
அடூர் கோபாலகிருஷ்ணன் கேரளத்தை சேர்ந்த ஒரு உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர். 1972ஆம் ஆண்டில் சுயம்வரம் என்ற தன்னுடைய முதல் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் புகழ்பெற்றார். இவருடைய திரைப்படங்கள் அனைத்தும் உலக திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு மிக்க புகழ்பெற்றவை. உலக திரைப்பட விமர்சனப் பரிசினை, ஐந்து முறை இவருடைய திரைப்படங்கள் தொடர்ந்து பெற்றன.
இவருடைய கலைப் பணிக்காக 2004ஆம் ஆண்டிற்கான தாதாசாஹெப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தலைசிறந்த விருதுகளான பத்மஸ்ரீ விருது 1983ஆம் ஆண்டிலும் பத்ம விபூசன் விருது 2006 இலும் இவருக்கு வழங்கப்பட்டன.
இவர் திரைப்படங்கள்: நிழல்குத்து, கதாபுருஷன், விதேயன், மதிலுகள், அனந்தரம், முகாமுகம், எலிப்பத்தாயம், கொடியெட்டம், சுயம்வரம்