Sunday, June 21
Shadow

தேவராட்டம் திரை விமர்சனம் (ரேட்டிங் 3.5)

இளம் நடிகரான கௌதம் கார்த்திக் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் வேதராட்டம். பல்வேறு கிராமத்து கதை திறமையாக இயக்கிய இயக்குனர் முத்தையா இயக்கத்தில், கே.இ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், ஸ்டுடியோ கிரீன் மற்றும் அபி & அப் பிச்சர்ஸ் சார்பில் வெளியாகியுள்ள இந்த படத்தின் விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.

இந்த படம், அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியில் தொடங்கி, மதுரையில் நடக்கும் கட்ட பஞ்சாயத்து அதை தொடர்ந்து நடக்கும் கொலைகள், என்று மதுரையின் ஒரு இடத்தையும் விடமால் படமாக்கப்பட்டுள்ளது.

மதுரையில் செல்லூர் பகுதியில் வசிக்கும் வெற்றி (கௌதம் கார்த்திக்) ஊரில் எந்த தப்பு நடந்தாலும் முதல் ஆளாக தட்டிக்கேட்கின்றார்.
5 அக்காகளுக்கு கடைசி தம்பியாக இருக்கும் இவரை எல்லோரும் தம்பி என்று பார்க்காமல் தங்கள் மகனாக நினைத்து வளர்க்கின்றனர். இத்துடன் வெற்றியை வழக்கறிஞர் படிப்பை படிக்க வைக்கின்றனர்.

இந்நிலையில், பெண்களை தவறாக படம்பிடிக்கும் ஒருவனை ஒரு பெண் நடுரோட்டில் செருப்பால் அடிக்க, அந்த வீடியோ ட்ரெண்ட் ஆகின்றது. ஆனால், அதை தொடர்ந்து அந்த பெண் கடத்தப்பட்ட பலரால் பலாத்காரம் செய்யப்பட்டு, மிக மோசமான நிலைக்கு வருகின்றார்.

அந்த வழக்கு வெற்றியுடன் வருகிறது. இந்த நாச வேலையை செய்தவன் ஊரில் பெரிய ரவுடியான கொடும்பாவி கணேஷன் (பெப்சி விஜயன்) மகன் தெய்வம்(சந்துரு சஜன்) திடன் உதவி கேட்கிறார். இதனால் பிரச்சினை உருவாக்கிறது.

இந்த பிரச்சினையில் வெற்றிக்கும், தெய்வம் இடையே மோதல் ஏற்பட்டு வெற்றி அவனை நடுரோட்டில் வெட்டி சாய்கிறார், பிறகு கொடும்பாவி கணேசன் வெற்றியை கொலை செய்ய எடுக்கும் முயற்சிகளும், அதை எதிர்த்து வெற்றி எப்படி வெற்றி பெறுகிறார் என்பதே படத்தின் மீது கதை.

கௌதம் கார்த்திக் மதுரை பையன் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தியுள்ளார். முதல் காட்சியிலேயே தப்பு செய்தவர்களை அடித்து பறக்கவிடுவது, மதுரை பலபலக்குது பாடலுக்கு இறங்கி ஆடுவது என கச்சிதமான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்.

மது கடையை மூட போராட்டம், ரத்த தான முகாம் என்று பல சமூகததற்கு நன்மை செய்யும் பணிகளை செய்யும் வழக்கறிஞர் கேரக்டரில் நடித்துள்ள மது (மஞ்சிமா) தனக்கு கொடுக்கப்பட்ட பாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்.

வெற்றியின் மாமாவாக வரும் புலியூரன் (சூரி)யின் காமெடி சில இடங்களில் சிரிக்க வைக்கின்றது.

பசி தெரியாத வளர்க்கனும்னு நினைச்சோம், இப்படி பயம் தெரியாம வளர்ந்துட்ட, என்று தன் தம்பிக்காக பாசத்தை பொழியும் அக்கா பேச்சி (வினோதினி வைத்தியநாதன்), அவருடைய கணவர் போஸ் (போஸ் வெங்கட்) என அனைவருமே நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். படத்தில் சென்டிமெண்டிற்கு பஞ்சமில்லை.

படத்தின் மிகப்பெரும் பலம் ஒளிப்பதிவு மற்றும் இசை, மதுரையை அப்படியே கண்களில் காட்டிய ஒளிப்பதிவு, அதை விட பாடல்கள் பின்னணி இசை என நிவாஸ் பிரசன்னாவின் இசை பட்டையை கிளப்புகின்றது.

கொடும்பாவி கணேஷன் (பெப்சி விஜயன்), மகனுக்காக கரும்புலி செம்புலி குத்து வீடுவீடாக பிச்சை எடுப்பதில் தொடங்கி, மகனுக்காக கட்சி பதவியை தூக்கி எறிவது, மகனுக்காக கோர்டிலேயே கொலை செய்வது போன்ற காட்சிகளில் மிரட்டலாக நடித்துள்ளார்.

மதுரை பளபளக்குது படால் பார்ப்பவர் அனைவரையும் ஆட வைக்கிறது.

திலீபன் சுப்ராயனின் சண்டை காட்சிகளை பார்க்கும் போதும் நம் எலும்பே நொறுங்குவது போன்ற பீல்லிங் உருவாக்கிறது.

படத்தின் பிளஸ்: படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை, எடிட்டிங், சண்டை காட்சிகள்

படத்தின் மைன்ஸ்: வன்முறை காட்சி அதிகமாக இருப்பது.

மொத்தத்தில், இந்த படம் ரசிகர்களை முழு திருத்தி செய்யும் படமாக இருக்கும்.