
6 மொழிகளில் உருவாகும் பிரம்மாண்ட த்ரில்லர்… “சிலந்தி – 2” மூலம் மீண்டும் அதிர வைக்கும் இயக்குநர் ஆதிராஜன்!
தமிழ் சினிமாவில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை முழுமையாக பயன்படுத்தி புதிய முயற்சியாக வெளிவந்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் “சிலந்தி”. அந்த வெற்றிப்படத்தின் தொடர்ச்சியாக தற்போது “சிலந்தி – 2” என்ற பெயரில் இன்னும் பிரம்மாண்டமான அளவில் இரண்டாம் பாகம் உருவாகிறது.
ஜி கம்பெனி சார்பில் தயாரிப்பாளர் சங்கர் பழனிச்சாமி தயாரிக்க, முதல் பாகத்தை இயக்கிய ஆதிராஜனே இந்த படத்தையும் எழுதி இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் மற்றும் பெங்காலி என மொத்தம் 6 மொழிகளில் உருவாகும் இப்படம், மிகப்பெரிய பட்ஜெட்டில் அதிரடி த்ரில்லராக உருவாக இருப்பது கவனம் ஈர்க்கிறது.
தமிழ், தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் தனது திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வரும் நடிகை மாளவிகா மேனன், இந்த படத்தில் இதுவரை நடித்திராத முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் பல மொழிகளில் பிரபலமான முன்னணி நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இந்த படத்தின் மற்றொரு சிறப்பம்சமாக, கம்போடியா மற்றும் வியட்நாம் போன்ற வெளிநாடுகளில் முக்கிய கட்ட படப்பிடிப்புகள் நடைபெறவுள்ளது. தொழில்நுட்ப ரீதியாகவும் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டுள்ள இப்படத்தில், சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெறவுள்ளன. “காந்தாரா” போன்ற மர்மத் தன்மையும், அதிரடி காட்சிகளும் கலந்த புதிய அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும் வகையில் படம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், இயக்குநர் ஆதிராஜன் இயக்கும் ஐந்தாவது திரைப்படமாக “சிலந்தி – 2” உருவாகுவது குறிப்பிடத்தக்கது. புதுமையான கதைக்களம், சர்வதேச தரத்திலான தொழில்நுட்பம் மற்றும் பல மொழி வெளியீடு ஆகிய அம்சங்களால், இந்த படம் இந்திய சினிமா ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

Director Athirajan Returns with a Grand Pan-Indian Thriller “Silandhi 2” in 6 Languages!
The film “Silandhi”, which created a sensation as Tamil cinema’s first fully digital feature film, earned widespread appreciation for its innovative storytelling and technical brilliance. Following the success of the first installment, the makers are now gearing up for a much bigger and more ambitious sequel titled “Silandhi 2.”
Produced by Shankar Palanichamy under the banner of G Company, the sequel will once again be written and directed by Athirajan, who helmed the original film. The movie is being planned on a lavish scale as an intense thriller and will release in six languages — Tamil, Telugu, Hindi, Kannada, Malayalam, and Bengali.
Actress Malavika Menon, who has been making waves in Tamil, Telugu, and Malayalam cinema with her impressive performances, will be seen in a completely different and challenging role in this film. Discussions are also underway with several leading actors from multiple film industries to play pivotal characters.
One of the major highlights of “Silandhi 2” is its extensive international schedule, with important portions of the shoot set to take place in Cambodia and Vietnam. The film is also expected to be a visual spectacle, featuring more than 30 minutes of high-end graphics sequences. The makers reveal that the movie will blend mystery, mythology, and thrilling elements in a style reminiscent of films like “Kantara,” promising a unique cinematic experience for audiences.
Interestingly, “Silandhi 2” marks the fifth directorial venture of Athirajan. With its large-scale production, advanced technology, international locations, and multi-language release, the film has already begun creating strong buzz among cinema lovers across India.
