Thursday, April 18
Shadow

“தாரள பிரபு” திரைவிமர்சனம் (கலர்புல் காமெடி) Rank 4/5

 

ஒரு காலகட்டத்தில் பார்க்கும் இடமெல்லாம் சிவப்பு முக்கோணம் போட்டு ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் போதும் என்ற விளம்பரம் பார்க்க முடியும் ஆனால் இன்று குழந்தையின்மை வாங்க நாங்க தீர்வு தருகிறோம் என்ற விளம்பரம் தான் அதிகம் அதற்கு காரணம் இன்றைய வாழ்கை முறை எல்லாத்திலும் வேகம் பணத்துக்கு கொடுக்குற முக்கியம் குடும்பதுக்கும் மனைவிக்கும் கொடுப்பதில்லை இதனால் ஏற்படும் மன அழுத்தம் தான் குழந்தையின்மைக்கு முக்கிய காரணம் இதை வலியிருத்தும் ஒரு படமாகதான் இந்த படம் வந்து இருக்கு

ஆம் குழந்தை இல்லாதவருக்கு செயற்கை முறையில் கருத்தரிக்கும் முறையை பற்றி மிகவும் நகைசுவையாக சொல்லி இருக்கும் படம் தான் இந்த தாரளபிரபு படம் ஹிந்தி ரீமேக் என்றாலும் தமிழ் படத்துக்கு தேவையான ஒரு கலவையுடன் மிக அருமையாக கலகலவென கலர்புல்லா கொடுத்து இருக்கும் படம்

இந்த படத்தில் ஹாரிஸ் கல்யான், தன்யா ஹோப், விவேக், சச்சு, மற்றும் பலர் நடிப்பில் பரத் சங்கர் இசையில் செல்வகுமார் ஒளிப்பதிவில் அறிமுக இயக்குனர் கிருஷ்ணா மாரிமுத்து இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் தாரளபிரபு

தாரள பிரபு கதையை பார்ப்போம் ஹாரிஸ் கல்யான் ஒரு கால்பந்து விளையாட்டு வீரர் இதன் மூலம் எப்படியாவது ஸ்போட்ஸ் கோட்ட மூலம் வேலை வாங்கி விடவேண்டும் இருக்கும் ஒரு இளைஞன் விவேக் செயற்கை மூலம் கருத்தரிக்கும் மருத்துவர் .விவேக் உயிர் அணுக்களை தானம் பண்ண சொல்லுகிறார் விவேக் இதை கேட்டு ஷாக் ஆகும் ஹாரிஸ் கல்யான் ஆனால் ஒரு கட்டத்தில் ஒரு சில முக்கிய காரணங்களால் சரி கொடுப்போம் நம்மால் பலருக்கு நன்மை ஏற்படும் என்பதால் கொடுக்கிறார். இதன் பின் விளைவு தான் மீதிகதை இவரின் காதலிக்கு தெரிய வர இதனால் ஏற்படும் பிரச்சனைகளை எப்படி சந்திக்கிறார் ஹாரிஸ் என்பது தான் கதை இதை மிக அழகாக இயக்குனர் சொல்லி இருக்கும் படம்

படம் ஆரம்பம் முதல் இறுதிவரை அரங்கம் அதிரும் நகைச்சுவை காட்சிகள் தான் படத்தின் முக்கிய பங்கு என்றால் அது விவேக் தான் காட்சிக்கு காட்சி நம்மை சிரிக்க வைக்குறார் நீண்ட இடைவெளிக்கு பின் விவேக் நம்மை மிகவும் கவர்ந்து உள்ளார் என்று சொன்னால் மிகையாகது அந்த அளவுக்கு ஒரு நகைச்சுவையை கொடுத்து இருக்கிறார் அதற்கு ஈடாக ஹாரிஸ் நடித்துள்ளார்.

ஹாரிஸ் கல்யான் தமிழ் சினிமாவில் நிச்சயம் ஒரு நிரந்த இடத்தை இந்த படம் மூலம் தக்கவைத்து கொள்வார் காரணம் இந்த படம் மூலம் அனைத்து நவரசங்களையும் வெளிபடுத்தி நடித்யுள்ளார். விவேக் எந்த அளவுக்கு படத்துக்கு பலமோ அதே அளவுக்கு ஹாரிஸ் தன் நடிப்பை மூலம் படத்தின் வெற்றிக்கு உழைத்துள்ளார்.

நாயகி தன்யா ஹோப் அழகு மட்டும் இல்லை நடிப்பிலும் சரி வாவ் என்று நம்மை கவருகிறார். தமிழுக்கு மிக சிறந்த ஒரு தமிழ் பேசும் நடிகை கிடைத்துள்ளார் நிச்சயம் விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் வளம் வருவார் .

அதே போல படத்தில் நடித்துள்ள அனைத்து கதாபாத்திரங்களும் மிகவும் சிறப்பாக நடித்து கதைக்கும் இயக்குனருக்கும் பலம் சேர்த்துள்ளனர் .இந்த விடுமுறைக்கு  அனைவரும் பார்க்கும் ஒரு படமாக அமைந்துள்ளது.

படத்தின் முக்கிய பங்கு இயக்குனர் நடிகர்கள் மற்றும் திரைகதை ஒரு பக்கம் இருக்க ஒளிப்பதிவும் பின்னணி இசையும் மிக பெரிய பலம் புதுவித காட்சியமைப்புகள் ஓவியம் போல ஒவ்வொரு காட்சிகளும் ஒளிப்பதிவாளர் கொடுத்துள்ளார் அதேபோல இசையும் பின்னணி இசையும் நம்மை ரசிக்க வைக்கிறது

மொத்தத்தில் நீங்கள் தாரளமாக பணம் கொடுத்து பார்க்கும் ஒரு படமாக இருக்கும்.

மொத்தத்தில் தாரளபிரபு நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்குறான்