
வருகிற டிசம்பர் 29 அன்று வெளிவரவிருக்கும் படம் ‘துருவங்கள் 16’ . இப்படத்தைக் கார்த்திக் நரேன் என்கிற 21 வயது இளைஞர் இயக்கியிருக்கிறார். ரகுமான் பிரதான பாத்திரம் ஏற்று நடித்துள்ளார்.இப்படத்தை ட்ரீம் பேக்டரியுடன் இணைந்து வீனஸ் இன்போடெய்ன்மெண்ட் வெளியிடுகிறார்.மற்ற அனைவரும் புது முகங்களே
ஏன் இயக்குனர் ஒளிபதிவாளர் இசையமைப்பாளர் இப்படி அனைவரும் புதுசு இவர்கள் அனைவரும் புதுசு போல படத்தின் கதையும் திரைக்கதையும் புதுசு சாவல் விடலாம் இது ஒரு புது சினிமா என்று மிக சிறந்த திரை கதை மிக சிறந்த ஒளிப்பதிவு மிக சிறந்த பின்னணி இசை படத்தில் பாடல்கள் இல்லை தேவை இல்லாத கற்பனை காதல் இல்லை அசிங்கமான இரட்டை அர்த்தங்கள் வசனங்கள் இல்லை முதல் காட்சியில் இருந்து இறுதி காட்சி வரை அதாவது அடுத்து என்ன என்று யூகிக்க முடியாத அளவுக்கு திரைக்கதை
அண்மைக்காலமாக தமிழ்த் திரையுலகில் ‘துருவங்கள் 16 ‘ படம் பேசப்பட்டு வருகிறது. முன் படத்தில் திரைக்கதையின்படி காட்சிகள் முன்னே பின்னே மாற்றி கண்ணாமூச்சி காட்டி விறுவிறுப்பூட்டும் திரையீட்டுக் காட்சியில் படத்தைப் பார்த்த பல விஐபிக்களும் படத்தைப் புகழ்கிறார்கள். இயக்குநரைப் பாராட்டுகிறார்கள். படம் பார்த்த பலரும் படத்தின் ஊகிக்க முடியாத சவாலான திரைக்கதையை வியந்து பாராட்டுகிறார்கள் சமீபத்தில் இந்த படத்தை பார்த்த இசை புயல் A.R.ரகுமான் இந்த படத்தை மிகவும் பாராட்டினார் சமீபத்தில் இப்படி ஒரு சிறந்த படத்தை நான் பார்த்ததில்லை என்று மிகவும் பாராட்டினார். இந்த வருடத்தில் வந்த படங்களில் மிக சிறந்த படங்களில் இதுவும் ஒன்று இந்த மாதிரியான சிறந்த படங்களை ஊக்கிப்பது நம் கடமை இதே போல் படங்கள் வந்தால் நிச்சயம் ஹாலிவுட் நம் கோலிவுட் மீது படை எடுக்கும் என்பதில் எந்த வித மாற்று கருத்து இல்லை .
ரகுமான் தான் நமக்கு இந்த படத்தில் தெரிந்த நட்சத்திரம் வேறு யாரும் இல்லை எல்லோரும் புதுசு என்றாலும் எல்லோரும் மிக சிறந்த நடிகர்கள் என்று தான் சொல்லணும். தமிழ் சினிமாவில் ரகுமான் பல வருடங்களாக பல படங்கள் நடித்து இருந்தாலும் அவர் நடித்த படங்களில் இது தான் சிறந்த படம் இது போல் வடம் அவருக்கு கிடைக்குமா என்பதும் கேள்வி குறி
மொத்தத்தில் துருவங்கள் 16 தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரம் Rank 5/4.5
