடன் தானம் யாரை பார்த்தாலும் அடுத்து விக்னேஷ் சிவனுக்கு வாய்ப்பு என்று கூச்சபடாமல் கேக்குறாராம் அதன் விளைவு விஜயையும் விடவில்லையாம்.

சிவகாசி படத்தில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய நயன்தாரா, வில்லு படத்தில் ஜோடியாக இணைந்து நடித்தார். மீண்டும் இந்த ஜோடி இணையவில்லை. தற்போது பைரவா படத்தில் விஜய் நடித்து வருகிறார். இம்மாதத்துடன் இதன் படப்பிடிப்பு நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. இதையடுத்து அட்லி இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். பெரும் பொருட் செலவில் இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இதற்கான ஸ்கிரிப்ட் பணி நடந்து வரும் நிலையில் ஹீரோயினாக யாரை நடிக்க வைப்பது என்ற ஆலோசனையும் நடக்கிறது. நயன்தாராவை நடிக்க வைத்தால் தமிழ், தெலுங்கு பிஸ்னஸுக்கு பொருத்தமாக இருக்கும், நீண்ட நாட்களுக்கு பிறகு இருவரும் ஜோடி சேர்வதால் எதிர்பார்ப்பு அதிகரிக்கும் என்பதால் நயன்தாராவிடம் கால்ஷீட் பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

டோரா, இமைக்கா நொடிகள் என 2 படங்களில் தற்போது நடித்து வருகிறார் நயன்தாரா. அவரது காதலன் விக்னேஷ் சிவன், சூர்யா நடிக்கும் படத்தை இயக்குகிறார். இப்படத்தில் நயன்தாரா நடிப்பதாகவே முதலில் பேச்சு நிலவியது. பிறகு அந்த வாய்ப்பு கீர்த்தி சுரேஷுக்கு கைமாறியது. சூர்யா படத்தை விக்னேஷ் சிவன் இயக்க நயன்தாரா சிபாரிசு செய்ததாக கூறப்படுகிறது. அதேபோல் விஜய் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவிக்கும் பட்சத்தில் அவர் படத்தை இயக்குவதற்காக விக்னேஷ் சிவனுக்கு வாய்ப்பு தரும்படி சிபாரிசு செய்யக்கூடும் என்று கோலிவுட்டில் பேசப்படுகிறது.

Leave a Reply