2016-ஆம் ஆண்டு ‘லொள்ளு சபா’ இயக்குனர் ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் மற்றும் அஞ்சல் சிங் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் தில்லுக்கு துட்டு. தற்போது இதன் இரண்டாம் பாகத்தை ராம்பாலாவே இயக்கியுள்ளார். இதில் சந்தானத்துக்கு ஜோடியாக ஸ்ரீதா சிவதாஸ் நடித்திருக்கிறார்.

சந்தானம் ஹீரோவாக ஜெயித்தே தீர வேண்டும் என்று போராடி வருகின்றார். அவரின் போராட்டத்திற்கு கொஞ்சம் ஆறுதல் கொடுத்தது தில்லுக்கு துட்டு படத்தின் வெற்றி தான். அதை தொடர்ந்து அவர் நடித்த படம் பெரிய தோல்வியை சந்திக்க, தற்போது மீண்டும் தன் ஹிட் கூட்டணியுடன் இணைந்து தில்லுக்கு துட்டு-2-வை கொடுத்துள்ளார்,இதில் இந்த கூட்டணி மிக பெரிய வெற்றியை இந்த படம் தரும் என்பதில் ஐயமில்லை இந்த படத்தின் கதையை இங்கே பார்க்கலாம்.

சந்தானம் தன் மாமா மொட்டை ராஜேந்திரனுடன் எப்போதும் குடித்து கலாட்டா செய்து வருகிறார். அந்த ஏரியாவில் இரவு நேரத்தில் யாரையும் தூங்க கூட விடாமல் கலாய்த்து கலாட்டா செய்து வருகிறார்.

இந்நிலையில் மாயா (ஹீரோயின்) என்ற டாக்டரை பார்த்து யார் காதலை சொன்னாலும் உடனே பேய் வந்து அவர்களை அடித்து விடுகின்றது. அப்படித்தான் ஒரு மாயாவுடன் பணிபுரியும் ஒரு டாக்டர் அவரிடம் காதலை சொல்லி பேயிடம் அடி வாங்குகிறார்.

அடி வாங்கிய அந்த டாக்டர் சந்தானம் ஏரியா என்பதால் அந்த பெண்ணிடம் சந்தானத்தை கோர்த்துவிட்டு, அவரை மாயாவை காதலிக்க வைக்கின்றனர்.(ஏனெனில் அவரையும் சந்தானம் மிகவும் டார்ச்சர் செய்துள்ளார்).

சந்தானத்தையும் அந்த பேய் தாக்க, பிறகு தான் தெரிகிறது, மாயாவின் தந்தை ஒரு சூனியக்காரர், அவர் வைத்த சூனியம் இது என்பது. சந்தானம் எப்படியாவது காதலியை கரம் பிடிக்க கேரளா செல்ல, அதன் பின் தான் தெரிகின்றது அது சூனியம் இல்லை, ஒரு பேயின் பிடியில் மாயா இருக்கிறார் என, அதை தொடர்ந்து அந்த பேயை விரட்ட நடக்கும் காமெடி கச்சேரி தான் இந்த தில்லுக்கு துட்டு 2.

சந்தானம் இஸ் பேக் என்றே சொல்லலாம், படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை தன் ஒன் லைன் காமெடியில் கலக்கி எடுத்துள்ளார். அதிலும் மொட்டை ராஜேந்திரனை கலாய்க்கும் இடம், ஏரியா மக்களை டார்ச்சர் செய்யும் விதம், பேய்களை டீல் செய்வது என இனி ஹீரோவாக நடித்தால் தில்லுக்கு துட்டு சீரிஸ் மட்டும் நடியுங்கள் என்று சொல்ல வைக்கின்றது.

மொட்டை ராஜேந்திரன் இந்த படத்திற்கு பிறகு இன்னும் ஒரு படி மேலே சென்று விடுவார். அதிலும் பேய் பங்களாவிற்கு சென்ற பிறகு கிஸ் மீ பாடலை பேயிடம் பாடுவது செம்ம ரகளை, அதேபோல் மலையாளியாக வரும் குஞ்சுக்குட்டன், ஊர்வசி என கிளைமேக்ஸ் சிரிக்க வைத்து வயிறே வலிக்க வைத்து விடுவார்கள்.

படத்தின் மிகப்பெரும் பலமே பேயை கலாய்ப்பது தான். ஆனால், சந்தானம் ஒவ்வொருவரையும் பேய் மாதிரி கலாய்த்துள்ளார், கார்பண்டரை அழைத்து வந்து நட்டு போட்டனா பயமுறுத்த முடியாது என பேயிடமே கவுண்டர் கொடுப்பது, பேயை பார்த்து முகத்தை மூடி செல்வது என செம்ம கலாட்டா தான்.

முந்தைய பாகத்தில் லவ் தான் மைனஸ் பாயிண்ட், ஆனால், இதில் காதலை கம்மி செய்து கலாய்யை அதிகப்படுத்தியது சூப்பர். பின்னணி இசையும் பாடல்களும் படத்திற்கு ஒரு தடையாகவே உள்ளன.

கிளைமேக்ஸ் 20 நிமிடம் அந்த இருட்டிலும் ஒளிப்பதிவு துல்லியம்.

பிளஸ்

படத்தின் ஒன் லைன் பன்ச் தான், என்ன ஆசிரமத்துக்குள்ள ஆடு மேய்க்கிற, 10 நிமிஷம் வர ப்ரியாணி கடைக்கு 10 வருஷம் ஏன் வந்தனு சந்தானம் அனைத்து பாலிலும் சிக்ஸர் தான்.

படத்தின் கான்செப்ட், பேயை கலாய்ப்பது, அதிலும் பேய் பங்களாவிற்குள் சென்ற பிறகு சிரிப்பு சரவெடி.

மொத்தத்தில் தில்லுக்கு துட்டு 3 எப்போது ஆரம்பம் என கேட்க வைக்கிறது இந்த தில்லுக்கு துட்டு 2, நான் ஸ்டாப் காமெடி கலாட்டா. Rank 4/5

Related