Tuesday, April 21
Shadow

தனுஷ் மற்றும் சிம்புவை இணைக்க வைக்க போகும் இயக்குனர் கிருத்திகா உதயநிதி

காளி படத்தில் விஜய் ஆண்டனி அல்லது தனுஷ் நடிப்பதாக இருந்ததாம். கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி தயாரித்து ஹீரோவாக நடித்துள்ள படம் காளி. 4 ஹீரோயின்கள் உள்ள இந்த படம் நாளை ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் படம் குறித்து கிருத்திகா கூறியதாவது

வணக்கம் சென்னை படத்தை அடுத்து கிரைம் த்ரில்லர் மற்றும் காளி கதையை ரெடி செய்தேன். 2015ம் ஆண்டில் என் நண்பரான தனுஷிடம் காளி கதையை சொன்னேன். அவருக்கு பிடித்துப் போக தானே தயாரிக்கவும் செய்வதாக கூறினார். ஆனால் பல காரணங்களால் அது நடக்கவில்லை

தனுஷிடம் பேசியபோதே அதே படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சிம்புவிடமும் பேச்சுவார்த்தை நடத்தினேன். ஆனால் சில நாட்களில் அனைத்து முயற்சியும் தோல்வியடைந்துவிட்டது.

விஜய் ஆண்டனியை வைத்து காளி படத்தை துவங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த படத்தில் அனைத்து துறைகளிலும் உதவி செய்துள்ளார் விஜய் ஆண்டனி. நடித்ததுடன் இசையமைத்துக் கொடுத்தார், படத்தை தயாரிக்கவும் செய்தார் அவர்.

நான் முதலில் விஜய் ஆண்டனியிடம் த்ரில்லர் கதையை தான் கூறினேன். அவருக்கு அது பிடிக்கவில்லை. மீண்டும் ஒரு சான்ஸ் கொடுங்க வேறு கதை சொல்கிறேன் என்று அவரிடம் கூற அவரே என் வீட்டுக்கு வந்து கதை கேட்டார். காளி கதையை சொன்னதும் அவருக்கு பிடித்துவிட்டது.

காளி ஒரு கமர்ஷியல் பொழுதுபோக்கு படம். சும்மா சொல்லக் கூடாது விஜய் ஆண்டனி அருமையாக நடித்துள்ளார். ஆனால் இதை அவர் ஒப்புக் கொள்ள மாட்டார். இந்த படம் மூலம் நாங்கள் நல்ல நண்பர்களாகிவிட்டோம் என்கிறார் கிருத்திகா.