Monday, May 25
Shadow

“டார்க் ஜெயன்ட்” முதல் பார்வை வெளியீடு – கமல்ஹாசன் பாராட்டு, எதிர்பார்ப்பை தூண்டும் ஹாரர் திரில்லர்!

“டார்க் ஜெயன்ட்” முதல் பார்வை வெளியீடு – கமல்ஹாசன் பாராட்டு, எதிர்பார்ப்பை தூண்டும் ஹாரர் திரில்லர்!

உலகநாயகன் வெளியிட்ட “டார்க் ஜெயன்ட்” திரைப்படத்தின் முதல் பார்வை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இத்திரைப்படத்தை கே. எஸ். கிஷன் எழுதி இயக்கியுள்ளார். பயோவன் கிரியேஷனிசம் நிறுவனம் சார்பில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் லோகேஸ்வரன் தயாரித்துள்ளார்.

“டார்க் ஜெயன்ட்” திரைப்படத்தில் சோனியா அகர்வால், அயலி மதன், ஜோவிட்டா லிவிங்ஸ்டன், அமுதவாணன், லிவிங்ஸ்டன் மற்றும் இயக்குனர் பாக்கியராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் பாடல்களை கங்கை அமரன் எழுதியுள்ள நிலையில், இசையை விக்னேஷ் ராஜா அமைத்துள்ளார்.

முதல் பார்வையை வெளியிட்ட கமல்ஹாசன், படத்தில் நடித்துள்ள நடிகர்கள் மற்றும் முழு படக்குழுவினரையும் பாராட்டி, தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

ஹாரர் திரில்லர் வகையில் உருவாகியுள்ள “டார்க் ஜெயன்ட்” திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

“Dark Giant” First Look Unveiled – Kamal Haasan Praises Team, Horror Thriller Builds Buzz

The first look of Dark Giant, unveiled by , has received a positive response from fans.

The film is written and directed by K. S. Kishan and produced by retired army officer Lokeshwaran under the banner of Biovan Creationism.

Dark Giant features Sonia Agarwal, Ayali Madhan, Jovita Livingston, Amudhavaanan, Livingston, and filmmaker-actor Bhagyaraj in key roles.

The film’s songs are penned by Gangai Amaran, with music composed by Vignesh Raja.

After releasing the first look, Kamal Haasan appreciated the performances of the cast and extended his best wishes to the entire crew.

Touted as a horror thriller, Dark Giant has completed its shooting and is currently in the post-production stage. The makers have announced that the film will hit theatres soon.