
நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அசுர வளர்ச்சி பெற நடிகர் தனுஷும் ஒரு முக்கிய காரணம் எனவும், ஆனால் தற்போது அவர்களுக்கு நடுவே பல பிரச்சனைகள் இருப்பதாகவும் சமீப காலமாக முணுமுணுக்கப்பட்டு வந்தது.
தனுஷ் தயாரிப்பில் சில படங்கள் நடித்த சிவகார்த்திகேயன், தற்போது வேறொரு தயாரிப்பு நிறுவனத்திற்கு மட்டுமே படம் நடித்துகொடுப்பதும் இந்த செய்தி பரவியதற்கு ஒரு காரணம்.
இந்நிலையில் தனுஷ்-சிவகார்த்திகேயன் இருவரும் சமீபத்தில் நடந்த நடிகர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர். முதலில் நடிகர் விஜய்க்கு இருபுறமும் அமர்ந்திருந்த இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் சமாதனம் தளபதி விஜய் செய்துவைத்தார் நமக்குள் சண்டை இருக்க கூடாது என்று அறிவுரை சொன்னதாக கூறபடுகிறது அதன் பின்னர் இருவரும் ஒன்றாக அமர்ந்தும் பேசிக்கொண்டனர். கிளம்பும்போது தனுஷ் சிவகார்த்திகேயன் இருவரும் கட்டியணைத்து விடை பெற்று சென்றனர்.
இதனால் இவர்கள் நடுவே எந்த பிரச்னையும் இல்லை என தெளிவாகியுள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் தளபதி விஜய் தான் என்று போராட்டத்துக்கு வந்த ஒரு சிலர் கூறினார்கள்.