Monday, June 22
Shadow

மரணத்திலும் வெற்றி கண்ட நாயகன்


சுஷாந்த் கதாநாயகனாக கடைசியாக நடித்த ‘தில் பேச்ஷாரா’ படம் கடந்த மே மாதமே, அதாவது சுஷாந்த்தின் மரணத்திற்கு முன்பாகவே வெளியாகியிருக்கவேண்டும். ஆனால் கோவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக பல நாடுகளிலும் திரையரங்குகள் மூடப்பட்டதால், படம் வெளியாவது தாமதமானது.

இதோ அவரின் மரணத்திற்குப்பின் ஓடிடி எனப்படும் இணையவெளியில் விரைவில் வெளியாகவிருக்கிறது இந்த திரைப்படம்.
படம் வெளியாவதற்கு முன்பாக வெள்ளோட்டமாக விடப்பட்ட ட்ரெய்லர், வெளியான சில நாட்களிலேய 6 கோடியே 20 லட்சம் முறை…. அதாவது 62 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு கோடி விருப்பங்களை (லைக்ஸ்) பெற்றுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இந்தப் படத்தின் பாடல் ஒன்று வெளியிடப்பட்டு 11 மணி நேரத்தில் ஒரு கோடியே 20 லட்சம் முறை பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது.
ஒரு திரைப்படத்தின் கதாநாயக பாத்திரத்தில் நடித்த நடிகர் உயிருடன் இல்லாதபோதும்… ரசிகர்கள் இந்தப் படத்தை பார்ப்பதில் இவ்வளவு ஆர்வம் காட்டிவருகிறார்கள்.
இது திரையுலகில் மிக முக்கியமான ஒரு நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
ஒரு கதாநாயகன் தற்கொலை செய்துகொண்ட நிலையில்…. அவர் நடித்து வெளியான திரைப்படம் வெற்றியைப் பெற்ற சம்பவம், நமது தமிழ் சினிமாவிலும் நடந்துள்ளது.
——-
அப்போது வளர்ந்துவரும் நட்சத்திரங்களாக இருந்த அஜய்- ஷனம் ஷெட்டி ஜோடியுடன் பார்த்திபன் உள்ளிட்டவர்கள் நடித்த திகில் படம் ‘அம்புலி’.
2012-ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் முப்பரிமாண (3-டி) தொழில்நுட்பத்தில் மிகுந்த பாராட்டை ரசிகர்களிடம் பெற்றதுடன், நல்ல வசூலையும் கண்டு, பெரும் வெற்றிப்படமாகவும் அமைந்தது.
ஆனால்… இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே கதாநாயகன் அஜய் தற்கொலை செய்துகொண்டார். ‘இந்தப் படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த ஷனம் ஷெட்டி மீது படப்பிடிப்பு நடந்ந்துகொண்டிருந்தபோது ஒருதலைக் காதல்கொண்டார் அஜய். அந்தக் காதல் தோல்வியடைந்ததால் பெங்களூருவில் விடுதி அறை ஒன்றில், தற்கொலை செய்துகொண்டார்.
(அந்தப் பட நாயகி ஷனம் ஷெட்டி… இப்போது பிக்பாஸ் மூலம் பிரபலமாகி, சக பிக்பாஸ் போட்டியாளர் தர்ஷன் மீது காதல் கொண்டு, பின் காதல் முறிந்து.. சர்ச்சையக் கிளப்பிய ஷனம் ஷெட்டிதான்)