Tuesday, October 8
Shadow

அமலாபால் கதை தான் தேவி படத்தின் கதையா ? வலைதளங்களில் கேள்வி?

தேவி படம் கடந்த வெள்ளிகிழமை ரிலீஸ் ஆகி மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது இநத படத்தின் இயக்குனர் விஜய் இவருக்கும் அவரது மனைவி அமலாபால் இருவருக்கும் இடையே சில நாட்களுக்கு முன் தான் விவாகரத்து என்று அறிவித்தனர். இந்த சூழ்நிலையில் தான் இந்த படம் வெளியானது.

தேவி படத்தை பார்த்தால் அமலா பாலின் கதை நினைவுக்கு வருவதாக ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

இயக்குனர் ஏ.எல். விஜய்யும், நடிகை அமலா பாலும் காதலித்து திருமணம் செய்து தற்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். அமலா பால் கோலிவுட்டின் முன்னணி ஹீரோ ஒருவரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.

அமலா பாலை பிரிந்த பிறகு விஜய் இயக்கி வெளியாகியுள்ள படம் தேவி. தேவி படத்தில் பிரபுதேவா, தமன்னா, சோனு சூத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகியுள்ளது.

தேவி படத்தை பார்ப்பவர்களுக்கு எல்லாம் தமன்னாவை பார்க்கும்போது அமலா பால் நினைவுக்கு வருகிறாராம். அமலா பாலின் கதையை மையமாக வைத்து தான் விஜய் தேவியை இயக்கியிருப்பார் என்று ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

சமூக வலைதளங்களிலும் அமலா பால், தேவி பற்றி தான் பேச்சாகக் கிடக்கிறது

Leave a Reply