Sunday, November 8
Shadow

தனுஷ் நடிப்பில் கலைபுலி தாணு தயாரிப்பில் வெளியான அசுரன் 100வது நாள்

தத்தளிச்சிக்கிட்டு இருக்கறதா சொல்லப்படும் நம்ம தமிழ் சினிமா வரலாற்றில் 2020 தொடங்கி தக்கனூன்டு நாட்களிலேயே ஒரு படத்தின் 100வது போஸ்டரை பார்ப்பது கோலிவுவாசிகளுக்கு புது ரத்தத்தை ஊறச் செய்யும் என்றே நம்பலாம். அந்த நம்பிக்கையைக் கொடுக்க மெனகெட்ட *கலைப்புலி தாணு, வெற்றி மாறன் & தனுஷுக்கு ஒரு பலத்த கைத்தட்டல் ஒலி பார்சலே… ய்*

கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகளுக்கு முன்னெல்லாம் – அதாவது 90களில் தொடர்ந்து ஒரே தியேட்டரில் நூறு நாட்கள் ஓடிய படங்கள்தான் வெற்றிப் படங்களாகக் கருதப்பட்டுச்சு. பின்னர் அது ஐம்பது நாட்களாகக் குறைஞ்சு போச்சு.

நவீனமயமாகாத அந்த காலத்தில் இதே தமிழ் சினிமாவில் வெள்ளி விழாக்கள் சகஜமாக இருந்தன. வருடத்துக்கு பல படங்கள் வெள்ளி விழா கொண்டாடிய காலம் உண்டு. வெள்ளி விழா என்றால் 25 வாரங்கள் அதாவது 175 நாட்கள். இதற்கு கரகாட்டக்காரன் முதல் சந்திரமுகி வரை பல உதாரணங்கள் உண்டு.

2000 கிட்ஸ் காலத்து நடிகர்களில் பலருக்கும் இந்த வெள்ளி விழா கொண்டாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதே உண்மை. அஜித்திற்கு ‘காதல் கோட்டை’, விஜய்க்கு ‘காதலுக்கு மரியாதை’ ஆகியவை வெள்ளிவிழா படங்கள். விக்ரமின் ‘சேது’, ‘தூள்’ உள்ளிட்ட சில படங்கள் நூறு நாட்களைத்தாண்டிய வெற்றிப் படங்கள். தனுஷுக்கு ‘காதல் கொண்டேன்’, சிம்புவுக்கு ‘மன்மதன்’ இந்த வகை. அதன் பிறகும் சில படங்களுக்கு 100வது நாள் விளம்பரங்கள், போஸ்டர்கள் வருகின்றன. திரை யரங்குகள் பெயர் இல்லாமலோ அல்லது ஒரே ஒரு அரங்கில் ஒரே ஒரு காட்சியுடன் வருபவை அவை. இந்த அசுரனும் அந்த வகைதான் என்றாலும் பவர் ஸ்டார் என்ற அடைமொழியும், கூடவே வாரண்டும் வைத்தபடி உலா வந்த ’லத்திகா’ படம் மாதிரி இல்லை என்பதை சகலரும் உறுதிப்படுத்துவார்கள்.

நண்பர் ஒருவர் அனுப்பி இருக்கும் செய்தியின்படி,’திருட்டு விசிடி, பின்னர் தமிழ் ராக்கர்ஸ் என அச்சுறுத்தல்கள் அதிகரித்த வேளையில் பெரிய நடிகர்கள் நடித்த படங்களை அதிகபட்சம் எத்தனை அரங்குகளில் வெளியிட முடியுமோ அத்தனை அரங்குகளில் வெளியிட்டு முதல் மூன்று நாட்கள் வசூலை அதிகரித்தனர். சென்னையில் இது முன்பே நடந்தாலும் தமிழகத்தின் பிற ஊர்களில் இந்தப் பழக்கம் கிட்டத்தட்ட ரஜினிகாந்த்தின் ‘சிவாஜி’ படத்தில் தொடங்கியது. கிட்டத்தட்ட ஊர்களில் உள்ள அத்தனை அரங்குகளிலும் வெளியானது ‘சிவாஜி’. அப்படி வெளியிட்டால்தான் திருட்டு விசிடியைத் தாண்டி லாபம் பெற முடியுமென்பது அன்றைய நிலை. இன்றும் அதேதான், இப்போது தமிழ் ராக்கர்ஸ். மட்டுமல்லாது அடுத்த வெளிவர வரிசையில் காத்திருக்கும் படங்கள்.

அதனால் வெளியான மறுநாளே வெற்றி விழா கொண்டாடும் காலம் இது. இப்போதெல்லாம் வெளியான வாரக்கடைசியில் வெள்ளி, சனி, ஞாயிறு மூன்று நாட்களும் அரங்குகள் நிறைந்து அடுத்த ஒரு வாரம் முழுமையாக திரையரங்குகளில் கடந்துவிட்டால் அதுவே உண்மையான வெற்றியாக இருக்கிறது.

டாப் லிஸ்ட் ஆக்டர்கள் நடிக்கும் படங்களும் கூட வெளியாகும் திரையரங்குகளின் எண்ணிக்கையில் பிற படங்களில் இருந்து மாறுபடுகின்றனவே தவிர படத்தின் வெற்றி கால அளவு என்பது கடந்த சில வருடங்களாக அதிகப்பட்சம் இரண்டு வாரங்கள் என்பதாகவே இருந்துவருகிறது.

இத்தகைய காலகட்டத்தில் கடந்த பொங்கலன்று ரிலீஸான ‘பேட்ட’, ‘விஸ்வாசம்’ படங்கள். இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களை மகிழ்வித்து பெரிய வெற்றியாகின. பொங்கல் விடுமுறை, இரண்டாம் வார இறுதி முடிந்தால் இந்த அலை ஓயும் என்று திரை பார்வையாளர்கள் நினைத்திருக்க, அதை தவிடு பொடியாகியது பலருக்கும் நினைவிருக்கும்

இந்த பொங்கலுக்கு போன பொங்கல் வைத்த ரஜினி மட்டும் சோலாவாக தர்பார் காட்ட வந்திருக்கும் சூழலில் அவரது மருமவன் தனுஷ் நடிச்ச அசுரன் 100 வது போஸ்டர் சினிமா ஆர்வலர்களை குதூகலிக்கச் செய்கிறது என்பதென்னவோ உண்மை..

*இச்சூழலில் ஒரு எக்ஸ்ட்ரா செதியை சொல்லத் தோணுது*..

அசுரன் படம் ரிலீஸாகும் வெப்சைட்டுகளுக்கு விளம்பரம் கொடுத்து படம் ரீலிஸான நாளிலேயே பேசியபடி பணத்தை அக்கவுண்டில் அனுப்பி இருந்தார் கலைப்புலியார்.. அதை அடுத்து அந்த அசுரன் படம் மாபெரும் வசூலை குவித்த வந்த நிலையில் மேற்படி வெப்சைட் -களுக்கு மேலும் ஒரு அமெளண்டை அனுப்பி மகிழ்ச்சியை பங்கிட்டிருந்தார் தாணு..

அப்படியான தயாரிப்பாளர்கள் இருக்கும் இதே கோலிவுட்டில் படம் சரியா ஓடலை-ன்னா கமிட் செய்த விளம்பரக் காசை வச்சி சாப்பிட்டு வாழ்க்கை ஓட்டுவோரும் இருக்காய்ங்க என்பதுதான் வேதனை-💥