Sunday, December 8
Shadow

கடலோர கவிதைகள் ரேகா மகனாக யோகிபாபு

பாரதிராஜாவின் கடலோர கவிதை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ரேகா . இவர் ,1990 – களில் தமிழ்,மலையாள முன்னணி கதா நாயகர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஜோடியாக நடித்து, பிரபல கதாநாயகிகள் பட்டியலில் இருந்தார். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வரும் இவர், தற்போது அம்மா,அக்காள் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் தர்மபிரபு படத்தில் அவருக்கு அம்மாவாக ரேகா நடித்து இருக்கிறார். யமன் மற்றும் யாமலோக பின்னணி கொண்ட கதை இது. ஜனனி அய்யர், ராதாரவி, ரமேஷ் திலக், போஸ் வெங்கட், மனோபாலா,மொட்டை ராஜேந்திரன், கும்கி அஸ்வின், மாஸ்டர் கணேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

ஒரு பாடலுக்கு மேக்னா நாயுடு கவர்ச்சி நடனம் ஆடியிருக்கிறார். அழகம்பெருமாள் வில்லனாக நடித்துள்ளார். யுகபாரதி எழுதிய பாடல்களுக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்திருக்கிறார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். கதை, திரைக்கதை எழுதி டைரக்டு செய்திருப்பவர் முத்து குமரன்.

யோகிபாபுவுடன் ரேகா மற்றும் படத்தில் இடம் பெரும் நடிகர் நடிகைகள் நடித்த காட்சிகள், பிரம்மாண்டமாக அமைக்க பட்டிருந்த யாமலோகம் அரங்கில் படமாக்கப்பட்டது. ஏ. வி. எம் . ஸ்டூடியோ,மற்றும் சென்னை, பொள்ளாச்சி சுற்றுவட்டரங்களில் வளர்ந்துள்ள இப்படம் மே மாதம் திரைக்கு வருகிறது.